Pages

Tuesday, October 13, 2009

காமராஜர் பெயரை வைக்க வேண்டும்.




ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் பெயர்: ஜெ., எதிர்ப்பு

சென்னை: நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பெயர் வைக்க அரசு முடிவு செய்திருப்பதற்கு, ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வேளியிட்டுள்ள அறிக்கை: நாட்டுக்காக உழைத்த நல்லவர்களை, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகளை, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களைக் கவுரவிக்க, அவர்களது சேவைகளை பாராட்டி, அவர்களது பெயர்களை மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும், பஸ் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் வைப்பது மரபு. இதற்கு நேர்மாறாக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு, "முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டவும், அங்கு அவர்களின் சிலைகளை நிறுவிடவும் தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. நெல்லையில் 82 வயது முதியவர் ஒருவர், பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பெயர் வைப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கிய காமராஜர் பெயரை ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு வைக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment