'ஆபரேஷன் ரக்ஷக் - 2009'என்ற பெயரில் 14 கடலோர மாவட்டங்களில் நடந்த அதிரடி சோதனையில், தீவிரவாதிகள் வேடத்தில் வந்த 50 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், மும்பையில் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடலோர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருக்கும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சில மாதங்களுக்கு முன் 'ஆபரேஷன் பேரிகார்டு' என்ற பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவது போல ஒத்திகை நடத்தப்பட்டது. இதேபோல், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு வரை,'ஆபரேஷன் ரக்ஷக்- 2009' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
அதன்படி, கன்னியாகுமரி முதல் சென்னை வரை 14 கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். டிஜிபி ஜெயின், சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தலைமையில் சோதனைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் ரவிக்குமார், சேஷசாயி, சக்திவேல் மற்றும் 12 துணை கமிஷனர்கள் மற்றும் 11 ஆயிரம் போலீசார் விடிய விடிய கொட்டும் மழையில் சோதனை நடத்தினர். இதற்காக, அவசர கால செயல்பாட்டு மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
மாநகர போலீஸ், கடலோர காவல்படை, கப்பல் படை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, மாநகர போக்குவரத்துத்துறை மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒத்திகை நடத்தப்பட்டது.
நேற்று காலை 9 மணிக்கு, துறைமுகத்துக்குள் ஒரு படகில் நுழைய முயன்ற 6 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர். அவர்கள் அனைவரும் ஏகே 47 ரக துப்பாக்கி வைத்திருந்தனர். அவர்களுடன் போலீசார் கடலுக்குள் 'சண்டையிட்டு' பிடித்தனர். பிடிபட்ட தகவல்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். .
துறைமுகத்தில் 7 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மீன்பிடி துறைமுகம், சிட்டி சென்டர், ஸ்பென்சர் ஆகிய இடங்களில் தலா இருவர், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என்று நகர் முழுவதும் ஊடுருவிய 17 பேரை போலீசார் முன் கூட்டியே பிடித்தனர்.
இதேபோல், தூத்துக்குடி, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 33 பேர் ஊடுருவினர். அவர்களையும் போலீசார் முன் கூட்டியே பிடித்தனர். அவர்கள் அனைவருமே பையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment