பொருள் சேவை வரியின் தொகை சுமார் $2 மில்லியன் என்று நம்பப்படுகிறது. இதுதான் ஆகப் பெரிய ஜிஎஸ்டி மோசடி என்றும் குறிப்பிடப்படுள்ளது.
லாலாசிஸ், லக்கெம் ஆகிய வர்த்தக நிறுவனங்களின் இயக்குனரான மகேஷ், மின்ன¬யல் மற்றும் மின் அணுவியல் தொடர்பான மற்றொரு வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
மகேஷ் 2004 ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை குறைவான போலி ஜிஎஸ்டி வரிக் கணக்கைச் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றம் அறிந்தது.
அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $10,000 வரை அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேலும் ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் அவர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தின் மூன்று மடங்கை அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப் படலாம்.
மகேஷ் இப்போது $200,000 பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரது பாஸ்போட்டை நீதிமன்றம் கைப்பற்றியுள்ளது.
வழக்கு ஜனவரி 8ம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.
முன்னாள் மன¬தவள அதிகாரி மேல் குற்றச்சாட்டு
கள்ளத்தனமாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியவருக்கு எதிராக விசாரணை செய்யாமல் இருக்க $3,000 லஞ்சமாகப் பெற்ற முன்னாள் மன¬தவள வள சட்ட அமலாக்க அதிகாரி எம் ஜெயபாலன் (42) மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாகக்க் கூறப்படும் திரு கைரூல் ஷா ஏ அப்ராஹிமிற்கு எதிராக விசாரணை செய்யாமல் இருக்க அவரிடம் எம்.ஜெயபாலன் பொத்தோங் பாசீர் அவென்யூ 1, புளோக் 146ல் $2,000 லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிலிகி ரோடு, புளோக் 235ல் உள்ள பர்வீன் எஞ்சின¬யரிங், டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு கைரூலிடமிருந்து, ஜெயபாலன் மறுநாள் மேலும் $1,000 அவர் பெற்றதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
பணப் பரிமாற்றம் மூன்றாவது நபர் வழி நடந்து என்றும் நீதிமன்றம் அறிந்தது.
இந்த வழக்குக்கு முந்திய விசாரணை வருகின்ற திங்கட்கிழமை நடைபெறும்.
ஜெயபாலன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு $100,000 அபராதமோ 5 ஆண்டு வரை நீடிக்கப்பட்ட சிறை தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
No comments:
Post a Comment