Pages

Friday, December 4, 2009

பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் ‌தெரிவித்துள்ளது. உள்நாட்டில் அளிப்பை சீராக வைத்திருக்கும் வகையில் மத்திய அரசு, இந்த ஒப்புதலை அளித்துள்ளது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை எந்த விலையில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என அரசு நிர்ணயம் செய்யும் விலையாகும். ஏற்றுமதியாளர்கள் அந்த விலைக்கு குறைவாக, குறிப்பிட்ட பொருளை ஏற்றுமதி செய்ய இயலாது. பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி 900 டாலராக உயர்த்தப் பட உள்ளது. இது தற்போது 788 டாலராக உள்ளது. இதுதவிர, பாசுமதி அரிசி அல்லாத சோனா மசூரி மற்றும் ஷர்பதி போன்ற சில ரகங்களுக்கும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, ஒரு டன்னுக்கு 900 டாலராக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment