
இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை வர்த்தகத் தொழில் அமைச்சு உயர்த்தியுள்ளது.
பொருளியல் இவ்வாண்டு 2.5 விழுக்காட்டுக்கும் 2 விழுக்காட்டுக்கும் இடையில் சுருங்கும்.
இனி அடுத்து என்ன நடக்கும், சிங்கப்பூர் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போது எழும் கேள்வி என்றார் திரு லீ.
முக்கிய நாடுகளின் பொருளியல் நிலைப்பட்டிருப்பதாகவும், 2010ம் ஆண்டில் ஓரளவு வளர்ச்சி கிட்டும் என்றும் அனைத்துலகப் பணநிதியம் கூறுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இதுவரை ஏற்பட்டுள்ள பொருளியல் வளர்ச்சிக்கு அரசாங்கம் செய்யும் ஊக்கச் செலவுகளே காரணம்.
பொருளியல் ஊக்கத் திட்டங்கள் முடிவடையும்போது, இந்நாடுகளின் பொருளியல் வளர்ச்சியும் மீண்டும் மெதுவடையக்கூடும்.
அவ்வாறு நேர்ந்தால், சிங்கப்பூரின் வளர்ச்சியும் மந்தமடையும் என்றார் திரு லீ.
இதற்கிடையே, வளர்ச்சி கிட்டினாலும், வேலையின்மை நிலவரம் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கும் என்றார் அவர்.
பொருளியல் மீட்சி நீடித்து நிலைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வரை, நிறுவனங்கள் பெரிய அளவில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கமாட்டா.
எனவே, சிங்கப்பூரர்களும் மந்தமான வளர்ச்சியை அல்லது வேலையின்மை நிலவரத்தைச் சமாளிக்க மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் திரு லீ.
சில நிறுவனங்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளில் சிலவற்றை வேறு நாட்டுக்கு இடம் மாற்றுவதைச் சிங்கப்பூரால் தடுக்கமுடியாது.
ஆனால், புதிய தொழில்களையும் புதிய முதலீட்டாளர்களையும் தொடர்ந்து ஈர்த்து, ஏற்கனவே இங்குள்ள நிறுவனங்கள் இங்கேயே மேலும் ஆழமாக வேரூன்ற சிங்கப்பூரால் உதவ முடியும்.
தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்று, புதிய தொழில் துறைகளில் புதிய வேலைகளில் சேரவேண்டும் என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment