Pages

Thursday, December 3, 2009

சென்னை கூவத்தை சீர் அமைக்க சில கோடிகள்?

சென்னையில் கூவம் மற்றும் இதர நதிகளை சீரமைக்க, துணை முதல்வர் தலைமையில், "சென்னை நதிநீர் ஆணையம்' என்ற அமைப்பை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூவம் ஆற்றை சீரமைத் தல், வானூர்தி தொழிற் பூங்கா மற்றும் நிதி நகரம் ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாக, துணை முதல் வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சிங்கப்பூர் சென்றிருந்தனர்.


சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்த விவரங் களை, முதல்வர் கருணாநிதியிடம் துணை முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகள், அவற் றை எவ்வாறு களைவது, சிங்கப்பூர் நதியைப் போல கூவத்தை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் விளக்கினார். கூவம் உற்பத்தியாகும் இடமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியில் இருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை மொத்தம் 65 கி.மீ., நீளத்துக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும், முதல்வரிடம் துணை முதல்வர் விளக்கினார்.


கூவம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற நதிகளின் சீரமைப்புத் திட்டங்களை செயல்படுத்த, முதல் கட்டமாக, "சென்னை நதிநீர் ஆணையம்' என்ற தனி அமைப்பை, துணை முதல் வர் தலைமையில் ஏற் படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பில் குடிசை மாற்று வாரிய அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப் பட்ட துறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பர். உடனே சீரமைப் புப் பணிகளை துவக்க முதல்வர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment