துபாய்க்கு தப்பி ஓடிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் உதவியாளரை கைது செய்ய, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத முதலீடு, ஹவாலா பணப் பரிமாற்றம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகிய வழக்குகள் தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மது கோடாவின் சட்ட விரோத நிதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக, சஞ்சய் சவுத்ரி என்பவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. துபாயில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள சவுத்ரி, மது கோடா வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு செய்யவும், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபடவும் உதவியுள்ளார்.
மது கோடா வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து, சவுத்ரி துபாய்க்கு தப்பி ஓடி விட்டதாகத் தெரிகிறது. அவரை கைது செய்வதற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து வேறு நாடுகளுக்கு அவர் தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக, அவரது பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவிடக் கோரி, விரைவில் கோர்ட் உதவியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நாடவுள்ளனர். இதை, அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment