Pages

Friday, December 18, 2009

கற்பழிப்பு புகார் இன்று மருத்துவ பரிசோதனை

சென்னை சாமியார் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள ஹேமலதாவிற்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா(35), தி.நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்மை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஹேமலதாவிடம் போலீசார் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலைக்கு சென்றது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஹேமலதா போலீசாரிடம் விளக்கினார்.

இந்நிலையில், ஹேமலதாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நேற்று கோர்ட் அனுமதி பெற்றனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவதற்காக ஹேமலதா நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், நேரமாகி விட்டதால், ஹேமலதாவிற்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.ஹேமலதாவிற்கு இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்பிறகு, தேவைப்பட்டால், ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த வழக்கு குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:ஹேமலதா கொடுத்த கற்பழிப்பு புகார் தொடர்பாக, வழக்குபதிவு செய்யப்பட்டு, நான்கு பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஒரு தரப்பில் புகாரும், மற்றொரு தரப்பில் எதிர் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கில் விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். நாங்கள் ஹேமலதா, ஈஸ்வர ஸ்ரீகுமார் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை" இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment