Pages

Sunday, October 11, 2009

புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு கருணாநிதியை மிரட்டுகிறது



புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு கருணாநிதியை மிரட்டுகிறது


குட்டி குரைத்து நாய் தலையில் விடிந்த கதையாகச் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு பெரிய அளவில் பூகம்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விளைவுகளின் எதிரொலிகள், மிரட்டல் வடிவில் முதல்வரை எட்டி இருக்கின்றன.
மாநிலப் போலிஸ் விரித்த விபசார ஒழிப்பு வலையில் சிக்கிய புவனேஸ்வரி, தான் மட்டும் இளிச்சவாய்ப் பெண்ணா என்று போலிசிடம் கேட்டார்.

ஏராள நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடும் போது தன்னை மட்டும் போலிஸ் பிடிப்பது ஏன் என்று கேட்டு அத்தகைய நடிகைகளின் பட்டியல் ஒன்றையும் அவர் போலிசிடம் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை மேம்போக்காக செய்தித் தாட்கள் வெளியிட்டன.
ஆனால் ஒரு சில செய்தித்தாட்கள், புவனேஸ்வரி கொடுத்த விவரம் என்று சொல்லி பல நடிகைகளின் விவரங்களை படங் களோடு வெளியிட்டது.

இதை எதிர்த்த திரைப்படக் கலைஞர்கள் சிலர், செய்தியாளர்களை மானம் போகும்படி திட்டினர்.
செய்தித்துறையினர் திரைப்படக் கஙைர்களின் உருவ பொம்மையைக் கொளுத்த முயன்றனர்,
இந்தச் சூழலில், போலிசார், திடீரென்று ஒரு செய்தித்தாள் அலுவலகத்துக்குள் நுழைந்து செய்தியாளர் ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

அவர் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார் என்றாலும் இந்தக் கைது பிரச்சினையைத் தாங்கள் சும்மா விடப்போவ தில்லை என்று செய்தியாளர்கள் சூளுரைத்து இருக்கிறார்கள்.

“முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு நாட்கள் கெடு கொடுத்து இருக்கிறோம். போலிஸ் துறையின் கைது நடவடிக்கைக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதற்காகக் காத்து இருக்கிறோம்.
“இல்லை எனில் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடுவோம்,” என்று செய்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“திரைப்பட நடிகைகள் வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபடுகிறார் களே தவிர ஆடம்பர வாழ்வுக்கு அல்ல” என்று நடிகர் ரஜினிகாந்த கூறியதை ஏற்க முடியாது என்றும் செய்தித்துறையினர் சொல்கிறார்கள்.
திரைப்படத் துறைதான் சமூகத்தைக் கெடுக்கிறது என்று குறை சொல்லும் தமிழகச் செய்தியாளர்களுக்கு இந்திய அமைப்புகளும் ஆதரவுக் கரம் நீட்டி இருக்கின்றன.

ஒரு புறம் கலைஞர்கள், மறுபுறம் செய்தியாளர்கள், வேறு ஒருபுறம் போலிஸ் என்று பலபுறங்களிலும் பல கணைகளை எதிர் நோக்கும் சூழலில் முதல்வரோ, திரைப்படக் கலைஞர்களோடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுக்கு வீடுகட்டித் தரப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்,கமல் முதலான நடிகர்கள் முதல்வரை ஓகோ என்று வானளாவ வாழ்த்தி இருக்கிறார்கள்.


Nantri Tamilmursu , Singapore

No comments:

Post a Comment