Saturday, October 10, 2009
லட்டுகே லட்டு
சென்னை:
திருப்பதி லட்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு புவிசார் குறியீடு மற்றும் டிரேட் மார்க் வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: மதுரை நகரை எரித்த பின், கொடுங் கல்லூர் செல்லும் வழியில் கேரளாவில் உள்ள ஆற்றுக்காலுக்கு கண்ணகி வந்ததாக கூறப்படுகிறது. பத்தினித் தெய்வமாக கண்ணகியை இலங்கையில் உள்ளவர்கள் வழிபடுகின்றனர். கேரளாவில் கொடுங்கல்லூர் பகவதி, ஆற்றுக்கால் பகவதி என்றும் வழிபடுகின்றனர்.
கண்ணகியை கவுரப்படுத்துவதற்காக ஆற்றுக்காலில் கோவில் கட்டப்பட்டது. சிலப்பதிகாரம் மூன்றாவது பிரிவில், வஞ்சிக் காண்டத்தில் கேரளாவில் கண்ணகியின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட் டுள்ளது. ஆற்றுக்கால் கோவில், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆற்றுக்கால் கோவில் அறங்காவலர்கள் கடந்த மார்ச் மாதம் டிரேட் மார்க் பதிவு மையத்தை அணுகி, கண்ணகி அம்மனின் உருவத்தை பயன்படுத்த, "டிரேட் மார்க்' பெற்றுள்ளனர்.
இதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்கவரை, வர்த்தக ரீதியில் ஏகபோகமாக ஆக்கியுள்ளனர். பெண்களின் சபரிமலை என்ற பெயருக்கும் "டிரேட் மார்க்' அனுமதி கிடைக்க உள்ளது. திருப்பதி லட்டுக்கு, புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்த மனுவை, அம்மையம் ஏற்றுக் கொண்டுள்ளது. திருப்பதி லட்டை, வேளாண் பொருளாகவோ, கைவினைப் பொருளாகவோ பாகுபடுத்த முடியாது. கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை, வணிக ரீதியிலான பொருளாக கருத முடியாது.
ருசியாக இருப்பதால் மட்டுமே அந்த லட்டுக்கு புகழ் கிடைக்கவில்லை. கடவுளுக்கு பிரசாதமாக படைக்கப்படுவதால் அந்த லட்டுக்கு புனிதத்துவம், தெய்வீகம் கிடைக்கிறது. திருப்பதி வெங்கடேஸ்வர கடவுளை தரிசிப்பவர்களுக்கு மட்டுமே அந்த லட்டு வழங்கப்படுகிறது. இதை வெளியில் எங்கும் வாங்க முடியாது. "பொருள்' என்ற அந்தஸ்தை இது பெறாது. புவிசார் குறியீடு இதற்கு தேவையில்லை. எனவே, திருப்பதி தேவஸ்தானத் துக்கும், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் புவிசார் குறியீடு மற்றும் "டிரேட் மார்க்' வழங்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment