Sunday, October 11, 2009
முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள்
கொழும்பு:
தமிழக எம்.பி.க்கள் குழுவினர் நேற்று மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்தனர். அங்கு, வவுனியா சென்று முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா மற்றும் தமிழர் தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும், போரினால் இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் இன்னும் முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் கடந்த 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அகதிகள் முகாம்களை பார்வையிட தமிழக எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எம்.பி.க்கள் குழு இலங்கை செல்ல மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்தது. தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஆரூண் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் ஆகியோர் 9ம் பக்கம் பார்க்க கொழும்பு, அக்.11: தமிழக எம்.பி.க்கள் குழுவினர் நேற்று மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்தனர்.
அங்கு, வவுனியா சென்று முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா மற்றும் தமிழர் தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும், போரினால் இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் இன்னும் முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் கடந்த 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அகதிகள் முகாம்களை பார்வையிட தமிழக எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்று எம்.பி.க்கள் குழு இலங்கை செல்ல மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்தது. தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஆரூண் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த எம்.பி.க்கள் குழுவினர் நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு டி.ஆர்.பாலு தலைமையில் நேற்று பகல் 12.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொழும்பு புறப்பட்டனர். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பூங்கோதை ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்புக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு அவர்களை இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையன் வரவேற்றார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, வவுனியா அகதி முகாம்களுக்கு சென்று தமிழ் மக்களிடம் குறை கேட்கின்றனர். யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கமான தேசிய முன்னணி தலைவர்களையும், பிற தமிழர் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கண்டிக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், கொழும்பில் அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்கள். ஐந்து நாள் பயணத்தை முடித்து விட்டு 14ம் தேதி சென்னை திரும்பியதும் முதல்வர் கருணாநிதியிடம் எம்பிக்கள் குழுவினர் அறிக்கை கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment