Pages

Friday, October 9, 2009

சிங்கபூரில் தமிழர்களுக்கான பள்ளி

விடுதி வசதியுடன் நான்காவது அனைத்துலக இந்தியப் பள்ளி
Sat, 26/09/2009
- ஷா அபிடா பேகம் -

சிங்கப்பூரில் நான்காவது அனைத்துலக இந்தியப் பள்ளி ஜூரோங் வட்டாரத்தில் அக்டோபர் மாதம் செயல்படத் தொடங்குகிறது.
விடுதி வசதியுடன் கூடிய முதல் அனைத்துலக இந்தியப் பள்ளியான ‘யுவபாரதி’ சிங்கப்பூர் மாணவர் களுடன் மலேசிய, இந்திய மாணவர்களையும் இலக்காகக் கொண்டு செயல்படவுள்ளது.
மலேசிய மாணவர்களுக்கு வசதியாக பள்ளியை ஜோகூர் கடற்பாலம் அருகில் அமைத்துள்ளார் பள்ளி இயக்குனரும் முதல்வருமான டாக்டர் புவனா ஆனந்த்(36).
கோயம்புத்தூரில் செயல்படும் யுவபாரதிப் பொதுப் பள்ளி மாணவர்களுடன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் சுற்றுலா வந்தார் டாக்டர் புவனா.
சிங்கப்பூரின் கல்வி முறையும் சட்ட திட்டங்களும் அவரையும் அவரது மாணவர்களையும் மிகவும் கவர்ந்தன.
இந்தியா திரும்பிய பின்னரும் பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது போன்ற பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடித்தனர். மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ந்தது.
“மேலும் பல இந்திய மாணவர் களுக்கும் சிங்கப்பூர் கல்வி அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு பள்ளியைத் தொடங்க எண்ணி னோம்,” என்றார் டாக்டர் புவனா.
தொடக்தத்தில் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும். பின் கட்டம் கட்டமாக வகுப்புகள் அதிகரிக்கப்படும்.
அக்டோபர் 7ம் தேதி பள்ளி தொடங்கும்போது 200 மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிப் பாடங்களுடன் யோகா, கைவினை போன்ற புறப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவர்.
இப்பள்ளியின் உயர் நிலைத் திட்டத்திற்கு ஐபி பட்டயப் படிப்பு IB Diploma) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு www.yuvabharathi.sg என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம்.


Thanks to Singapore Tamilmurasu.com.sg

No comments:

Post a Comment