Pages

Saturday, October 10, 2009

‘அசாதாரணமான’




‘அசாதாரண’ ஒபாமாவுக்கு அமைதி நோபல் பரிசு


‘அசாதாரணமான’அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரான ஒன்பது மாதங்களுக்கு உள்ளாகவே அவருக்கு மற்றொரு மகுடம்.
‘சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிகையை’ உலகுக்கு அளித்ததற்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் விருதுக் குழு கூறியது.
அனைத்துலக உறவுகளை வலுப் படுத்துவதிலும் மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அவர் மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளை நார்வேயின் நோபல் பரிசு விருது தேர்வுக் குழு பாராட்டியது.
ஒபாமாவைப் போல் உலக கவனத்தை ஈர்த்து சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளிக்கக்கூடியவர்கள் மிக அரிது என குழுவின் அறிக்கை குறிப்பிட்டது.
அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
அணுவாயுதமற்ற உலகை உருவாக்கும் அவரது முயற்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்த தேர்வுக் குழு, “அனைத்துலக அரசியலில் ஒரு புதிய சூழலை” ஒபாமா உருவாக்கியுள்ளார் எனக் கூறியது.
உலகத் தலைவர்கள் பலரும் ஒபாமாவைப் பாராட்டி அவருக்கு நோபல் பரிசு கிடைப்பதை வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment