Pages

Sunday, December 20, 2009

மும்பை போல லண்டனில் தாக்குதல் நடத்த சதி ஸ்காட்லாந்து யார்டு போலீசார் எச்சரிக்கை

கடந்த ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது போலவே அதே முறையை கையாண்டு லண்டனில் பெரும் தாக்குதல் நடத்திட பயங்கரவாதிகள் சதித்திட்ட தீட்டியுள்ளனர் என ஸ்காட்லாந்து யார்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான செய்தியை தி சண்டே டைம்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் லண்டனில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஒருவர் கூறுகையில் , லண்டன் நோக்கி மும்பை வந்து கொண்டிருக்கிறது என்றார். லண்டன் யார்டு போலீசார் தங்களது எச்சரிக்கையில் வரும் புத்தாண்டில் லண்டனில் உள்ள முக்கிய ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், மற்றும் போலீஸ் ஸ்டேஷன் , மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சாட்டிங் மூலம் நடந்த உரையாடல் : இந்த சதித்திட்டம் செல்போன் மற்றும் இணையதள சாட்டிங் உரையாடல் மூலம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த உரையாடலில் 3 பேர் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் கூறும்போது நடத்தவிருக்கும் தாக்குதலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் , குழந்தைகள் மற்றும் நமது இனத்தவர்கள் இல்லாதவர்களாக பார்த்து தாக்குதல் நடத்த வேண்டும். நம்மிடம் தற்போது பயங்கர ஆயுதங்கள் கைவசம் இல்லை. ஆனால் மிஷின்கன் மற்றும் கைத்துப்பாக்கிகள் பலவிதமாக உள்ளன. இதனை வைத்து தாக்குதல் நடத்த வேண்டும். பலரை பிணைக்கைதிகளாக பிடித்து கொள்ள வேண்டும். மும்பையில் நடந்த தாக்குதல் போல் நடத்தினால் வெற்றி பெறமுடியும். ஆம் அது நல்ல யோசனை குட் என பதில் அளித்துள்ளார்.

மும்பையில் கடந்த ஆண்டு 2008 ல் 26 ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 174 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமுற்றனர். இந்த திட்டம் போல் லண்டனில் நடத்தினால் வெற்றி பெறமுடியும் என பயங்கரவாதிகள் கருதுவதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.

இத்தககவலை உயர் போலீஸ் அதிகாரிகள் மறுப்பதிற்கில்லை. எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கூறியுள்ளனர். இதனையடுத்து லண்டனில் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment