Pages

Saturday, October 10, 2009

4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை




இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து இதனை கைப்பற பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து உஷார் அடைந்த ராணுவம் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடத்தியது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. தலைமை அலுவலகம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன.பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா., உதவி மையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று பெஷாவரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் இன்று ( 10 ம் தேதி சனிக்கிழமை ) காலை துப்பாக்கி சகிதமாக பயங்கரவாதிககள் கும்பலாக ராவல்பிண்டி வந்தனர். வெள்ளை நிற வேனில் வந்தவர்கள் அங்கு உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து பாதுகாப்பில் இருந்தவர்களுக்கும் , பயங்கரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.


4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை :

பல முனைகளில் வந்த பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். வானில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.


ராணுவ தலைமையகத்திற்குள் இருக்கும் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. 2 பேர் பிடிக்கப்பட்டு விட்டதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனையடுத்து பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

No comments:

Post a Comment