திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் 2 மலையாள படங்களில் நடித்தார். நடித்து முடித்ததும், அயர்லாந்து சென்று விட்டார். இந்நிலையில், ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கோபிகா சென்னை வந்தார். அயர்லாந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கோபிகா " திருமணத்துக்குப்பின், நடிப்பதில்லை என்ற முடிவுடன் தான் இருந்தேன். என் நண்பர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக்கொண்டதால், 2 மலையாள படங்களில் மட்டும் நடித்தேன். கடந்த முறை நான் கேரளா வந்திருந்தபோது, ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அதற்காகத்தான் நான் சென்னை வந்தேன். அயர்லாந்தில், நான் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்கிறார். இப்போது நான், 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். குழந்தையின் நலம் கருதி, இனிமேல் 2 வருடங்களுக்கு பிறகுதான் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் " என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment