Pages

Wednesday, October 7, 2009

அ.தி .மு .க. செயலாளர் ஜெயலலிதாவின் இலங்கை அகதிகள் பற்றி நிஜ கொள்கை என்ன ?




சென்னை : "சுய நிர்ணயத்திற்கான இலங் கைத் தமிழர்களின் போராட் டத்தை சிதைப்பதற்கு உடந்தையாக இருந்த கருணாநிதி, தற்போது இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டிள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்துக்கு, 1984ம் ஆண்டிலிருந்து வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என, ஸ்டாலின் தீர்மானம் படித்து, தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி வழங்கப்படும் என்று, மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி "செம்மொழி' பிரகடனத்தைப் போல், கூடுதலாக எந்தப் பயனும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை.


"நிரந்தரக் குடியுரிமை' என்ற காரணமாக, அவர்களுடைய தற்போதைய நிலையில் என்னென்ன முன்னேற்றம் ஏற்படும்? முகாம்களிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா? கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட், இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கிற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து இவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்? இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியான்மர் மற்றும் திபெத்திலிருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமை தகுதி குறித்து, இந்திய அரசு என்ன முடிவு எடுக்கும்? இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இப்பிரச்னையை எழுப்பி, இது "மிக முக்கியத்துவம் வாய்ந்தது' என்று அவர் கூறியிருக்கிறார்.


இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு உதவியாகவும், உடந்தையாகவும் இந்திய அரசு இருந்துவரும் காலகட்டத்தில் இருந்தே மத்திய அரசில் ஒட்டிக்கொண்டிருப்பதால், தமிழின ஆதரவாளர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதியின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது. கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட 2010ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு முயற்சியும், உலகத் தமிழ் ஆதரவாளர்களால் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்து, தமிழ்ச் சமுதாயத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், துணிச்சலாக மற்றொரு பூதத் தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்.


இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று, தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950களில், "சிங்களர்கள் மட்டும்' மற்றும் "தரப்படுத்தல்' கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகால போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment