Saturday, December 19, 2009
ஏர் இந்திய பாதுகாப்பு விதி மீறல் - சோதனை செய்யாமல் இருமுடி பை அனுமதி
:விமானம் மூலமாக சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஐயப்ப பக்தர்கள் ரயில் மற்றும் பஸ், வேன், கார் போன்ற வாகனங்களில் சபரி மலைக்கு சென்று வருகின் றனர். இதனால் சபரிமலை சென்றுவர சுமார் 5 நாட்கள் முதல் ஒருவாரம் வரை ஆகிறது. உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலர் சபரிமலை சென்றுவர விடுமுறை கிடைக்காமல் ஆண்டுதோறும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது இந்த குறையை போக்கும் விதத்தில் ஐயப்ப பக்தர்கள், விமானம் மூலம் சபரிமலைக்கு செல்ல முடிவெடித்துள்ளனர். சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடுகின்றனர். அங்கிருந்து 190 கிலோ மீட்டர் தூரம் உள்ள பம்பைக்கு 4 நான்கு மணி நேரத்தில் கார் அல்லது வேன் மூலம் சென்று அடைகின்றனர். அங்கு தரிசனம் முடித்துக் கொண்டு மறுநாள் சென்னைக்கு திரும்பி விடுகின்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக தினமும் காலை 6.40க்கு கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் நேரம் மாற்றப்பட்டு, காலை 10.15 மணிக்கு செல்கிறது. இதனால் கொச்சி செல்லும் விமானத்தில் ஐயப்ப பக்தர்கள் டிக்கட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வழக்கமாக, 122 இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் 319 ரக விமானத்துக்கு பதிலாக 145 இருக்கை கொண்ட ஏர் பஸ் 320 ரக விமானத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கி வருகிறது. மேலும் பாதுகாப்பு சோதனையின்போது இருமுடி பைகளை அவிழ்க்காமல் சோதனை செய்து அதிகாரிகள் அனுப்புகின்றனர். இது ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment