Pages

Wednesday, October 7, 2009

சட்டவிரோத கும்பல்களின் கூடாரமாகும் மலிவு கட்டண ஹோட்டல்கள்


சட்டவிரோத கும்பல்களின் கூடாரமாகும் மலிவு கட்டண ஹோட்டல்கள்


வரிசெலுத்தாத சிகரெட்டுகளைத் திருட்டுத் தனமாக வியாபாரம் செய்யும் சட்டவிரோத கும்பல்கள் மலிவுக் கட்டண ஹோட்டல் அறைகளை சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
வரி செலுத்தாத சிகரெட்டுகளை அத்தகைய ஹோட்டல் அறைகளில் அவர்கள் மறைத்து வைக்கின்றனர்.
அவற்றைப் பாதுகாக்கவும் விநியோகம் செய்யவும் பணமில்லாத வெளிநாட்டினரைப் பயன்படுத்துகின்றனர்.
இதுவரை வீவக வீடுகளிலும் கழிவுப் பொருள்கள் சேமிக்கும் கிடங்கிலும்தான் சட்டவிரோத கும்பல்கள் தங்களது வரி செலுத்தாத பொருள்களைச் சேமித்து வந்தன.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 27 மலிவுக் கட்டண ஹோட்டல் அறைகள் இத்தகைய செயலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இலாகா தெரிவித்துள்ளது.
‘விருந்தினர்’ என்ற போர்வையில் அறையை வாடகைக்கு எடுக்கும் கடத்தல்காரர்கள், விநியோகஸ்தர்கள், சைக்கிளில் விற்பனை செய்பவர்கள் குறித்து கவனமாக இருக்கு மாறு சுங்கத் துறை இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.
இக்குற்றச்சாட்டின் பேரில் எந்த ஹோட்டல் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனினும் ஜனவரி மாதம் முதல் கடத்தல்காரர்களால் நியமிக்கப்பட்ட 10 பேர் பிடிபட்டுள்ளனர்.
லிட்டில் இந்தியா, கேலாங் பகுதிகளில் உள்ள மலிவு கட்டண ஹோட்டல்களில் இவர்கள் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடமிருந்து 4,300 வரிசெலுத்தாத சிகரெட் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை இலாகாவின் அறிக்கை தெரிவித்தது.

06/10/2009 Nantri Singapore tamilmurasu

No comments:

Post a Comment