உலகின் "நம்பர்-1' கோல்ப் வீரர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ்(33). சமீபத்தில் புளோரிடாவில் உள்ள இவரது வீட்டின் அருகே கார் விபத்தில் சிக்கி, காயமடைந்தார். இவரது மனைவி எலின் நார்டிகிரன் தான் காப்பாற்றினார். ஆனாலும் டைகர் உட்சின் "கேர்ள் பிரண்ட்' ரேச்சல் உகிடெல் தான் பிரச்னைக்கு காரணம் என கூறப்பட்டது. இது தொடர்பான மோதலில் மனைவி எலின் தாக்கியதில் தான் டைகர் உட்ஸ் முகத்தில் ஆங்காங்கே கீறல் உட்பட காயம் ஏற்பட்டதாக வேறுவிதமாக செய்திகள் வெளியாயின.
மன்னிப்பு: இந்த பிரச்னை முடிவதற்குள் "காக்டெயில் வெயிட்ரஸ்'(மது பரிமாறுபவர்) ஆக பணிபுரியும் 24 வயதான ஜெய்மி கிரப்ஸ், டைகர் உட்சுடன் 31 மாதங்கள் தொடர்பு வைத்திருந்தாக கூறினார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூற, கதிகலங்கிப் போனார் உட்ஸ். உடனே தனது வெப்தளத்தில் தவறான "உறவுகளை' மறைமுகமாக ஒத்துக் கொண்ட இவர், மன்னிப்பும் கேட்டுள்ளார். அதில் உட்ஸ் கூறியிருப்பதாவது:
குடும்ப கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நான் மாபெரும் தவறு செய்து விட்டேன். இதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது குடும்பத்துக்கு ஏற்றபடி உண்மையாக நடந்து கொள்ளவில்லை. நான் குற்றமற்றவன் அல்ல. தவறுகள் செய்துள்ளேன். நல்ல கணவராக, தந்தையாக இருக்க முயற்சிப்பேன். எனது தனிப்பட்ட பாவங்களை "மீடியாவுக்கு' தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப பிரச்னைகளை பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. எனது நடத்தை தொடர்பான விஷயங்களை குடும்பத்துடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்,'' என குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பெண்: இதற்கிடையே உட்சுடன் தொடர்பு இருப்பதாக மூன்றாவதாக ஒரு பெண் புறப்பட்டுள்ளார். 27 வயதான இவரது பெயர் கலிகா மகியுன். லாஸ்வேகாசில் உள்ள "பாங்க் நைட் கிளப்பில்' மார்கெட்டிங் மானேஜராக பணியாற்றுகிறார். இவரிடம் நெருக்கமாக பழகிய உட்ஸ், "தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை" என்று புலம்பியுள்ளாராம்.
No comments:
Post a Comment