ஆசிய நாடுகளில் சீனா ஆங்கிலம் பேசுவதில், அறிந்து கொள்வதில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் ஆங்கிலம் கட்டாய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. அதனால், சிறுவயது முதலே ஓரளவு ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.
1995ல் 20 கோடி சீனர்கள் ஆங்கிலம் அறிந்திருந்தனர்.ஒவ்வொரு ஆண் டும் சீனாவில் இரண்டு கோடி பேர் புதிதாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்கின்றனர். சீனாவில் ஆங்கில அறிவோடு ஆங்கிலப் பேச்சும் தங்கு தடையின்றி இருக்கின்றது.இந்தியாவில் 2010ல் ஐந்தரை கோடி பேர் மட்டுமே ஆங்கிலம் அறிந்தவர்களாக இருப்பர். ஆங்கில அறிவு வளர்ச்சி இந்தியாவில் மெதுவாகத் தான் நடக்கிறது. இதற்கு அங்குள்ள கல்விக் கொள்கைகள்தான் காரணம்.
பிற நாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே ஆங்கில போதனை தொடங்கி விடுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை. ஆங்கில அறிவு வளர்ந்தால்தான் இந்தியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி காண முடியும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரத்திலும் பயிற்சியிலும் பிற நாடுகளை விடப் பின்தங்கி இருப்பதற்கு மோசமான ஆங்கில அறிவும் ஒரு காரணம்.இவ்வாறு அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment