Pages

Thursday, December 3, 2009

இந்தோனேசியா எல்லை பகுதியில் அத்து மீறி நுழைந்த இலங்கை ராணுவ படைகள் ?

இலங்கையில் இருந்து தமிழர்கள் சிலர் கப்பல் மூலம் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முயன்றனர். அவர்களை இந்தோனேசிய படைகள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி உள்ளன. இந்த நிலையில் இந்த கப்பலை 25 மர்ம படகுகள் திடீரென சுற்றி வளைத்தன. அந்த படகில் இருந்தவர்கள் ராணுவ உடை அணிந்து இருந்தனர்.

அவர்கள் கறுப்பு நிற பை ஒன்றை கப்பலுக்குள் போட முயன்றனர். கப்பலில் இருந்தவர்கள் அந்த பையை தடுத்து அவர்கள் படகிலேயே விழ செய்தனர்.

25 படகுகளையும் பார்த்ததும் கப்பலில் இருந்தவர்கள் பயத்தினால் சத்தம் போட்டு கதறினார்கள். இதனால் படகுகள் அங்கிருந்து விலகி சென்றன. 500 மீட்டர் தூரத்தில் மர்ம கப்பல் ஒன்று நிற்கிறது. 25 படகுகளும் அந்த கப்பலை நோக்கி சென்று அங்கேயே நிற்கின்றன.

படகில் வந்தவர்கள் சிங்கள ராணுவ வீரர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அகதி கப்பல்களில் இருப்பவர்களில் விடுதலைப்புலிகளும் இருக்கலாம் எனவே அவர்களை பிடிக்கும் நோக்கத்துடன் சிங்கள ராணுவத்தினர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கப்பலில் இருக்கும் தமிழர்கள் இது பற்றி பெரிதும் அச்சம் தெரிவித்து பல்வேறு இடங்களுக்கும் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment