Pages

Thursday, December 3, 2009

பிரபாகரனின் பெற்றோரிடம் பொன்சேகா ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நிறுத்தப்படுகிறார்.

சரத்பொன்சேகா நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு பிரபாகரன் பெற்றோர் உள்பட யார் ஆதரித்தாலும் வரவேற்பேன் என்று கூறியுள்ளார்.

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி ஆகியோர் இலங்கையில் சண்டை முடிந்து தமிழர்கள் சிங்கள படை முகாமுக்குள் வந்த போது அவர்களோடு இவர்களும் சேர்ந்து வந்தனர்.

சண்டை முடிந்து 10 நாட்களுக்கு பிறகு மே 28-ந் தேதி இருவரும் அங்குள்ள முகாம் ஒன்றில் இருப்பதை ராணுவம் கண்டு பிடித்தது.

உடனே அவர்கள் இரு வரையும் விடுதலைப்புலிகளை அடைத்து வைத்துள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். அவர்களை கடுமையாக சித்ரவதை செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சரத் பொன்சேகா இந்த கருத்தை கூறி இருக்கிறார்.

இதற்கு ராஜபக்சே தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பொன்சேகா அரசியல் ஆதாயத்துக்காக விடு தலைப்புலிகளிடம் சவாரி செய்ய தயாராகி விட்டார். அவர் தேசிய பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் சம ரசத்துக்கு தயாராகி விட்டார் என்றனர்.

விடுதலைப்புலி தளபதியாக இருந்த கருணாவை ராஜபக்சே தனது ஆதரவாளராக மாற்றி மந்திரி பதவியும் கொடுத்து உள்ளார். அதே போல பிரபாகரனின் பெற்றோரிடம் பொன்சேகா ஆதரவு கேட்பதில் என்ன தவறு என்று ராஜபக்சே ஆதரவாளர் குணசேகராவிடம் கேட்டதற்கு பிரபாகரன் பெற்றோருக்கும் கருணாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment