இது குறித்து, கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் நகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி தரவில்லை என்றும், அதில் திரிபுரா மாநில முதல்வர் கலந்து கொள்வதை சுட்டிக்காட்டி, முதல்வரிடம் பேசி அனுமதி பெற்றுத் தருமாறு வரதராஜன் கேட்டதாக, எனது செயலர் என்னிடம் தெரிவித்தார். உடனே, உரிய அனுமதியை வழங்க உத்தரவிட்டேன்.சற்று நேரத்தில், அக்கட்சியின் கருத்து ஒன்றை அறிய நேரிட்டது. "கடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வென்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் வேட்பாளர் மோகன், வழக்கு தொடர்ந்திருந்தார்.
மோகன் மறைந்த நிலையில், தேர்தலில் மாற்று வேட்பாளராக மனு செய்த, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், வாதியாக சேர்க்கப்பட்டு வழக்கை தொடர்ந்து நடத்துவார்' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நடக்கட்டும்; நீதிமன்றம் தீர்ப்பு கூறட்டும். அந்த தீர்ப்பை ஏற்க தி.மு.க., தயாராக இருக்கிறது. ஆனால், நாம் எந்த உணர்வுடன் இருக்கிறோம், அக்கட்சித் தலைமையில் உள்ள சிலர் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment