Pages

Monday, December 7, 2009

வெளிநாடுகளில் “நர்சிங் படித்தவர்களின் தேவை அதிகரித்துள்ளது” நர்சிங் கல்விக்குழு பதிவாளர் தகவல்

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான “லைட்டிங் லேம்ப்” என்ற வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் தங்க வேலு தலைமை தாங்கி னார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை, தமிழ்நாடு நர்சிங் கல்விக்குழு பதிவாளர் ஜோஸ்பின் லிட்டில் பிளவர் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

நர்சிங் பணி என்பது அர்ப்பணிப்பு உணர்வும், தியாக மனப்பான்மையையும் உணர்த்தும் சேவைப்பணி. இதற்கு மாணவர்கள் படிக்கும் போதே தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பிற்போக்கு சிந்தனைகளை மனதில் இருந்து நீக்கி, முற்போக்கு சிந்தனைகளை மாணவர்கள் மனதில் உருவாக்கும் களமாக கல்லூரிகள் அமைகின்றன. நர்சிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நர்சிங் படித்து முடிக்கிறார்கள்.

இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது மிகமிக அதிகம். இந்தியாவில் நர்சிங் படித்தவர்களுக்கு தற்போது அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. அதன்படி அரசு மருத்துவனைகளில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்களும், தனியார் மருத்துவ மனைகளில் 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்தியாவில் நர்சிங் படித்தவர்களின் தேவை வெளிநாடுகளில் அதிகரித்து உள்ளது.

அதனால் மாணவர்கள் நர்சிங் துறை தொடர்பான தகவல்களை அதிக அள வில் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

இவ்வாறு பதிவாளர் ஜோஸ்பின் லிட்டில் பிளவர் கூறினார்.


நிகழ்ச்சியில், சென்னை, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைப் பதிவாளர் கீதா, கங்கா மருத்துவமனை நிர்வாக அதிகாரி மனோன்மணி, பி.பி.ஜி. கல்வி நிறுவன நிர்வாக அதிகாரி தட்சிணாமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment