Pages

Sunday, December 6, 2009

நான் பரிசுத்தமானவன் - நீதிபதி தினகரன் கதறல் ?

நான் நேர்மையானவன், குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்,'' என, கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:


எனக்கு எதிராக உள்நோக்கத்தோடு, அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. நான் பொறுப்பான ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியில் இருப்பதால், அவதூறு பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விஷயத்தில் பொறுமை காட்டி வருகிறேன். எனக்கு எதிரான அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோர் வெற்றி பெற முடியாது. உண்மை என்ன என்பது ஒரு நாள் தெரியவரும்.நான் அப்பாவி என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.


நாள் வரும் போது, நான் பரிசுத்தமானவன், நேர்மையானவன் என்பதை மக்கள் புரிந்து கொள்வர். நான் குற்றமற்றவன் என்பதும் நிரூபனமாகும். நான் நீதிபதியாக 13 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறேன். இந்தக் கால கட்டத்தில் எந்த விதமான சர்ச்சைக்கும் ஆளானதில்லை. என் மீது யாரும் களங்கம் சுமத்தியதில்லை. ஆனால், இப்போது உள்நோக்கம் கொண்ட சிலர், மீடியாக்கள் மூலமாக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஐகோர்ட் நீதிபதியானது முதல், எனது நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. கர்நாடக தலைமை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 16 மாதங்களாகத்தான் பதவி வகிக்கிறேன். என்னை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்த பின்னரே, சிலர் எனக்கு எதிரான அவதூறு பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பொதுமக்கள் இதை நம்பமாட்டார்கள்.உண்மை என்ன என்பது தெரியாமல், மீடியாக்கள் மூலமாக எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது.


பத்திரிகையாளர்கள் நேரடியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று உண்மையை கண்டறிய வேண்டும்.இவ்வாறு நீதிபதி தினகரன் கூறினார்.இதற்கிடையில், தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் குழுவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது, நீதிபதிகள் நியமன முறையை கேள்விக் குறியாக்கியுள்ளது என, பார் அசோசியேஷன் கூறியுள்ளது.உண்மை எது பொய் எதுன்னு நம்ப முடியலை நம்ப கண்ணை நம்மால நம்ப முடியலை ?
- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment