Pages

Sunday, December 6, 2009

இந்தியா - சரத் பொன்சேகா - ராஜபக்ஷே -பிரபாகரன் நீடிக்கும் மர்மம் ?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் சுதந்திர கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேயும் எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகிறார்கள். ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்ததில் இவர்கள் இருவருக்குமே பெரும் பங்கு உண்டு.

தமிழர்களை அழித்ததால் இவர்கள் இருவருக்கும் சிங்களர்களிடம் சம அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. அதிபர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வெறியில் இருக்கும் இவர்கள் இருவரும் தற்போது ஈழத் தமிழர்களின் ஓட்டுக்களை பெற மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து, ஈழத் தமிழர்கள் துயரத்தை அனுபவிக்க காரணமாக உள்ள கருணா உள்பட சிலர் ராஜ பக்சேயிடமும், சரத்பொன் சேகாவிடமும் ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவிடம் ஆதரவு கேட்டு ராஜபக்சேயும், பொன்சேகாவும் காய்களை நகர்த்தி வருகிறார்கள். விடுதலைப்புலிகளை கொன்று குவித்ததால் மத்திய அரசு, ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் கொழும்புக்கு சென்று ராஜபக்சேயை சந்தித்துப்பேசி உற்சாகப்படுத்தி விட்டு வந்தார்.

சரத்பொன்சேகாவுக்கு இது நெருடலை ஏற்படுத்தியது. சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கைக்கூலியாக சரத் பொன்சேகா இருப்பதாக இந்தியா கருதுகிறது. எனவே சரத்பொன்சேகா அதிகாரத்துக்கு வருவதை இந்தியா விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.

இதை உணர்ந்த சரத்பொன்சேகா, இந்தியாவை புகழ்ந்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்தியா தான் முதல் நட்பு நாடு என்று கூறினார். அதோடு நிற்காமல் நேற்று முன்தினம் இரவு அவசரம், அவசரமாக டெல்லி புறப்பட்டு வந்தார்.

சரத்பொன்சேகாவின் வருகை, மிக, மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் சில உயர் அதிகாரிகள் சரத்பொன்சேகாவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர்.

அவர்களையும் சரத்பொன்சேகா சந்தித்துப்பேசினார். அப்போது அவர், “இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பேன்” என்று கூறி ஆதரவு திரட்டியதாக தெரிய வந்துள்ளது. டெல்லியில் அவர் எங்கெங்கு சென்றார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

சரத்பொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவு கொடுக்குமா என்று தெரியவில்லை. அவரது பயணம் வெற்றி கரமாக முடிந்ததா என்றும் தெரியவில்லை. சரத்பொன்சேகா இன்று டெல்லியில் இருந்து கொழும்பு திரும்பி செல்கிறார்.

No comments:

Post a Comment