Pages

Tuesday, October 13, 2009

சினிமாவே வேண்டாம்




சினிமாவே வேண்டாம் என்று திரையுலகை விட்டு விலகிய கருத்தம்மா ராஜஸ்ரீ தற்போது மீண்டும் பீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.


"கருத்தம்மா' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ராஜஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜெயா "டிவி'யில் "நெஞ்சைத் தொட்ட கதைகள்' சீரியல் மற்றும் சத்திய ஜோதியின் "இதயம்' சீரியலிலும் நடித்து வருகிறார். இதுதவிர "அய்யனார்' உட்பட, நான்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருகிறார். வேண்டாம் என்று ஒதுக்கிய பீல்டுக்கு மீண்டும் வந்தது ஏன்? என்று கேட்டால் புன்னகை ததும்ப பேசுகிறார். அவரது பேட்டி:-

பாரதிராஜாவின் "கருத்தம்மா'வுக்கு பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நான்கு வருடத்துக்கு முன்னாடி நடிக்க வேணாம். பீல்டிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். திடீரென்று சீரியல், சினிமான்னு வாய்ப்புகள் வந்தது. நல்ல இடங்களிலிருந்து வந்ததால் மீண்டும் இந்த பீல்டுக்கு வந்திருக்கேன்.

நீங்கள் திரும்பியும் இந்த பீல்டுக்கு வருவதற்கு காரணம் யார்?

நடிப்பாற்றல் இருக்கு. திறமையும்,ஆர்வமும் இருந்தும் ஏன் பீல்டைவிட்டு ஒதுங்கியிருக்கணும். மீண்டும் ஏன் முயற்சிக்க கூடாதான்னு நெருக்கமானவங்க சொன்னாங்க. அப்பத்தான் சத்தியஜோதி பிலிம்ஸ்ல புதிய படத்தில நல்ல கேரக்டர் இருக்கு நீங்க நடிக்கலாமேன்னும் சொன்னாங்க. நானும் அலுவலகத்திற்கு போனேன். அங்கு என்னோட வீடியோ டெஸ்ட் எடுத்தாங்க. மீண்டும் அழைப்பதாக சொல்லி அனுப்பி வச்சாங்க. ஒரு நாள் அழைப்பு வந்தது. போய் பார்த்தபோது டைரக்டர் நித்யா இருந்தார். நான் "கருத்தம்மா' படத்திற்கு முன்பாக சினிமாவுக்கு வர முயன்றபோது, நித்யா சார்தான் ஸ்டில்ஸ்செல்லாம் எடுத்து கொடுத்தார். அப்புறம் கன்னட படத்தில் வாய்ப்பு கிடைச்சு போய் விட்டேன். பிறகு "கருத்தம்மா' கிடைத்தது. படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சதால "டிவி'க்கு வருவது குறித்து யோசிக்கலை. சத்யஜோதி ஆபீஸ்ல என்னை பார்த்த டைரக்டர் நித்யா "இதயம்'ங்கிற பேர்ல சீரியல் பண்ணப்போறோம். நீ நடிக்கிறியான்னு கேட்டார். சரி சொன்னேன். ஜெயா "டிவி'யில் "இதயம் தொட்ட கதைகள்' சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு நடிகையை பற்றிய கதை அது. பிடிச்சிருந்தது. நடித்தேன்.

சினிமா, டி.வி. பீல்ட் பற்றி உங்கள் கணிப்பு?

சினிமாவிலும் சரி, டி.வி.யிலும் சரி இப்ப வந்திருக்கிற புதிய டைரக்டர்களிடம் நிறைய விஷயமிருக்கு. பிரண்ட்லியா பேசி அவுங்க நினைச்ச மாதிரி ஈசியா வேலை வாங்கிடறாங்க. தேனப்பன் தயாரிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். ராஜமித்ரன் டைரக்டர் பண்றார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். கன்னடத்தில படம் பண்ணிட்டு தமிழுக்கு வந்திருக்கார். ரொம்ப யதார்த்தமா பேசி, சிரமமில்லாம என்னிடம் தேவையான நடிப்பை ஈசியா வெளிகொண்டு வந்திடறார். புதுமுக இயக்குனர்களிடம் நிறைய விஷயமிருக்கு. அவுங்களோட திறமையை மதிச்சு தயாரிப்பாளருங்க வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய பேர் ஜொலிப்பார்கள்.

இந்த பீல்டுக்கு நினைத்து வந்தது நிறைவேறி விட்டதா?

என்ன நினைச்சு இந்த பீல்டுக்கு வந்தேனோ, அது நடந்துக்கிட்டு தானிருக்கு. மக்களுக்கு நல்ல அறிமுகம் கிடைச்சதே பெரிதா நினைக்கிறேன். நிறைய வேலைகளில் பலர் முக்கியமானவங்களா இருக்காங்க. ஆனால் அவுங்களுக்கு மக்களிடம் அறிமுகம் கிடைப்பது கிடையாது. "சினிமா, டி.வி.யில் வருபவங்களுக்கு எளிதாக நல்ல அறிமுகம் கிடைச்சிடுது. சின்ன குழந்தைகூட நடிகர், நடிகரை அடையாளம் தெரிஞ்சுக்கிடறது. இந்த பீல்ட்டை நான் செலக்ட் பண்ணி வந்தது சரிதான்னு சொல்வேன். சந்தோஷமா நினைக்கிறேன்.

சினிமா - டி.வி... எதில் நடிப்பது சிரமம்?

சினிமாவை விட டி.வி.யில் நடிப்பது கஷ்டம். ஒரு நாளைக்கு 2, 3 எபிசோட் கூட எடுப்பாங்க. நிறைய எடுக்கறாங்க, ஏதோ நடிச்சா போதும்ன்னு நடிச்சுட்டு போயிட முடியாது. டி.வி. சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களும், வித்தியாசமான சீரியல்களும் போட்டி போட்டு வந்திட்டிருக்கு. தியேட்டருக்கு போறவங்க படம் சரியில்லைனா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிருக்கோம். கடைசி வரை போவோம்ன்னு இருந்து பார்ப்பாங்க. டி.வி.யில் இந்நிலை இல்லை. சீரியல் பிடிக்லைன்னா மன்னிப்பே கிடையாது. கையில் வைத்திருக்கும் ரிமேட்டை ரசிகர்கள் வில்லனை போல பயன்படுத்தி அடுத்த சேனலுக்கு மாறிடுவர். சீரியலை ரசிகர்கள் முழுத்திருப்தியோடு ரசிக்க வைக்க நடிகர், நடிகைகள் 100 சதவீதம் நடிச்சாத்தான் ரசிகர்களிடம் எடுபடும்.

No comments:

Post a Comment