Pages

Sunday, December 6, 2009

இந்திய வரைபடத்துடன் மர்ம மனிதர்

விழுப்புரம் அருகே இந்திய வரைபடத்துடன் சிக்கிய ஆசாமி பயங்கரவாதியா என, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை கடந்து ரயில்வே மைல் கல் எண் 109 அருகே சென்ற போது, மர்ம நபர் ஒருவர் தண்டவாளம் ஓரமாக நடந்து செல்வதை இன்ஜின் டிரைவர் பார்த்தார்.பேரணி ரயில் நிலையம் சென்றவுடன், அங்கு கிராசிங்கில் புறப்பட காத்திருந்த கூட்ஸ் ரயில் டிரைவரிடமும், பேரணி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடமும் மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தார்.


இதையடுத்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மூலம் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, தண்டவாளம் பகுதியில் மர்ம நபரை தேடி கண்டு பிடித்தனர்.அவரது கையில் இந்திய வரைபடம் (மேப்), அரை கிலோ அரிசி இருந்ததைக் கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த ரகமதுல்லா(30) என்பதும், இந்தி, உருது மொழி தெரிந்தவர் என தெரிந்தது.இவர் இந்திய வரைபடத்தை வைத்திருந்ததால் பாகிஸ்தான் பயங்கரவாதியா எனவும், ரயில்வே தண்டவாளத்தை தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டாரா என, பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிடிபட்ட ரகமதுல்லாவை ரயில்வே போலீசார், செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment