
மதுரை :
சாப்ட்வேர் தொழில்நுட்பம் மூலம் பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் நோக்கில், மதுரை சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்திக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் முருகானந்தம் (54). சிங்கம்புணரி கூட்டுறவு வங்கி மேலாளர். இவரது மகன் முத்து விஜயன் (24). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், மதுரையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
கடந்த 3ம் தேதி தேனி செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை பணத்திற்காக கடத்திக் கொலை செய்த தேனியை சேர்ந்த விக்ரம்தர்மா (21) செல்வம் (20) உசிலம்பட்டி கார் டிரைவர் தினேஷ்குமார் (22) உத்தப்பநாயக்கனூர் அருகே யு.வாடிப்பட்டி முருகேசன் (21) அன்னமார்பட்டி உமேஷ்பாபு (19) கவனம்பட்டி ராஜேஷ் (20) ஆகியோரை மதுரை துணை கமிஷனர் தேன்மொழி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ.,கள் பாஸ்கர், வெங்கட்ராமன், பார்த்திபன், ஜெயராமன், ஏட்டுகள் மோகன்குமார், அமலநாதன், குமார், ஆதிவீரராமபாண்டியன், வெங்கடேசன் கொண்ட தனிப்படை பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.
கொலை நடந்தது எப்படி?
விக்ரம் தர்மா எம்.எஸ்சி.,(சாப்ட்வேர் இன்ஜினியரிங்) படித்தவர். இவர் போலியாக "ப்ரீத்தி ஜையானி டாட் காம்' என்ற பெயரில் தனி வெப்சைட் துவக்கினார். ஒரு பெண் படத்தையும் அதில் உருவாக்கினார். இதில் விக்ரம் தர்மா, தனது மொபைல் போன் எண்ணை பதிவு செய்தார். பெண்கள் பெயரில் பலருக்கு இமெயில் அனுப்பி, வலையில் சிக்கியவர்களை மிரட்டி பணம் பறிக்கத்திட்டமிட்டார். கொரியன் மொபைல் போனை கம்ப்யூட்டரில் இணைத்து, அதிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது குரலை பெண் குரல் போல மாற்றி பேசிவந்தார். முத்துவிஜயன் அந்த எண்ணில் பேசியபோது,"" அக்., 3ல் வைகை அணைக்கு வந்தால் "ப்ரீத்தியை சந்திக்கலாம். அன்று தேனி மாவட்டம் க.விலக்கில் தயாராக இருந்தால் காரில் அழைத்துச் செல்கிறோம்' என விக்ரம்தர்மா கூறினார்.
இதை நம்பிய முத்துவிஜயன் அங்குவர சம்மதித்தார். அவர் கடந்த 3ல் தேனியில் தனது நண்பர் கடை திறப்பு விழாவிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. அன்று க.விலக்கிலிருந்து டாடா சுமோ ( டி.என்.72 டபிள்யூ 5171) காரில் விக்ரம் தர்மா மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேர் முத்து விஜயனை கடத்தினர். முத்து விஜயன் மறுக்கவே, அவரிடமிருந்து 1,050 ரூபாய், மோதிரம், கைக்கடிகாரத்தை பறித்தனர். தங்கள் முகத்தை பார்த்த இவரை விடுவித்தால், ஆபத்து எனக் கருதி அரிவாள், கத்தியால் தாக்கி கொலை செய்து, கொடைக்கானல் "டம்டம்' பாறையிலிருந்து உடலை வீசினர். பின் அவர்கள் முருகானந்தத்திடம் மொபைலில் தொடர்பு கொண்டு, "முத்து விஜயன், ப்ரீத்தியுடன் நெருக்கமாக உள்ள "சிடி' எங்களிடம் உள்ளது. அந்த "சிடி'யை உங்களிடம் ஒப்படைக்க இரண்டு லட்சம் ரூபாய் தரவேண்டும்'' என மிரட்டினர். முருகானந்தம் 50 ஆயிரம் ரூபாய் தர சம்மதித்தார். விக்ரம் தர்மா மற்றும் அவரது நண்பர்கள்," "கடந்த 5ம் தேதி இரவு பணத்துடன் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டும்,' என்றனர். முருகானந்தம் 50 ஆயிரம் ரூபாயுடன் சென்று காத்திருந்தார். யாரும் வரவில்லை. 6ம் தேதி தனது மகனை காணவில்லை என தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
முதல் கொலை:
கைதான விக்ரம் தர்மாவின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். இவரும், செல்வமும் நண்பர்கள். இவர் மூலம் மற்ற கொலையாளிகள் விக்ரம் தர்மாவுக்கு நண்பர்களாகினர். முருகேசன் பி.பி.ஏ., படித்துள்ளார். உமேஷ்பாபு அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஐ.டி., படித்து வந்தவர். ராஜேஷ் கூலித்தொழிலாளி. இவர்கள் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இக்கொலையை செய்தனர்.
மதுரையில் சமீபகாலமாக வித்தியாசமான "ஸ்டைல்'களில் கொலைகள் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கொலை நடந்திருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர் போலீசார்.
தமிழ் நாடே கொலை நகரமாக ஆகி வருகிறது . இது எங்கே போய் முடியபோகிறதோ ? தமிழக போலீசை ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ்சுக்கு ஒப்பிடுவார்கள். சென்னை மற்றும் மதுரை கொலைகள் அந்த பேரை காலி செய்து விடும் போலிருக்கு ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete