Pages

Wednesday, December 2, 2009

போலி மருந்துகள் ?

சமீபத்தில் ராஜஸ்தானில் போலி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைஜீரிய சம்பவத்துக்குப் பிறகும் சீனா தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.


இந்த ஆண்டு ஜூன் மாதம் நைஜீரியாவில் மிகப் பெரிய அளவில் 'மேட் இன் இண்டியா' என்று பொறிக்கப்பட்ட போலி மருந்துப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன.இச்சம்பவத்துக்குநைஜீரிய அரசிடம் மன்னிப்புக் கேட்ட சீனா, இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்திருந்தது. போலி மருந்துகள் தயாரித்த 50 நிறுவனங்களை சீன அரசு அடையாளம் கண்டறிந்ததாகவும் தகவல்கள் வந்தன.இதற்குப் பிறகுசமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போலி மருந்துப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


"இவிக்ளோப் எக்ஸ்'(Iviglob Ex) என்றபெயரிலான அந்த மருந்து முக்கியமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது.இந்த மருந்து மும்பையிலுள்ள "வி.எச்.பி., லைப் சைன் சஸ் லிட்' என்ற கம்பெனி மூலம் இந்தியாவில் வினியோகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் ஈட்டும் இந்தக் கம்பெனி, இத்துறையில் 63 ஆண்டுகளாக இருக்கிறது.ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இந்த மருந்தின் போலிகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. அவற்றின் மேலுறையில் மும்பை கம்பெனியின் சீல் பொறிக்கப்பட்டுள்ளது. உண்மையான மருந்துக்கும் போலி மருந்துக்கும் இடையில் 28 வேறுபாடுகள் உள்ளதை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.இது பற்றி விசாரித்த மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், இவை மும்பையிலுள்ள "ஸ்ரீ விநாயக் டிரேடிங் கம்பெனி' என்றநிறுவனம் வினியோகித்தது என்பதைக் கண்டறிந்தனர். இப்போது அந்தக் கம்பெனியிடம் விசாரித்து வருகின்றனர்.


மும்பையிலுள்ள நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்பட்ட மருந்து ஜெய்ப்பூரில் கிடைத்தாலும் அவை எங்கு தயாரிக்கப்பட்டன என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேபோல், ஷீத்தல் பார்மா, என்வீ ட்ரக்ஸ் பிரைவேட் லிட், சிஜே ஷா அண்டு ஜேபி கொக்கானி அண்டு கோ போன்ற நிறுவனங்களும் இந்த விசாரணையில் சிக்கியுள்ளன.போலி மருந்துகள் சப்ளை செய்தது குறித்து இந்த நிறுவனங்களிடம் சி.பி.ஐ., போலீசார்விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment