Pages

Monday, October 12, 2009

சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை ?




சிக்கனத் தீபாவளி
Mon, 12/10/2009
வரும் சனிக்கிழமை தீபாவளி. அதை முன்னிட்டு இந்த வார இறுதி நாட்களில் தேக்கா களை கட்டி இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் கடைகள் இரவு மணி 11 வரை திறந்திருந்தன. எனினும் பொருளியல் மந்த நிலையால் ஏற்பட்ட வேலை இழப்பாலும் பண நெருக்கடி யினாலும் அதிகமான மக்கள் சிக்கனமாகவே இருக்கின்றனர். “வழக்கமாக $1000 மேல் தீபாவளிக்காகச் செலவு செய்வோம். இந்த ஆண்டு கையைக் கட்டி குறைத்து செலவை பாதியாக்கும் எண்ணத்துடன்தான் கடை கண்ணிக்குச் சென்று வருகிறோம்.” என்றார் இல்லத்தரசி திருமதி ரா.வள்ளி. “நேற்றும் இன்றும் சற்று வியாபாரம் கூடுதலாக உள்ளது. இது தொடர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி என்று பலகாரக் கடை உரிமையாளரான திருமதி சாந்தி நாயுடு நேற்று சொன்னார். அதே நேரம் தீபாவளி புரட்டாசி சனிக்கிழமை அன்று என்பதால் நிறைய பேர் சைவ உணவையே நாடுகின்றனர். இதனால் கோழி, இறைச்சிக் கடை வியாபாரமும் சற்று சரிந்துவிடும் என்று கருதப்படுகிறது. “புரட்டாசிக் கடைசி சனிக் கிழமை தீபாவளி என்பதால் இந்த ஆண்டு எங்களுக்குத் தீபாவளி சைவம்தான். செலவும் மிச்சம்தான்,” என்கிறார் இல்லத்தரசி திருமதி ஷாமினி ராஜன். துணிமணி வகைகளும் வீட்டு அலங்காரப் பொருட்களும் பலகார வகைகளும் கேம்பல் லேனில் குவிந்து இருந்தாலும் மக்கள் லையில்தான் கண்ணாக இருக்கிறார்கள். “நிறைய வாங்க வேண்டும். அதையும் குறைச்சலான விலையில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவதால் வாடிக்கையாளர்கள் நிறைய பேரம் பேசுகிறார்கள்.” என்றார் கடைக்காரர் ஒருவர்.

No comments:

Post a Comment