Pages

Friday, December 4, 2009

சோனியா காந்தி ஸ்டண்ட் ?

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்டு இருந்த 34 உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை. இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் 28 பேர் கேள்வி கேட்டு இருந்தனர். அவர்களில் 2 பேர் மட்டுமே சபைக்கு வந்திருந்தனர். 26 பேர் வரவில்லை.

இது பற்றி அறிந்த சோனியா காந்தி வேதனை அடைந்தார். சபைக்கு வராத அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதும் அவர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக கட்சி தலைமை நிர்வாகிகளிடம் இந்த எம்.பி.க்கள் பட்டியலை தருமாறு கேட்டுள்ளார். மேலும் சபை நடவடிக்கையில் சரியாக பங்கேற்காமல் இருக்கும் எம்.பி.க்கள் பட்டியலையும் கேட்டு இருக்கிறார்.

அவர்கள் மீது கட்சி விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment