Pages

Wednesday, December 2, 2009

ரஜினியின் மகள் கோவா படத்துக்கு வாங்கிய பணத்திற்கு அல்வா கோர்டுக்கு அலையும் வருண் மணியன் ?

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள, "கோவா' படத்தை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக் காலத் தடை விதித்துள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வருண் மணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: நான் என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக உள்ளேன். என்.ஏ. பி.சி., குரூப் நிறுவனங்களின் இயக்குனராகவும் உள் ளேன். சென்னையில் உள்ள "ஆக்கர் ஸ்டூடியோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளார். அவரை எனக்கு நன்கு தெரியும். "கோவா' என்ற படத்தை தயாரிப்பதற்காக "ஆக்கர் ஸ்டூடியோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்னிடம் நிதியுதவி கோரினார். 24 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதி அளித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சத்திற்கு இரண்டு காசோலைகளை வழங்கினேன். வாங்கிய பணத்திற்கான ஆவணங்களை பின்னால் தருவாக சவுந்தர்யா தெரிவித்தார். அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு, கடிதமும் எழுதியுள்ளார். எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து கொடுத்தது போக, என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் கணக்கு மூலமாக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய், "கோவா' படத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்ட பின், சவுந் தர்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். ஆகையால், அவரிடம் இருந்து இதுவரை எனக்கு ஆவணங்கள் எதுவும் வரவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பணத்தை தராமல், அந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. பணத்தை கேட்கும் போதெல்லாம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தவிர்த்து வருகிறார். இதுவரை ஒரு பைசா கூட எனக்கு தரவில்லை. என்னிடம் மட்டுமல்லாமல், வேறு பலரிடம் இருந்தும் பணம் பெற்றுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிந்தும் இதுவரை பணத்தை செலுத்தவில்லை. பணத்தை தராமல் படத்தை வெளியிட்டால், நான் பாதிக்கப்படுவேன். எனவே, "கோவா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனக்கு தரவேண்டிய 73 லட்சத்து 14 ஆயிரத்து 521 ரூபாயை தருவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனராக வருண் மணியன் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், நிறுவனம் சார்பில் வழங்கிய விதத்தில் ஒரு கோடி யே 36 லட்சத்து 37 ஆயிரத்து 589 ரூபாயை டிபாசிட் செய்ய ஆக்கர் ஸ்டூடியோவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், "கோவா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இம்மனுக்கள் நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, இந்த படத்தை வெளியிட வரும் 11ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.

1 comment:

  1. இவர்கள் எந்த தைரியத்தில் இப்படி நடந்து கொள்கிறார்கள் ? பெரிய மனிதன் வீடு பெண் என்பதலா ? அரசு உதவிக்கு வரும் என்பதாலா ? கொடுமைடா சாமி ? எல்லாம் வல்ல பாபா பகவான் புத்தி கொடுக்கட்டும் .
    - ரஹ்மான் , சிங்கப்பூர் .

    ReplyDelete