Pages

Friday, December 18, 2009

சென்னை தி.நகரிலுள்ள ஸ்ரீபாலாஜி உணவகத்தில் சாபிட்டவருக்கு நஷ்ட ஈடு ?


ஓட்டலில் சாப்பிட்ட முதியவருக்கு, மீதி 72 காசை கொடுக்க மறுத்த உணவகம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.1,000 வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுந்தர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (தெற்கு) அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
சென்னை தி.நகரிலுள்ள ஸ்ரீபாலாஜி உணவகத்தில் சாப்பிட்டேன். சேவை கட்டணத்துடன் ரூ.34.28க்கு பில் தந்துவிட்டு ரூ.35 வசூலித்தனர். மீதியை கேட்டதற்கு மற்றவர்கள் முன் திட்டியதால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். எனவே, 72 பைசாவையும், இழப்பீடாக ரூ.5 ஆயிரமும் தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
ஸ்ரீபாலாஜி உணவகம் அளித்த பதில் மனுவை ஏற்று சுந்தரின் மனுவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சுந்தர் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். ஆணையத் தலைவர் எம்.தணிகாசலம், உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
பணத்தை ரவுண்டாக வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்வதை ஏற்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட சுந்தருக்கு சேர வேண்டிய 72 பைசா மற்றும் இழப்பீடாக ஆயிரம் ரூபாயை ஒருமாதத்திற்குள் வழங்க வேண்டும் என அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.

No comments:

Post a Comment