
சன் டிவியில் ‘மாதவி’என்ற புதிய தொடர் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது.
ஹோம் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள தொடர் ‘மாதவி’. இதை ‘கோலங்கள்’ தொடரை இயக்கிய திருச்செல்வம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சாரா, சீனு, நளினி, சுபலேகா சுதாகர், வனிதா, ஜோக்கர் துளசி உட்பட பலர் நடிக்கின்றனர். இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்க, முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இசை நவ்நீத். ஒளிப்பதிவு விஜயகுமார். இந்த மெகாத் தொடர், சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் பற்றி திருச்செல்வம் கூறும்போது, ‘‘வழக்கமாக தொடர்களில் காட்டப்படும் எந்த விஷயமும் இதில் இருக்காது. புதிய களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறேன். மாதவி என்கிற கேரக்டர் யதார்த்தமானது. அவருக்கு ஏற்படும் காதல், அதற்காக தனது தியாகம், லட்சியம் என்று செல்கிற பெண்ணின் கதை. மாதவி என்று தலைப்பு வைத்திருந்தாலும் இதில் மென்மையான ஆண்களை காண்பிக்கிறேன். அவர்களுக்கான உணர்வும் மதிப்பும் இத்தொடரில் பேசப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment