Wednesday, December 2, 2009
அதிகம் தேடப்படும் இருவர் ?
"யாகூ” இணைய தளம் செய்தி பிரிவு இந்தியாவில் 2009-ம் ஆண்டில் யாருடைய செய்திகள் அதிகமாக வருகின்றன. யாருடைய செய்திகளை வாசகர்கள் அதிகமாக தேடி படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை சேகரித்து உள்ளது. இதில் ராகுல்காந்தியை பற்றியே அதிக செய்திகள் வந்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற செய்தது. மந்திரி பதவி கொடுத்த போதும் ஏற்க மறுத்தது. இளைஞர் காங்கிரசை வளர்க்க ஓய்வு இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வருவது அவருடைய வித்தியாசமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அவரை பற்றியே அதிக அளவில் செய்திகள் வருவதாக அந்த இணைய தளம் கூறியுள்ளது.
வழக்கமான பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் தான் இதில் முதல் இடத்தில் இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு அனைவரையும் முறியடித்து ராகுல்காந்தி முதலிடத்தை பிடித்து உள்ளார். இந்தி நடிகை காத்ரினா கயூப் இதில் 2-வது இடத்தில் இருக்கிறார். அவருடைய சினிமா வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிக அளவில் செய்திகள் வெளிவந்து உள்ளன. இதன் மூலம் 2-வது இடத்தை பிடித்து உள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகி லலித்மோடி 4-வது இடத்திலும், டி.வி. சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராக்கி சவந்த் 5-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமானும் அதிக அளவில் செய்திகளில் வந்துள்ளார்.
ஓரின சேர்க்கை தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு, மும்பையில் கடல் பாலம் திறப்பு, பன்றி காய்ச்சல் பாதிப்பு ஆகியவை பற்றியும் அதிக செய்திகள் வந்துள்ளன.
முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி, மகாராணி காய்திரி தேவி, பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், இங்கிலாந்து டி.வி. நடிகை ஜேட்கூடி மரணம், கிரிக்கெட் அம்பயர் டேவிட் ஷெப்பர்டு மரணம் ஆகியவை பற்றியும் அதிக செய்திகள் வந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை .உங்கள் ராகுல் காந்தி எதாவது புப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து கொண்டிருக்கிறார். கதரினா எதாவது கிசு கிசுவில் சிக்கி கொண்டிருக்கிறார். அதான் அலசுகிறார்கள்.ரெண்டாவது சூப்பர் அழகான நடிகை.ம்ம் . எவனுக்கு யோகமோ ?
ReplyDelete- ரஹ்மான்