Pages

Wednesday, October 7, 2009

மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படி


மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படி
இரு மகள்களை மானபங்கம் செய்த தந்தைக்கு நேற்று கீழ் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20 பிரம்படித் தண்டனையும் விதித்தது.
கடல்துறை தொடர்பான வேலை மேற்பார்வையாளராக வேலை செய்த அந்த 49 வயது தந்தைக்கு இந்த கடும் தண்டனை கொடுத்த மாவட்ட நீதிபதி திரு சார்ஜிட் சிங், இதுபோன்ற நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள முடியாது என்பது தெளிவாக உணர்த்தப்படவேண்டும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை, தமது மகள்களுக்குச் செய்த செயல் மோசமானது, வெறுப்படையச்செய்வது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய தந்தை, தமது பாலியல் ஆசையில் திருப்தி அடைய எல்லையை மீறிவிட்டார் என நீதிபதி கூறினார்.
ஆடவர் தம் மீது சுமத்தப்பட ஏழு மோசமான மானபங்க குற்றச் சாட்டுகளையும் ஒரு சாதாரண மானபங்க குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
அவர் மேல் சுமத்தப்பட்ட மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின் போது கருத்தில் கொள்ளப்பட்டன.
குற்றவாளியின் மகள்களுக்கு தற்போது 22 மற்றும் 17 வயதாகிறது.

No comments:

Post a Comment