தென்காசி அருகே ஆய்குடியை சேர்ந்த கவுதம் ராஜ் தாக்கல் செய்த ரிட் மனு: நான் ஜெ.பி., இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ., படிக்க விரும்பினேன். அதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியரான என் சகோதரர் பணம் உதவி செய்தார். ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் தந்தை, தாய் பண உதவி செய்பவரை மட்டும் என்.ஆர்.ஐ., கோட்டாவில் எடுத்து கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் என்னை போன்றவர்கள் பாதிக்கப்படுவர். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கல்லூரியை விட்டு என்னை வெளியேற்ற கூடாது எனவும், என் சகோதரர் அனுப்பும் பணத்தில் படிக்க அண்ணா பல்கலை அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது மொய்தீன் ஆஜரானார்.நீதிபதி கே.என்.பாஷா, மனுதாரரை கல்லூரியை விட்டு வெளியேற்ற கூடாது. அவரது சகோதரர் அனுப்பும் பணத்தில் மனுதாரர் படிக்க அனுமதிக்க வேண்டும்,'' என அண்ணா பல்கலை., மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment