Pages

Friday, December 18, 2009

அமெரிக்காவுக்கு 10வது இடம்


தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்தது. முதலிடத்தை குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் பிடித்தது.
உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகள் இடையே உள்ள மிகக் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.55.46 லட்சம். அங்கு இயற்கை வளம் குறைவு என்பதால் தொழிற்சாலைகள் அதிகம். அதாவது, மக்கள் எண்ணிக்கையைவிட ஆலைகள் அதிகம்.
ரூ.48.64 லட்சம் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் 2வது இடம் வகிக்கிறது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொழிக்கும் நாடு அது. ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3ம் இடம் பெற்றுள்ளது. அங்கு தனிநபர் உற்பத்தி ரூ.38.11 லட்சம். 4 முதல் 9ம் இடம் வரை முறையே பெர்முடா, குவைத், ஜெர்சி, நார்வே, புருனே, சிங்கப்பூர் ஆகியவை வகிக்கின்றன. கத்தார் போலவே எண்ணெய் வளம் மிக்க மற்றொரு குட்டி நாடான குவைத், இந்தப் பட்டியலில் 5ம் இடம் பெற்றது. அங்கு தனிநபர் உற்பத்தி ரூ.26.98 லட்சம். பணக்கார நாடு மற்றும் உலக நாடுகளின் முன்னோடி என கருதப்படும் அமெரிக்காவுக்கு தனிநபர் உற்பத்தியில் 10வது இடமே கிடைத்தது. அங்கு தனிநபர் ஆண்டு உற்பத்தி ரூ.22.09 லட்சம்.

No comments:

Post a Comment