Pages

Saturday, December 5, 2009

இந்தியாவின் மிக பெரிய கட்சி உடைந்தது ?

அதிருப்தி காரணமாக கார்த்திக் கட்சியின் மாவட்ட செயலர்களில் ஒரு பகுதியினர், கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி துவங்க முடிவு செய்துள்ளனர்.நடிகர் கார்த்திக் கடந்த 2005 மே 1ம் தேதி "சரணாலயம்' என்ற சமூகசேவை அமைப்பை ராஜபாளையத்தில் துவங்கினார். கடந்த 2006ல் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் நியமிக்கப்பட்டார்.


தொண்டர்களை அரவணைத்து செல்லவில்லை. நிர்வாகிகள் குழு கூட்டத்தை கூட்ட வில்லை என கூறி பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலர் பிஸ்வாஸ் எம்.பி., கார்த்திக்கை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.கார்த்திக் 2008 ஜூன் 9ம் தேதி, "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார்.


கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் நா.ம., கட்சி கூட்டணி வைத்தது. விருதுநகர், தேனி ஆகிய இரு தொகுதியில் நா.ம., கட்சி போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் கட்சி தலைவர் கார்த்திக் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பின்னர் தங்களை தொடர்பு கொள்ளாமல் புறக்கணித்ததால் பாதிக்கப்பட்ட கொங்கு மாவட்ட செயலர்கள், ஜூன் 14ல் திருப்பூரில் ரகசிய கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினர்.


மாவட்ட செயலர்கள் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், கட்சிக்கு வந்தவுடன் சம்பாதிக்க நினைக்கும் செயலர்கள் நீக்கப்படுவர்' என அறிவித்தார்.இந்நிலையில், கார்த்திக் கட்சி மாவட்ட செயலர்கள், நா.ம., கட்சியை விட்டு விலகி, புதிய கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.


ஈரோடு மாவட்ட செயலர் மாதேஸ்குமார் கூறியதாவது: கட்சிக்கு வந்தவுடன் பணம் சம்பாதிக்க விரும்புவதாக கார்த்திக் கூறுகிறார். ஆனால், நாங்கள் கட்சிக்கான பல லட்சம் பணம் செலவு செய்துள்ளோம். இதுவரை குடும்பத்தில் அவப்பெயரைத்தான் சம்பாதித்துள்ளோம். கார்த்திக் எங்களை பலமுறை சென்னைக்கு வருமாறு அழைத்து விட்டு, சந்திக்காமல் புறக்கணித்து விட்டார். அவரையும் சந்திக்க முடியவில்லை. தொண்டர்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை.


எனவே, அதிருப்தியில் உள்ள மாவட்ட செயலர்கள் கட்சியை விட்டு விலகி அடுத்த வாரம் தனிகட்சி துவங்க முடிவு செய்துள்ளோம். தேனி மாவட்ட செயலர் ரமேஷ், கார்த்திக் சகலையும் நீலகிரி மாவட்ட செயலருமான லியோ உட்பட சில மாவட்ட செயலர்கள் எங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்.இவ்வாறு மாதேஸ் குமார் கூறினார்.

No comments:

Post a Comment