Pages

Saturday, December 5, 2009

கிளின்டன் மகள் திருமணம்

"எனது மகள் செல்சியா திருமணம், தனிப்பட்ட குடும்ப விழாவாகவே நடைபெறும் என, அமெரிக்க வெளியுறவுஅமைச்சர் ஹிலாரிகிளின்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் எம்.பி., மார்க்கோலிசின் மகன் மார்க் மெஜ்வின்ஸ்கிக்கும், முன்னாள் அதிபர் கிளின்டன் மற்றும் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள ஹிலாரி தம்பதியரின் மகளான செல்சியா(29)வுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.


இதற்கான நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்தது.இந்நிலையில், மகள் திருமணம் குறித்து ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:என் மகளின் திருமணத்தை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என் மகளுக்கு மிகச்சிறந்தஇளைஞர் மாப்பிள்ளையாக அமைவது பெருமையாக உள்ளது.


நெருக்கடியான அமைச்சகப் பணிகளுக்கிடையே அவளது திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்வது எனக்கு கடினமாகத் தான் இருக்கிறது.எனக்காகக் கூட நேரம் ஒதுக்க முடியாத நிலையிலும், என்ன யோசனை வேண்டுமென்றாலும் என்னைக் கூப்பிடு அல்லது நான் உன்னைக் கூப்பிடுகிறேன்' என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறேன். எனது மகள் திருமணம் குடும்ப விழாவாகவே இருக்கும். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணமாக இருக்கும்"இவ்வாறு ஹிலாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment