Pages

Monday, October 12, 2009

ஜெயா இடத்தை பிடித்த மாயை




ஜெயா இடத்தைப் பிடித்த விஜயகாந்த்


இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மிகப் பெரும் கூட்டத்தைக் கூட்டி உண்ணாவிரதம் இருந்து பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் விஜயகாந்த்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப் படுவதைக் கண்டித்து டில்லியில் செவ்வாய்க் கிழமை விஜயகாந்த் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காணாவிட்டால் வேறு விதமான போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையாக எச்சரித்தார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பேசிய விஜயகாந்த் முதல்வர் கருணாநிதியையும் மன்மோகன் அரசாங்கத்தையும் சாடும் வகையில் பேசினார்.
“அண்ணா கட்சிதான் எனது குடும்பம் என்றார். ஆனால் கருணாநிதியோ, எனது குடும்பம்தான் கட்சி என்கிறார்.
கடந்த சில மாதங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கருணாநிதி டில்லி வந்துள்ளார். அப்போதும் கூட மாநில நலனுக்காக அவர் வரவில்லை. தமிழக மக்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேச வரவில்லை. தனது பிள்ளைகளுக்கு நல்ல துறையைக் கேட்பதற் காக அவர் வந்தார்,” என்றார் விஜயகாந்த்.
உண்ணாவிரதத்தில் பெருமளவில் கூட்டம் கூடியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் வட இந்திய ஊடகங்களில் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் விஜயகாந்த்.
அவரது போராட்டம், கூடிய கூட்டம், பேசிய பேச்சு எல்லாமே பொறுப்பான எதிர்க்கட்சி அதிமுக அல்ல, தேமுதிகதான் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொடநாடு போய் ரொம்ப காலமாகி விட்ட நிலையில், கிட்டத்தட்ட ஜெயலலிதாவை தமிழக மக்கள் மறக்கக்கூடிய நிலைக்கு வந்து விட்டனர்.
விஜயகாந்த் தானே களமிறங்கி போராடுவதால் எதிர்க்கட்சி என்ற இடத்தை நோக்கி மிக வேகமாகவே நகர்ந்து வருகிறார்.
இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட் டோரின் முகங்கள் மட்டுமே நன்கு அறியப் பட்டிருந்த வட இந்தியாவில் இப்போது, விஜயகாந்த் தின் பெயரும் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment