Pages

Monday, October 12, 2009

நக்கல் நாகராசன் புதிய பகுதி




சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தான் பேசிய கருத்துக்கள் திரித்துக்கூறப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அவர் அளித்துள்ள விளக்க கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட போது நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்களை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவைச் சேர்ந்த நண்பர்கள் தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.


என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில் என்றே பத்திரிக்கைகளைப் பற்றி நான் சொன்னேன். அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி நான் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிக்கை நண்பர்களும் என்னிடம் இதுகுறித்து பேசினார்கள். நான் பேசிய கருத்துக்கள் ஒட்டுமொத்த பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம். பத்திரிக்கை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துக்கள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த என் பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதாண்ட பல்டி அடிக்கறது ? ஆவேசதுல மைக்கை பிடிச்சிட்டா எல்லாம் வரும் அப்புறம் பல்டி . அண்ணா எல்லாம் நக்கீரன் வீடியோ டேப் பதிவு ஆயிருகுன்னா


-நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment