Pages

Tuesday, December 1, 2009

என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர்கள் - நமீதா அதிரடி குற்றச்சாட்டு ?


நமீதாவுக்கு பெரிய வெற்றிப்படங்கள் அமையாத வருத்தம் உள்ளது. முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களிலும் கவர்ச்சியாக நடிக்க வைத்து மோசம் செய்து விட்டதாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாய்ந்தார். நமீதா கூறியதாவது:-

சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரையும் நம்பினேன். டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் என்னை ஒப்பந்தம் செய்யும் போது படத்தில் உங்களுக்குத்தான் முக்கியமான கேரக்டர் என்று ஆசைகாட்டுவார்கள். கதை நம்பி ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டேன். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது அதை வேறு மாதிரி இருக்கும். இப்படி பல பேர் ஏமாற்றி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி நான் நடித்த காட்சிகளையும் வெட்டி எறிவதுண்டு. தியேட்டரில் பார்த்த போது என் காட்சிகள் குறைக்கப்பட்டு இருக்கும். இதுபற்றி கேட்டால் படம் நீளமாக இருந்தது. அதனால் குறைத்தோம் என்பார்கள்.

ஒரு படத்தில் நான் நடித்த பாடல் காட்சி மட்டும் தான் இருந்தது. மற்ற சீன்களை நீக்கி விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக என்னை நகர்த்தி கவர்ச்சி நடிப்புக்குள் தள்ளி விட்டனர். இனிமேல் ஏமாறமாட்டேன். அதற்கு உதாரணம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 கதைகள் கேட்டு எதுவும் பிடிக்காததால் நடிக்க மறுத்து விட்டேன். எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தான் நடிப்பேன்.

No comments:

Post a Comment