Pages

Tuesday, December 1, 2009

தேவநாதன் ஹிந்துவா ? வெள்ளை அறிக்கை அளிக்குமா போலீஸ் ?

காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில், மச்சேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தேவநாதன்(35) என்பவர் அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். இவர், கோவில் உள்ளே பெண்களுடன் ஆபாசமாக இருந்துள்ளார். அதை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். அதேபோல் வீடுகளிலும் பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை படம் பிடித்துள்ளார். இக்காட்சிகள் வெளியில் பரவியது. இது குறித்த புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவநாதன் தலைமறைவானார். முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. கடந்த மாதம் 16ம் தேதி, காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.


நேற்று போலீஸ் காவல் முடிந்தது. மாலை 5 மணிக்கு தேவநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இந்நிலையில் கோர்ட்டுக்கு வரும் தேவநாதன் மீது, செருப்பு வீச மக்கள் மன்றத்தினர் முடிவு செய்தனர். மக்கள் மன்ற நிர்வாகிகள் மகேஷ், ஜெசி ஆகியோர் நான்கு பெண்களுடன் மாலை நான்கு மணிக்கு கோர்ட் முன் நின்றிருந்தனர். தகவல் அறிந்து விஷ்ணுகாஞ்சி போ லீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக் கும்போது, தேவநாதனை ஏற்றிய போலீஸ் ஜீப் வேகமாக கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. கோர்ட் அருகில் உள்ள உணவகத்திற்கு செல்லும் வழியாக ஏராளமான பெண்கள் துடைப்பம், பழைய செருப்பு, சாணம் ஆகியவற்றுடன் ஆவேசமாக ஜீப்பை சுற்றி வளைத்து தாக்கத் துவங்கினர். போலீசார் ஓடி வந்து அவர்களை தடுத்தனர். தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரை மீறி பெண்கள், போலீஸ் ஜீப்பை தாக்கினர்.


ஜீப்பின் மறுபக்கம் வழியே போலீசார் தேவநாதனை கோர்ட் உள்ளே அழைத்துச் சென்றனர். உடனே ஜீப் முன்னோக்கி சென்றது. பெண்கள் ஜீப்பை விரட்டினர். அப்போது டி.எஸ்.பி., சமுத்திரகனி தலைமையில் போலீசார் விரைந்து வந்து, பெண்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த பழைய செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை பிடுங்கி எறிந்தனர். சில பெண்கள் ஆவேசமாகப் போலீசாரை தள்ளினர். அவர்களைப் போலீசார் தாக்கத் துவங்கினர். உடனடியாக டி.எஸ்.பி., சமுத்திரகனி தலையிட்டு, யாரையும் அடிக்காதீர்கள். அனைவரையும் ஜீப்பில் ஏற்றுங்கள் என உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் அனைவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


பெண்கள் அனைவரும் தேவநாதனை விடுவிக்காதே எனக் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இச்சம்பவத்தால், கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வரும் 14ம் தேதி வரை நீட்டிப்பு: காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனுக்கு நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment