Pages

Wednesday, October 14, 2009

புதிய சொகுசுக் கப்பல் துறைமுகம்




சிங்கப்பூரின் இரண்டாம் சொகுசுக் கப்பல் துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ஆனால் திட்டமிட்டதற்கும் ஓராண்டு தாமதமாக 2011ம் ஆண்டுதான் அந்தத் துறைமுகம் கட்டி முடிக்கப்படும்.

இரண்டு கப்பல்களைக் கையாளாக்கூடிய அந்த புதிய துறைமுகத்திற்கு எந்த உயரத்தடையும் இருக்காது. தற்போது கட்டப்படும் உலகின் ஆகப் பெரிய சொகுசுக் கப்பல்களை அத்துறைமுகம் கையாள வல்லது.

அந்த துறைமுகம் ஹார்பர்ஃபிரன்டில் உள்ள சொகுசுக் கப்பல் துறைமுகத்தில் உச்ச நேர நெருக்கடியைக் குறைக்க உதவும்.

மரினா சவுத் பியரில் கட்டப்படும் அத்துறைமுகத்தின் கட்டுமானத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வர்த்தகத் தொழில் அமைச்சர் லிம் ஹங் கியாங், சொகுசுக் கப்பல் துறை அதிக வேகத்தில் வளர்ந்து வரும் உலக சொகுசுத் துறைகளில் ஒன்று என்றார்.

சிங்கப்பூரின் சிறப்பான ஆகாய, கடல் இணைப்புகள் ஆசியாவிற்குச் சிறந்த, உகந்த கப்பல் துறைமுக வாயிலாக விளங்குகிறது என்றும் அமைச்சர் லிம் கூறினார்.

சீனர்களை மையமாகக் கொள்ளாதிருப்பது சிங்கப்பூரின் பலம்:பிரதமர் லீ





ஆசியாவின் வளர்ச்சியைப் பயன்படுத்தி முன்னேற சிங்கப்பூரின் நிலை வலுவாக உள்ளது என்றார் பிரதமர் லீ சியன் லூங்.
அதற்கான காரணங்களை விளக்கிய அவர், பிரெஞ்சு நிறுவனத்தின் தலைமை பொருளியல் வல்லுநர் கூறியதை மேற்கோள் காட்டினார்:
“ஷங்காய், ஹாங்காங் நகரங்கள் போட்டியாக வரலாம். ஆனால் அவை சீனர்களை மையமாகக் கொண்ட நகரங்கள். சிங்கப்பூர் அப்படியல்ல. இது சிங்கப்பூரின் பலம்.
“ஆசியாவில் சிங்கப்பூர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத் திகழ்கிறது. ‘தெளிவான, ஒழுங்கான நிலையான விதிகளைக்’ கொண்ட நிதி மையமாக விளங்குகிறது.
“ஆசியாவின் முக்கிய நிதி மையம், ஏற்றுமதி மையம் என்ற இரு நிலைகளிலும் சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
“சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலையிலிருந்து துரித கதியில் மீண்டு வந்ததற்கு இதுவே முக்கிய காரணம்,” என்று அந்த பொருளியல் வல்லுநர் விவரித்ததாக பிரதமர் சொன்னார்.
இந்த வட்டாரத்தில் காலூன்ற பிரெஞ்சு நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன்படுத்த இவையே காரணம் என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூரை நாடும் ரஷ்ய வர்த்தகர்
இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்யா - சிங்கப்பூர் வர்த்தக கருத்தரங்கிற்காக சிங்கப்பூர் வந்திருந்த ரஷ்ய வர்த்தகர் பற்றி பிரதமர் லீ குறிப்பிட்டார்.
குளியலறை பொருட்களைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ளது.
உலக நாடுகளில் இருந்து தயாரிப்புப் பொருட்களை வாங்கும் கொள்முதல் மையங்கள் லண்டன், ஷென்சென் நகரங்களில் உள்ளன.
இந்த இரு கொள்முதல் மையங்களையும் ஒன்றிணைத்து, உலகக் கொள்முதல் மையத்தை சிங்கப்பூரில் நிறுவ அவர் முடிவெடுத்துள்ளார்.
தமது குடும்பத்துடன் சிங்கப்பூரில் குடியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றார் திரு லீ.

ஜப்பான் நிறுவனங்களின் ஆர்வம்
பிரதமர் லீ ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, சிங்கப்பூரின் பொருளில் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஜப்பானிய வர்த்தகர்கள் பிரதமரிடம் வினவினர்.
இந்த வட்டாரத்தில், உதாரணமாக இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன்படுத்த விழைவதாகக் கூறின.
நீர்வள தொழில்நுட்பநிறுவனங்கள் போன்ற துறைகளைச் சார்ந்த வேறு பல நிறுவனங்கள் சிங்கப்பூருடன் இணைந்து உலகளாவிய திட்டங்களை மேற்கொள்ள விரும்பம் தெரிவித்தன என்றார் பிரதமர்.
ஜப்பானிய நிறுவனங்கள் மட்டுமின்றி, ‘ரோல்ஸ் ராய்ஸ்’, ‘அபட் லபோரட்டரீஸ்’, ‘த்ரீஎம்’ போன்ற பிரபல நிறுவனங்களும் சிங்கப்பூரைத் தளமாகக்கொள்ள விரும்புவதாக லீ கூறினார்.

சிங்கப்பூர்: வேலையின்மை அதிகரிக்கலாம்





இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை வர்த்தகத் தொழில் அமைச்சு உயர்த்தியுள்ளது.
பொருளியல் இவ்வாண்டு 2.5 விழுக்காட்டுக்கும் 2 விழுக்காட்டுக்கும் இடையில் சுருங்கும்.
இனி அடுத்து என்ன நடக்கும், சிங்கப்பூர் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போது எழும் கேள்வி என்றார் திரு லீ.

முக்கிய நாடுகளின் பொருளியல் நிலைப்பட்டிருப்பதாகவும், 2010ம் ஆண்டில் ஓரளவு வளர்ச்சி கிட்டும் என்றும் அனைத்துலகப் பணநிதியம் கூறுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இதுவரை ஏற்பட்டுள்ள பொருளியல் வளர்ச்சிக்கு அரசாங்கம் செய்யும் ஊக்கச் செலவுகளே காரணம்.

பொருளியல் ஊக்கத் திட்டங்கள் முடிவடையும்போது, இந்நாடுகளின் பொருளியல் வளர்ச்சியும் மீண்டும் மெதுவடையக்கூடும்.

அவ்வாறு நேர்ந்தால், சிங்கப்பூரின் வளர்ச்சியும் மந்தமடையும் என்றார் திரு லீ.
இதற்கிடையே, வளர்ச்சி கிட்டினாலும், வேலையின்மை நிலவரம் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கும் என்றார் அவர்.
பொருளியல் மீட்சி நீடித்து நிலைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வரை, நிறுவனங்கள் பெரிய அளவில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கமாட்டா.
எனவே, சிங்கப்பூரர்களும் மந்தமான வளர்ச்சியை அல்லது வேலையின்மை நிலவரத்தைச் சமாளிக்க மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் திரு லீ.
சில நிறுவனங்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளில் சிலவற்றை வேறு நாட்டுக்கு இடம் மாற்றுவதைச் சிங்கப்பூரால் தடுக்கமுடியாது.
ஆனால், புதிய தொழில்களையும் புதிய முதலீட்டாளர்களையும் தொடர்ந்து ஈர்த்து, ஏற்கனவே இங்குள்ள நிறுவனங்கள் இங்கேயே மேலும் ஆழமாக வேரூன்ற சிங்கப்பூரால் உதவ முடியும்.
தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்று, புதிய தொழில் துறைகளில் புதிய வேலைகளில் சேரவேண்டும் என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

நடிகர், நடிகையர் மிரட்டல் பேச்சு




நடிகர், நடிகையர் மிரட்டல் பேச்சு போலீசிடம் விளக்கம் பெற உத்தரவு


சென்னை: நடிகர், நடிகையரின் மிரட்டல் பேச்சுக்கு வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, போலீசாரிடம் இருந்து விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் அன்பழகன் தாக்கல் செய்த மனு:போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு நடிகை, விசாரணையின் போது தெரிவித்த தகவலின்படி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர் கொடுத்த புகாரின் பேரில், செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கடந்த 7ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் கண்டனக் கூட்டம் நடந்தது.


அதில், பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் விதத்தில் நடிகர், நடிகையர் பேசினர். ஆபாசமாக, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். கடந்த 8ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை, பத்திரிகையாளர்கள் 100 பேர் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரினோம்.கண்டனக் கூட்டத்தில், குறிப்பாக நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்கள் விஜயகுமார், விவேக், சத்யராஜ், அருண்குமார், சூர்யா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறு செய்யும் விதத்தில் பேசியுள்ளனர்.


ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அதிக ஆர்வம் காட்டிய போலீசார், நாங்கள் அளித்த புகாரை பொருட்படுத்தவில்லை.நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்கவில்லை. எங்கள் புகாரின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.


இதேபோன்று, இந்திய உழைக் கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல செயலர்அசதுல்லாவும் மனு தாக்கல் செய்திருந்தார்.இவ்வழக்கு நீதிபதி ரகுபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு போலீஸ் தரப்பில் விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 19ம் தேதிக்கு நீதிபதி ரகுபதி தள்ளி வைத்துள்ளார்.

Tuesday, October 13, 2009

சினிமாவே வேண்டாம்




சினிமாவே வேண்டாம் என்று திரையுலகை விட்டு விலகிய கருத்தம்மா ராஜஸ்ரீ தற்போது மீண்டும் பீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.


"கருத்தம்மா' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ராஜஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜெயா "டிவி'யில் "நெஞ்சைத் தொட்ட கதைகள்' சீரியல் மற்றும் சத்திய ஜோதியின் "இதயம்' சீரியலிலும் நடித்து வருகிறார். இதுதவிர "அய்யனார்' உட்பட, நான்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருகிறார். வேண்டாம் என்று ஒதுக்கிய பீல்டுக்கு மீண்டும் வந்தது ஏன்? என்று கேட்டால் புன்னகை ததும்ப பேசுகிறார். அவரது பேட்டி:-

பாரதிராஜாவின் "கருத்தம்மா'வுக்கு பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நான்கு வருடத்துக்கு முன்னாடி நடிக்க வேணாம். பீல்டிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். திடீரென்று சீரியல், சினிமான்னு வாய்ப்புகள் வந்தது. நல்ல இடங்களிலிருந்து வந்ததால் மீண்டும் இந்த பீல்டுக்கு வந்திருக்கேன்.

நீங்கள் திரும்பியும் இந்த பீல்டுக்கு வருவதற்கு காரணம் யார்?

நடிப்பாற்றல் இருக்கு. திறமையும்,ஆர்வமும் இருந்தும் ஏன் பீல்டைவிட்டு ஒதுங்கியிருக்கணும். மீண்டும் ஏன் முயற்சிக்க கூடாதான்னு நெருக்கமானவங்க சொன்னாங்க. அப்பத்தான் சத்தியஜோதி பிலிம்ஸ்ல புதிய படத்தில நல்ல கேரக்டர் இருக்கு நீங்க நடிக்கலாமேன்னும் சொன்னாங்க. நானும் அலுவலகத்திற்கு போனேன். அங்கு என்னோட வீடியோ டெஸ்ட் எடுத்தாங்க. மீண்டும் அழைப்பதாக சொல்லி அனுப்பி வச்சாங்க. ஒரு நாள் அழைப்பு வந்தது. போய் பார்த்தபோது டைரக்டர் நித்யா இருந்தார். நான் "கருத்தம்மா' படத்திற்கு முன்பாக சினிமாவுக்கு வர முயன்றபோது, நித்யா சார்தான் ஸ்டில்ஸ்செல்லாம் எடுத்து கொடுத்தார். அப்புறம் கன்னட படத்தில் வாய்ப்பு கிடைச்சு போய் விட்டேன். பிறகு "கருத்தம்மா' கிடைத்தது. படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சதால "டிவி'க்கு வருவது குறித்து யோசிக்கலை. சத்யஜோதி ஆபீஸ்ல என்னை பார்த்த டைரக்டர் நித்யா "இதயம்'ங்கிற பேர்ல சீரியல் பண்ணப்போறோம். நீ நடிக்கிறியான்னு கேட்டார். சரி சொன்னேன். ஜெயா "டிவி'யில் "இதயம் தொட்ட கதைகள்' சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு நடிகையை பற்றிய கதை அது. பிடிச்சிருந்தது. நடித்தேன்.

சினிமா, டி.வி. பீல்ட் பற்றி உங்கள் கணிப்பு?

சினிமாவிலும் சரி, டி.வி.யிலும் சரி இப்ப வந்திருக்கிற புதிய டைரக்டர்களிடம் நிறைய விஷயமிருக்கு. பிரண்ட்லியா பேசி அவுங்க நினைச்ச மாதிரி ஈசியா வேலை வாங்கிடறாங்க. தேனப்பன் தயாரிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். ராஜமித்ரன் டைரக்டர் பண்றார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். கன்னடத்தில படம் பண்ணிட்டு தமிழுக்கு வந்திருக்கார். ரொம்ப யதார்த்தமா பேசி, சிரமமில்லாம என்னிடம் தேவையான நடிப்பை ஈசியா வெளிகொண்டு வந்திடறார். புதுமுக இயக்குனர்களிடம் நிறைய விஷயமிருக்கு. அவுங்களோட திறமையை மதிச்சு தயாரிப்பாளருங்க வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய பேர் ஜொலிப்பார்கள்.

இந்த பீல்டுக்கு நினைத்து வந்தது நிறைவேறி விட்டதா?

என்ன நினைச்சு இந்த பீல்டுக்கு வந்தேனோ, அது நடந்துக்கிட்டு தானிருக்கு. மக்களுக்கு நல்ல அறிமுகம் கிடைச்சதே பெரிதா நினைக்கிறேன். நிறைய வேலைகளில் பலர் முக்கியமானவங்களா இருக்காங்க. ஆனால் அவுங்களுக்கு மக்களிடம் அறிமுகம் கிடைப்பது கிடையாது. "சினிமா, டி.வி.யில் வருபவங்களுக்கு எளிதாக நல்ல அறிமுகம் கிடைச்சிடுது. சின்ன குழந்தைகூட நடிகர், நடிகரை அடையாளம் தெரிஞ்சுக்கிடறது. இந்த பீல்ட்டை நான் செலக்ட் பண்ணி வந்தது சரிதான்னு சொல்வேன். சந்தோஷமா நினைக்கிறேன்.

சினிமா - டி.வி... எதில் நடிப்பது சிரமம்?

சினிமாவை விட டி.வி.யில் நடிப்பது கஷ்டம். ஒரு நாளைக்கு 2, 3 எபிசோட் கூட எடுப்பாங்க. நிறைய எடுக்கறாங்க, ஏதோ நடிச்சா போதும்ன்னு நடிச்சுட்டு போயிட முடியாது. டி.வி. சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களும், வித்தியாசமான சீரியல்களும் போட்டி போட்டு வந்திட்டிருக்கு. தியேட்டருக்கு போறவங்க படம் சரியில்லைனா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிருக்கோம். கடைசி வரை போவோம்ன்னு இருந்து பார்ப்பாங்க. டி.வி.யில் இந்நிலை இல்லை. சீரியல் பிடிக்லைன்னா மன்னிப்பே கிடையாது. கையில் வைத்திருக்கும் ரிமேட்டை ரசிகர்கள் வில்லனை போல பயன்படுத்தி அடுத்த சேனலுக்கு மாறிடுவர். சீரியலை ரசிகர்கள் முழுத்திருப்தியோடு ரசிக்க வைக்க நடிகர், நடிகைகள் 100 சதவீதம் நடிச்சாத்தான் ரசிகர்களிடம் எடுபடும்.

காமராஜர் பெயரை வைக்க வேண்டும்.




ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் பெயர்: ஜெ., எதிர்ப்பு

சென்னை: நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பெயர் வைக்க அரசு முடிவு செய்திருப்பதற்கு, ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வேளியிட்டுள்ள அறிக்கை: நாட்டுக்காக உழைத்த நல்லவர்களை, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகளை, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களைக் கவுரவிக்க, அவர்களது சேவைகளை பாராட்டி, அவர்களது பெயர்களை மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும், பஸ் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் வைப்பது மரபு. இதற்கு நேர்மாறாக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு, "முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டவும், அங்கு அவர்களின் சிலைகளை நிறுவிடவும் தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. நெல்லையில் 82 வயது முதியவர் ஒருவர், பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் பெயர் வைப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கிய காமராஜர் பெயரை ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு வைக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் காண்கிறது




முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் காண்கிறது: டாக்டர் யாக்கூப்

சிங்கப்பூரில் முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் குடும்ப உறவைக் கட்டிக் காக்கும் அதே வேளையில் முஸ்லிம் சமூகம் மாறும் பொருளியல் சூழலுக்கு ஏற்ப தானும் மாறிக்கொண்டு முன்னேறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
சமூகம் நீண்டகாலம் வளமாக நீடிக்க உடல் நலமும் குடும்ப நிதி வளமும் அவசியம் என்றும் ஆகையால் அவற்றில் சமூகம் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் தனது நோன்புப் பெருநாள் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் தொண்டாற்றுகின்ற, உதவுகின்ற சமூகத் தலைவர்களையும் தொழிலதிபர்கள், ஊழியர்கள் தொண்டூழியர்களையும் டாக்டர் யாக்கூப் பாராட்டினார்.
“மெதுவாக ஆனால் நிச்சயமாக மேலும் பல குடும்பங்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே பொறுப்பு மேற்கொண்டு வருகின்றன,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அந்தக் குடும்பத்தினர் பாடுபட்டு உழைத்து பொருள் ஈட்டி தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.
இதன் மூலம் சிங்கப்பூரின் முன்னேறும் சமூகத்துக்கு முஸ்லிம் சமூகம் உதவ முடிகிறது என்றும் டாக்டர் யாக்கூப் கூறினார்.
தொடர்ந்து முன்னேறும்படி அவர் சமூகத்தை வலியுறுத்தினார்.
“வேறு எதையாவது சொல்வோரால் நாம் நம் கவனத்தைச் சிதறடிக்க வேண்டாம்.
“நீண்ட கால வளப்பத்துக்கு நம் நிதிவளமும் நம் உடல் நலமும் அவசியம்.
“ஆனால் இதற்காக ஒரே குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி உணவு, மகிழ்ச்சி கலந்துறவாடல் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை,” என்று அமைச்சர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கில் இந்திய கிராம வீடுகள் உடைப்பு



பினாங்கில் இந்திய கிராம வீடுகள் உடைப்பு

கோலாலம்பூர்

பினாங்கில் உள்ள இந்திய கிராமமான கம்போங் புவா பாலாவில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை மேம்பாட்டு நிறுவனம் நேற்று மீண்டும் தொடங்கியது.

மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ ஊழியர்கள் வீடுகளை உடைத்து தரைமட்டமாக்குவதற்கான தளவாடங்களுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்.

அந்தப் பணிக்கு வசதியாக அந்த கிராமத்தின் எல்லா நுழைவாயில்களிலும் வெளியேறும் வழிகளிலும் நேற்று போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அந்த கிராம குடியிருப்பாளர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் அதற்குள் நுழையவிடாமல் தடுப்பது அதன் நோக்கம்.

அந்த கிராம குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் அங்குள்ள வீடுகளைத் தகர்க்கும் பணியை அந்த நிறுவனம் தொடங்கியது.

அந்த மேம்பாட்டு நிறுவனத்திற்கும் நீதிமன்றப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்றைய தகர்க்கும் பணி தொடங்கியதாக போலிஸ் உயர் அதிகாரி அசாம் அப்துல் ஹமீது கூறினார். குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் ஆனால் மேம்பாட்டு நிறுவனமும் நீதிமன்றமும் வீடுகளைத் தகர்க்கும் பணியை நேற்றே தொடங்கத் தீர்மானித்ததாகவும் அப்துல் ஹமீது கூறினார். நூஸ்மெட்ரோ ஊழியர்கள் வீடுகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது குடியிருப்பாளர்கள் பலர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வீடுகைளக் காலி செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் குடியிருப்பாளர்களில் ஒருவரான எம். இந்திராணி என்ற 60 வயதான மாது அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றதாகவும் மற்ற குடியிருப்பாளர்கள் அதைத் தடுத்து நிறுத்தி அவரை வெளியில் அழைத்து வந்ததாகவும் தகவல்கள் கூறின.

நேற்று மட்டும் 17 வீடுகள் இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். சுகுமாறன், பினாங்கு மாநில அரசு மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் அந்த கிராமத்திற்குள் நுழைய அனுமதித்தற்காக குடியிருப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 3, 13 தேதிகளில் அந்த வீடுகளைத் தகர்க்க நூஸ்மெட்ரோ மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிலத்தை விலைக்கு வாங்கிய நூஸ்மெட்ரோ நிறுவனம் அந்த இடத்தில் கண்டோமினிய வீடுகளைக் கட்டவிருக்கிறது. அந்த கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சில குடியிருப்பாளர்கள் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்டபோதிலும் இனி எந்த சலுகையும் வழங்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

courtesy : The Star

இந்திய இசைத் தேர்வில் ஆண்ட்ரூ சாதனை


இந்திய இசைத் தேர்வில் ஆண்ட்ரூ சாதனை

உலகின் முதல் இசை தமிழ் இசைதான் என்று ‘அடித்துக்’ கூறும் சீன மாணவர் ஆண்ட்ரூ டேங் இயூ சின் (11) சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் நடத்திய 5ம் நிலை மிருதங்க இசை தேர்வில் முதல் இடம் பெற்றார்.
ஆங்கிலோ சீனப் பள்ளியைச் சேர்ந்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நுண்கலைக் கழகத்தின் இசை நிகழ்ச்சியில் தன¬யாக மிருதங்கம் வாசிப்பார்.
மிருதங்க வித்வான் டி ஆர் சுந்தரேசன¬ன் மாணவரான ஆண்ட்ரூ, இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்.
தந்தை கேலி டேங் தேசிய கல்விக் கழகத்தில் இசை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பல இசைக்கருவி களையும் வாசிக்கும் ஆண்ட்ரூ தமிழ் இசை பயின்றிருப்பதால் மற்ற இசைகளை அறியவும் மெட்டுக்கள் போடவும் எளிதாகிறது என்றார்.

Monday, October 12, 2009

நக்கல் நாகராசன் புதிய பகுதி




சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தான் பேசிய கருத்துக்கள் திரித்துக்கூறப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அவர் அளித்துள்ள விளக்க கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட போது நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்களை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவைச் சேர்ந்த நண்பர்கள் தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.


என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில் என்றே பத்திரிக்கைகளைப் பற்றி நான் சொன்னேன். அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி நான் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிக்கை நண்பர்களும் என்னிடம் இதுகுறித்து பேசினார்கள். நான் பேசிய கருத்துக்கள் ஒட்டுமொத்த பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம். பத்திரிக்கை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துக்கள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த என் பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதாண்ட பல்டி அடிக்கறது ? ஆவேசதுல மைக்கை பிடிச்சிட்டா எல்லாம் வரும் அப்புறம் பல்டி . அண்ணா எல்லாம் நக்கீரன் வீடியோ டேப் பதிவு ஆயிருகுன்னா


-நக்கல் நாகராசன்

சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை ?




சிக்கனத் தீபாவளி
Mon, 12/10/2009
வரும் சனிக்கிழமை தீபாவளி. அதை முன்னிட்டு இந்த வார இறுதி நாட்களில் தேக்கா களை கட்டி இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் கடைகள் இரவு மணி 11 வரை திறந்திருந்தன. எனினும் பொருளியல் மந்த நிலையால் ஏற்பட்ட வேலை இழப்பாலும் பண நெருக்கடி யினாலும் அதிகமான மக்கள் சிக்கனமாகவே இருக்கின்றனர். “வழக்கமாக $1000 மேல் தீபாவளிக்காகச் செலவு செய்வோம். இந்த ஆண்டு கையைக் கட்டி குறைத்து செலவை பாதியாக்கும் எண்ணத்துடன்தான் கடை கண்ணிக்குச் சென்று வருகிறோம்.” என்றார் இல்லத்தரசி திருமதி ரா.வள்ளி. “நேற்றும் இன்றும் சற்று வியாபாரம் கூடுதலாக உள்ளது. இது தொடர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி என்று பலகாரக் கடை உரிமையாளரான திருமதி சாந்தி நாயுடு நேற்று சொன்னார். அதே நேரம் தீபாவளி புரட்டாசி சனிக்கிழமை அன்று என்பதால் நிறைய பேர் சைவ உணவையே நாடுகின்றனர். இதனால் கோழி, இறைச்சிக் கடை வியாபாரமும் சற்று சரிந்துவிடும் என்று கருதப்படுகிறது. “புரட்டாசிக் கடைசி சனிக் கிழமை தீபாவளி என்பதால் இந்த ஆண்டு எங்களுக்குத் தீபாவளி சைவம்தான். செலவும் மிச்சம்தான்,” என்கிறார் இல்லத்தரசி திருமதி ஷாமினி ராஜன். துணிமணி வகைகளும் வீட்டு அலங்காரப் பொருட்களும் பலகார வகைகளும் கேம்பல் லேனில் குவிந்து இருந்தாலும் மக்கள் லையில்தான் கண்ணாக இருக்கிறார்கள். “நிறைய வாங்க வேண்டும். அதையும் குறைச்சலான விலையில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவதால் வாடிக்கையாளர்கள் நிறைய பேரம் பேசுகிறார்கள்.” என்றார் கடைக்காரர் ஒருவர்.

இதுதாங்க சிங்கப்பூர்




அனைவருக்கும் வீடு

குடிமக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது பொது வீடமைப்புத் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடுகளைக் கட்டித் தந்துள்ளது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்.
வீவக வீடுகள் மக்களுக்கு வசதியான வாழ்க்கையைத் தந்ததுடன், வளத்தைப் பெருமளவு பெருக்கவும் உதவியது. சிங்கப்பூரர்களின் சொத்து மதிப்பைக் கூட்டியது.
சிங்கப்பூர் மக்களில் கிட்டத் தட்ட 95 விழுக்காட்டினர் சொந்த வீட்டைப் பெற்றுள்ளனர். இந்தச் சொத்து முதலீட்டை தங்களது ஓய்வு காலத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் லீ சியன் லூங் இரு ஆண்டுகளுக்கு முன் கூறினார்.
வசதி குறைந்த குடும்பங்களின் வளத்தை உயர்த்த உதவிய சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டத்தை பல நாடுகளும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளன.
எனினும் அண்மைய வீட்டு விலை ஏற்றங்கள், சொந்த வீடு என்ற கனவு எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
வீவக வீடுகளின் விலை ஏறக்குறைய தனியார் வீட்டு விலை அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில் மதிப்பைவிடக் கூடுதலாகக் கொடுக்கப்படும் கைப் பணத்தின் அளவும் எக்கச்சக்கமாகக் கூடியிருப்பது சிங்கப்பூரர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தோ பாயோவில் ஒரு மூவறை வீட்டுக்கு சாதனை அளவாக, வீட்டின் மதிப்பைவிட அதிகமாக $70,000 கொடுக்கப் பட்டதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த கூடுதல் தொகையின் அளவு தொடர்ந்து ஏறும் என்றே கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் மக்கள் தொகை ஐந்து மில்லியனாகி உள்ளது. இதில் சுமார் கால் பகுதியினர் வெளிநாட்டவர்கள். நிரந்தரவாசத் தகுதி பெறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 2009ல் 11 விழுக்காட்டைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.
வெளிச் சந்தையில் வீவக வீடுகளை நிரந்தரவாசத் தகுதி உள்ளவர்களும் வாங்க முடியும் என்பதால், வீடுகளுக்கான தேவையும் போட்டியும் கடுமையாகி உள்ளது இந்த விலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம்.
தேவையான அளவுக்கு வீடுகள் கட்டப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டான் உறுதியளித்துள்ளார்.
இந்த ஆண்டில் 9,000 வரையில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை வீவக விற்கவுள்ளது.
மேலும் முதல் முறை வீடு வாங்குவோருக்கு நிச்சயம் வீடு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப வீடுகளை வாங்குங்கள்; வீட்டுத் தேர்வில் நீக்குப்போக்காக இருங்கள்,” என்றும் திரு மா ஆலோசனை வழங்கியுள்ளார்.
யூக வணிகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மக்களின் கவலை தீரவில்லை. இந்த அச்சம் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முக்கியமாக திருமணம் செய்வது, வீடு வாங்குவது, குழந்தை பெறுவது என்பது பல இளையர்களுக்குப் பெரும் பாரமாகத் தோன்றும்.
அதனால் திருமணமாகதவர் எண்ணிக்கை கூடும். குழந்தை பிறப்பு விகிதம் குறையும்.
இந்நிலை ஏற்பட சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதிக்காது என நம்பலாம்.

இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவிடம் கண்ணீர் மல்க தமிழ்மக்கள் முறையீடு






கொழும்பு :

இலங்கை சென்ற தமிழக எம்.பி.,க்கள் குழுவிடம் தங்களது மீள் குடியேற்றம் தொடர்பாக கண்ணீர் மல்க தமிழ்மக்கள் முறையீடு செய்தனர். முகாம்களில் படும் அவஸ்தை குறித்து விளக்கியதோடு, சீக்கிரம் விடிவு காலம் பிறக்க வழி செய்யுங்கள் என மன்றாடி கேட்டுகொண்டனர்..




இலங்கை முகாமில் வாழும் தமிழ்மக்கள் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கென முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 10 பேர் கொண்ட தமிழக எம்.பி.,க்கள் குழு அங்குள்ள முகாம் தமிழர்களை சந்தித்து வருகிறது. முகாம் தமிழர்களை சந்திக்க சனிக்கிழைமை சென்ற குழுவுக்கு இலங்கை அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். இலங்கை சென்றதும் கிழக்கு பகுதி முகாமுக்கு அழைத்து செல்லப்படுவதாக நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அங்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள முகாமில் தான் பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் அங்கு செல்லும் பயணத்தை ரத்து செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள தமிழர்கள் அமைப்பினர் குறை கூறியுள்ளனர்.




யாழ்பாணத்தில் மாணவர் கேள்வி:

யாழ்பாணத்தில் பல்கலை., மாணவர்களுடன் எம்.பி.,கள் குழு கலந்துரையாடியது. அப்போது ஒரு மாணவர், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் இலங்கை தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை தமிழர்களை கொல்லப்போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டதும் குழுவினர் பதில் ஏதும் சொல்லமுடியாமல் திகைத்து போயினர்.




பெண் கலெக்டரிடம் டி. ஆர்.பாலு., கோபம்:

வவுனியா சென்ற போது அங்குள் பெண் கலெக்டர் சார்லசிடம் டி.ஆர்.பாலு., கடுமையாக பேசினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா பகுதி ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சார்லஸ் செய்திருந்தார். அப்போது நீங்கள் யார் ? எங்கள் விஷயங்களில் தலையிடுகிறீர்கள் என டி.ஆர்.பாலு., கோபக்குரலில் கேட்டார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சார்லஸ் கண்ணீர் விட்டு அழுது விட்டார். இதனை பார்த்த கனிமொழி எம்.பி., குறுக்கிட்டு கலெக்டரை சமாதானம் செய்தார். மாவட்ட கலெக்டர் சார்லஸ் நடந்த சம்பவம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு போன் போட்டு சொல்லி விட்டார். தொடர்ந்து தமிழ் கூட்டமைப்பினருடன் குழு கலந்துரையாடியபோது காலம் முடிந்து விட்டது. கூட்டம் முடித்து கொள்ளலாம் என குழுவினர் கூறியதும் தமிழ் கூட்டமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். அவசர, அவசரமாக கூட்டத்தை ஏன் முடித்து கொள்ள வேண்டும் என அங்குள்ள தமிழ் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.




இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.கள் அதிகமாக உள்ளனர். இந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமயில் எம்.பி.,க்கள் சேனாதிராஜா, பொன்னம்பலம், சுரேஷ்பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோருடன் எம். பி.க்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த அமைப்பின் சார்பில் எம்.பி.,க்கள் குழுவிடம் , முகாமில் உள்ள தமிழர்களை அவரவர் சொந்த பகுதிகளில் மீள்குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு கண்ணி வெடிகளை காரணம் காட்டி காலம் தாழ்த்துகிறது என எடுத்துரைத்தனர். அகதிகளை பார்வையிட செல்லும் போது தங்களுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என இக்கூட்டமைப்பினர் குறை கூறியுள்ளனர்.மக்கள் விடுதலை முன்னணியும் இக்குழு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.




கண்ணீர் மல்க தமிழ் மக்கள்: குழுவினரிடம் முகாம் தமிழர்கள் தங்களுக்கு தண்ணீர் கூட முறையாக கிடைப்பதில்லை. 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டுமே தரப்படுகிறது . வழங்கப்படும் தண்ணீரில் 5 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்க முடிகிறது. சுகாதாரக்கேடு சுற்றி ஆக்கிரமித்துள்ளது, தங்களுக்கு நிம்மதியான ஒரு முடிவை அமைத்து தர வேண்டும். விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளனர். முகாம் தமிழர்கள் எம்.பி.,க்கள் குழுவை பார்த்த போது அனைவரும் கண்ணீர் மல்க தழு தழுத்த குரலில் பேசினர். குறிப்பாக தாங்கள் அடிமைப்பட்டு வாழும் நிலை மாறி விரைவில் தங்களது சொந்த பகுதிகளில் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.




எம்.பி.,க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு பி.பி.சி., இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், அனைத்து முகாம்களையும் நேரில் பார்த்து விவரங்களை அறிந்தோம். பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்போம். முகாமில் வாழும் தமிழர்களிடம் சுதந்திரமாக பேச முடிந்ததா என்ற கேள்விக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. தமிழர்கள் அனைவரையும் எம்.பி.,க்கள் குழுவினர் தனித்தனியாக, சுதந்திரமாக, விசாரித்து கொள்ள முடிந்தது. எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ளார்.

மிஸஸ் பச்சன்

ஐஸ்வர்யா ராய் என்ன சொன்னாலும் செய்திதான். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என எல்லா வுட்களுக்கும் நன்கு பரீட்சயமான முகம்தான். அதனால் அவர் பேட்டி கொடுக்கிறார் என்றால் அனைத்து மொழி பத்திரிகையாளர்களும் குவிந்து விடுவார்கள். முன்பெல்லாம் பிரஸ் மீட்டிற்கு வரும் நிருபர்கள் ஐஸ்வர்யா ராயிடம் கேள்வி கேட்கும்போது, மிஸஸ் ஐஸ்வர்யா, மேடம் என்ற‌ே அழைப்பதுண்டு. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வழக்கம்போல நிருபர்கள் மிஸஸ் ஐஸ்வர்யா.. எனத் தொடங்கி கேள்விகை கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் முன் ஐஸ்வர்யா ராய், நீங்கள் மிஸஸ் பச்சன் என்றே என்னை அழையுங்கள் என்று திடீர் நிபந்தனை போட்டார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ராயை, மிஸஸ் பச்சன் என்று நிருபர்கள் அழைத்தனர்

துட்டுதான் பகல் உணவா

சினிமா நட்சத்திரங்கள் பலர் சினிமாவை விட விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தி அதிக வருமானம் பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்தான். 2001ம் ஆண்டில் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது இவரது புகழ் உச்சத்தில் இருந்தது. அதற்குப் பிறகு அவருக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்தன. அவர் 67 வயதை கடந்த போதிலும், விளம்பர உலகில் இன்னமும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இப்போது 20க்கும் அதிகமான விளம்பர படங்களில் தோன்றும் அமிதாப், ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஒரு திரைப்படம் முழுவதும் நடித்து சம்பாதித்ததை இப்போது, சில நிமிடங்களே வரும் விளம்பரத்தில் சம்பாதித்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயா இடத்தை பிடித்த மாயை




ஜெயா இடத்தைப் பிடித்த விஜயகாந்த்


இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மிகப் பெரும் கூட்டத்தைக் கூட்டி உண்ணாவிரதம் இருந்து பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் விஜயகாந்த்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப் படுவதைக் கண்டித்து டில்லியில் செவ்வாய்க் கிழமை விஜயகாந்த் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காணாவிட்டால் வேறு விதமான போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையாக எச்சரித்தார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பேசிய விஜயகாந்த் முதல்வர் கருணாநிதியையும் மன்மோகன் அரசாங்கத்தையும் சாடும் வகையில் பேசினார்.
“அண்ணா கட்சிதான் எனது குடும்பம் என்றார். ஆனால் கருணாநிதியோ, எனது குடும்பம்தான் கட்சி என்கிறார்.
கடந்த சில மாதங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கருணாநிதி டில்லி வந்துள்ளார். அப்போதும் கூட மாநில நலனுக்காக அவர் வரவில்லை. தமிழக மக்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேச வரவில்லை. தனது பிள்ளைகளுக்கு நல்ல துறையைக் கேட்பதற் காக அவர் வந்தார்,” என்றார் விஜயகாந்த்.
உண்ணாவிரதத்தில் பெருமளவில் கூட்டம் கூடியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் வட இந்திய ஊடகங்களில் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் விஜயகாந்த்.
அவரது போராட்டம், கூடிய கூட்டம், பேசிய பேச்சு எல்லாமே பொறுப்பான எதிர்க்கட்சி அதிமுக அல்ல, தேமுதிகதான் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொடநாடு போய் ரொம்ப காலமாகி விட்ட நிலையில், கிட்டத்தட்ட ஜெயலலிதாவை தமிழக மக்கள் மறக்கக்கூடிய நிலைக்கு வந்து விட்டனர்.
விஜயகாந்த் தானே களமிறங்கி போராடுவதால் எதிர்க்கட்சி என்ற இடத்தை நோக்கி மிக வேகமாகவே நகர்ந்து வருகிறார்.
இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட் டோரின் முகங்கள் மட்டுமே நன்கு அறியப் பட்டிருந்த வட இந்தியாவில் இப்போது, விஜயகாந்த் தின் பெயரும் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது.

Sunday, October 11, 2009

இந்தியாவின் முதல் ரூபாய் தாள் எது ?





கண்ணதாசன் , சேலம் .


இந்தியாவின் முதல் ரூபாய் தாள் எது ?

பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்ட ஒரு ரூபாய் . இப்போது இது உங்கள் கையில் இருந்தால் கோடிஸ்வரர் ஆகி விடலாம்.

உலகின் முதல் செய்தி தாள் எது ?

சுமதி , எஸ். ஆர் . எம் .கல்லூரி .


உலகின் முதல் செய்தி தாள் எது ?





Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

ரூபாய் ஐநூறு பரிசு .




புகைப்படம் உதவி தினமலர் சென்னை



ரூபாய் ஐநூறு பரிசு .


படத்தில் இடபுறம் கிழே இருக்கும் பிங்க் கலர் துப்பட்டா போட்ட பெண்மணி தனது புகைப்பட உறுதி அட்டையை அல்லது அடையாள அட்டையை ஸ்கேன் செய்து எங்கள் முகவரிக்கு அனுப்பினால் ரூபாய் ஐநூறு தீபாவளி பரிசாக அனுப்பி வைக்க படும் , இந்த மாதம் கடைசி நாளைக்குள் அனுப்பினாள் பரிசு உண்டு.அதன் பின்னல் அனுப்பினாள் பரிசு தர இயலாது.

உலகின் முதல் புகைபடம் எது ?

போட்டோ தாசன் , ஊட்டி.

உலகின் முதல் புகைபடம் எது ?




The grainy picture above is the world’s first photograph called "View from the Window at Le Gras" (circa 1826), taken and developed by French photographer pioneer Joseph Nicéphore Niépce. He called this process "heliography" or sun drawing – it certainly was a long process: the exposure time was about 8 hours.

courtesy :neataroma.com

அப்போது அமைதியை வாழ்ந்த தமிழன்




சவிதா , கடலூர் .


உங்களால் மறக்க முடியாத இரண்டு புகைப்படங்கள் ?

சிறிலங்காவிற்கு பயணம் போன நேரு இந்திரா அம்மையார் புகைப்படம். சமாதான புறா பார்க்க விட போனார்கள்.கை ஆட்டுவது யாருக்கு ?

இன்னொன்று அழகான மலை பகுதி அதன் அடியில் அப்போது அமைதியை வாழ்ந்த தமிழன்

தமிழன் எல்லாம் எங்கே ?

முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள்







கொழும்பு:

தமிழக எம்.பி.க்கள் குழுவினர் நேற்று மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்தனர். அங்கு, வவுனியா சென்று முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா மற்றும் தமிழர் தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும், போரினால் இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் இன்னும் முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் கடந்த 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அகதிகள் முகாம்களை பார்வையிட தமிழக எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எம்.பி.க்கள் குழு இலங்கை செல்ல மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்தது. தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஆரூண் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் ஆகியோர் 9ம் பக்கம் பார்க்க கொழும்பு, அக்.11: தமிழக எம்.பி.க்கள் குழுவினர் நேற்று மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்தனர்.
அங்கு, வவுனியா சென்று முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா மற்றும் தமிழர் தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும், போரினால் இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் இன்னும் முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.






அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் கடந்த 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அகதிகள் முகாம்களை பார்வையிட தமிழக எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்று எம்.பி.க்கள் குழு இலங்கை செல்ல மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்தது. தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஆரூண் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த எம்.பி.க்கள் குழுவினர் நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு டி.ஆர்.பாலு தலைமையில் நேற்று பகல் 12.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொழும்பு புறப்பட்டனர். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பூங்கோதை ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மதியம் கொழும்பு போய்ச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்புக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு அவர்களை இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையன் வரவேற்றார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, வவுனியா அகதி முகாம்களுக்கு சென்று தமிழ் மக்களிடம் குறை கேட்கின்றனர். யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கமான தேசிய முன்னணி தலைவர்களையும், பிற தமிழர் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கண்டிக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், கொழும்பில் அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகாமா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்கள். ஐந்து நாள் பயணத்தை முடித்து விட்டு 14ம் தேதி சென்னை திரும்பியதும் முதல்வர் கருணாநிதியிடம் எம்பிக்கள் குழுவினர் அறிக்கை கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ளும்.

நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்




முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு


வாஷிங்டன்:

உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.


ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.


அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது

டிவி'யில் செக்ஸ் பற்றி பேசியவருக்கு ஐந்தாண்டு






டிவி'யில் செக்ஸ் பற்றி பேசியவருக்கு ஐந்தாண்டு சிறை

ரியாத்:

சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர், செக்ஸ் பற்றி "டிவி' யில் பேசியதற்காக ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபிய ஏர் - லைன்சில் பணிபுரிபவர் அப்துல் ஜாவீத். லெபனான் நாட்டு "டிவி' சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், இவர் தன்னுடைய செக்ஸ் அனுபவங்களை விளக்கினார்.


இவரது பேட்டி பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி "டிவி'யில் ஒளிபரப் பானது. இவரது அந்தரங்க விஷயங்களை பொது இடத்தில் பேசியதற்காக, 200க்கும் அதிக மான நேயர்கள், ஜாவீத் மீது புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஜாவீத் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த சவுதி கோர்ட், ஜாவீத்துக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ஆயிரம் கசையடிகளையும் தண்டனையாக அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.


அதுமட்டுமல்லாது, இவர் ஐந்தாண்டுகளுக்கு "டிவி' சேனல்களில் பேசக்கூடாது, எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ள ஜாவீத், தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்தியாவின் மதுரை மாநகரில் நடந்த சாப்ட்வேர் உத்தி கொலை




மதுரை :

சாப்ட்வேர் தொழில்நுட்பம் மூலம் பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் நோக்கில், மதுரை சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்திக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் முருகானந்தம் (54). சிங்கம்புணரி கூட்டுறவு வங்கி மேலாளர். இவரது மகன் முத்து விஜயன் (24). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், மதுரையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றினார்.


கடந்த 3ம் தேதி தேனி செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை பணத்திற்காக கடத்திக் கொலை செய்த தேனியை சேர்ந்த விக்ரம்தர்மா (21) செல்வம் (20) உசிலம்பட்டி கார் டிரைவர் தினேஷ்குமார் (22) உத்தப்பநாயக்கனூர் அருகே யு.வாடிப்பட்டி முருகேசன் (21) அன்னமார்பட்டி உமேஷ்பாபு (19) கவனம்பட்டி ராஜேஷ் (20) ஆகியோரை மதுரை துணை கமிஷனர் தேன்மொழி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ.,கள் பாஸ்கர், வெங்கட்ராமன், பார்த்திபன், ஜெயராமன், ஏட்டுகள் மோகன்குமார், அமலநாதன், குமார், ஆதிவீரராமபாண்டியன், வெங்கடேசன் கொண்ட தனிப்படை பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.


கொலை நடந்தது எப்படி?


விக்ரம் தர்மா எம்.எஸ்சி.,(சாப்ட்வேர் இன்ஜினியரிங்) படித்தவர். இவர் போலியாக "ப்ரீத்தி ஜையானி டாட் காம்' என்ற பெயரில் தனி வெப்சைட் துவக்கினார். ஒரு பெண் படத்தையும் அதில் உருவாக்கினார். இதில் விக்ரம் தர்மா, தனது மொபைல் போன் எண்ணை பதிவு செய்தார். பெண்கள் பெயரில் பலருக்கு இமெயில் அனுப்பி, வலையில் சிக்கியவர்களை மிரட்டி பணம் பறிக்கத்திட்டமிட்டார். கொரியன் மொபைல் போனை கம்ப்யூட்டரில் இணைத்து, அதிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது குரலை பெண் குரல் போல மாற்றி பேசிவந்தார். முத்துவிஜயன் அந்த எண்ணில் பேசியபோது,"" அக்., 3ல் வைகை அணைக்கு வந்தால் "ப்ரீத்தியை சந்திக்கலாம். அன்று தேனி மாவட்டம் க.விலக்கில் தயாராக இருந்தால் காரில் அழைத்துச் செல்கிறோம்' என விக்ரம்தர்மா கூறினார்.


இதை நம்பிய முத்துவிஜயன் அங்குவர சம்மதித்தார். அவர் கடந்த 3ல் தேனியில் தனது நண்பர் கடை திறப்பு விழாவிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. அன்று க.விலக்கிலிருந்து டாடா சுமோ ( டி.என்.72 டபிள்யூ 5171) காரில் விக்ரம் தர்மா மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேர் முத்து விஜயனை கடத்தினர். முத்து விஜயன் மறுக்கவே, அவரிடமிருந்து 1,050 ரூபாய், மோதிரம், கைக்கடிகாரத்தை பறித்தனர். தங்கள் முகத்தை பார்த்த இவரை விடுவித்தால், ஆபத்து எனக் கருதி அரிவாள், கத்தியால் தாக்கி கொலை செய்து, கொடைக்கானல் "டம்டம்' பாறையிலிருந்து உடலை வீசினர். பின் அவர்கள் முருகானந்தத்திடம் மொபைலில் தொடர்பு கொண்டு, "முத்து விஜயன், ப்ரீத்தியுடன் நெருக்கமாக உள்ள "சிடி' எங்களிடம் உள்ளது. அந்த "சிடி'யை உங்களிடம் ஒப்படைக்க இரண்டு லட்சம் ரூபாய் தரவேண்டும்'' என மிரட்டினர். முருகானந்தம் 50 ஆயிரம் ரூபாய் தர சம்மதித்தார். விக்ரம் தர்மா மற்றும் அவரது நண்பர்கள்," "கடந்த 5ம் தேதி இரவு பணத்துடன் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டும்,' என்றனர். முருகானந்தம் 50 ஆயிரம் ரூபாயுடன் சென்று காத்திருந்தார். யாரும் வரவில்லை. 6ம் தேதி தனது மகனை காணவில்லை என தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.


முதல் கொலை:


கைதான விக்ரம் தர்மாவின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். இவரும், செல்வமும் நண்பர்கள். இவர் மூலம் மற்ற கொலையாளிகள் விக்ரம் தர்மாவுக்கு நண்பர்களாகினர். முருகேசன் பி.பி.ஏ., படித்துள்ளார். உமேஷ்பாபு அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஐ.டி., படித்து வந்தவர். ராஜேஷ் கூலித்தொழிலாளி. இவர்கள் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இக்கொலையை செய்தனர்.


மதுரையில் சமீபகாலமாக வித்தியாசமான "ஸ்டைல்'களில் கொலைகள் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கொலை நடந்திருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர் போலீசார்.

புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு கருணாநிதியை மிரட்டுகிறது



புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு கருணாநிதியை மிரட்டுகிறது


குட்டி குரைத்து நாய் தலையில் விடிந்த கதையாகச் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி போட்ட அணுகுண்டு பெரிய அளவில் பூகம்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விளைவுகளின் எதிரொலிகள், மிரட்டல் வடிவில் முதல்வரை எட்டி இருக்கின்றன.
மாநிலப் போலிஸ் விரித்த விபசார ஒழிப்பு வலையில் சிக்கிய புவனேஸ்வரி, தான் மட்டும் இளிச்சவாய்ப் பெண்ணா என்று போலிசிடம் கேட்டார்.

ஏராள நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடும் போது தன்னை மட்டும் போலிஸ் பிடிப்பது ஏன் என்று கேட்டு அத்தகைய நடிகைகளின் பட்டியல் ஒன்றையும் அவர் போலிசிடம் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை மேம்போக்காக செய்தித் தாட்கள் வெளியிட்டன.
ஆனால் ஒரு சில செய்தித்தாட்கள், புவனேஸ்வரி கொடுத்த விவரம் என்று சொல்லி பல நடிகைகளின் விவரங்களை படங் களோடு வெளியிட்டது.

இதை எதிர்த்த திரைப்படக் கலைஞர்கள் சிலர், செய்தியாளர்களை மானம் போகும்படி திட்டினர்.
செய்தித்துறையினர் திரைப்படக் கஙைர்களின் உருவ பொம்மையைக் கொளுத்த முயன்றனர்,
இந்தச் சூழலில், போலிசார், திடீரென்று ஒரு செய்தித்தாள் அலுவலகத்துக்குள் நுழைந்து செய்தியாளர் ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

அவர் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார் என்றாலும் இந்தக் கைது பிரச்சினையைத் தாங்கள் சும்மா விடப்போவ தில்லை என்று செய்தியாளர்கள் சூளுரைத்து இருக்கிறார்கள்.

“முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு நாட்கள் கெடு கொடுத்து இருக்கிறோம். போலிஸ் துறையின் கைது நடவடிக்கைக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதற்காகக் காத்து இருக்கிறோம்.
“இல்லை எனில் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடுவோம்,” என்று செய்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“திரைப்பட நடிகைகள் வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபடுகிறார் களே தவிர ஆடம்பர வாழ்வுக்கு அல்ல” என்று நடிகர் ரஜினிகாந்த கூறியதை ஏற்க முடியாது என்றும் செய்தித்துறையினர் சொல்கிறார்கள்.
திரைப்படத் துறைதான் சமூகத்தைக் கெடுக்கிறது என்று குறை சொல்லும் தமிழகச் செய்தியாளர்களுக்கு இந்திய அமைப்புகளும் ஆதரவுக் கரம் நீட்டி இருக்கின்றன.

ஒரு புறம் கலைஞர்கள், மறுபுறம் செய்தியாளர்கள், வேறு ஒருபுறம் போலிஸ் என்று பலபுறங்களிலும் பல கணைகளை எதிர் நோக்கும் சூழலில் முதல்வரோ, திரைப்படக் கலைஞர்களோடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுக்கு வீடுகட்டித் தரப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்,கமல் முதலான நடிகர்கள் முதல்வரை ஓகோ என்று வானளாவ வாழ்த்தி இருக்கிறார்கள்.


Nantri Tamilmursu , Singapore

திருமதி உதயநிதி ஸ்டாலின் மனைவியின் புதிய அவதாரம்



துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் புது அவதாரம் எடுக்கப்போகிறாராம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை கிருத்திகாவுக்கு இருந்ததால் இப்போது புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார். உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் பற்றிய கதையை மையமாக வைத்து ஒரு படத்தை கிருத்திகா இயக்கப் போகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இயக்குனர் அவதாரம் எடுக்கும் கிருத்திகாவுக்கு ஆலோசனை சொல்ல 2 இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

கொலை செய்வதற்கும் கூட இப்போது "அவுட் சோர்சிங்'




லண்டன்:கொலை செய்வதற்கும் கூட இப்போது "அவுட் சோர்சிங்' செய்ய ஆரம்பித்துள் ளனர் என்ற திடுக்கிடும் தகவலை பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


பஞ்சாபிலிருந்து, பல ஆண்டுக்கு முன்பே, பிரிட்டனில் சில இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்காற்றியிருப்பதோடு, இப்போது நல்ல செல்வ வளத்துடனும் இருக்கின்றனர்."இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்களான இவர்களில், ஆண்டுதோறும் 100 பேர் காணாமல் போய்விடுகின்றனர்.


காணாமல் போனவர்களில் சிலர் பஞ்சாபில் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது,' என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து பி.பி.சி., தரப்பில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு இன்னும் தொடர்கிறது.


ஆய்வு அறிக்கையில் பி.பி.சி., கூறியிருப்பதாவது;கொலை செய்வதற்காக "அவுட் சோர்சிங்' (கான்ட்ராக்ட் போல ) செய்வது இப்போது உலகளாவிய அளவில் வளர்ந்து வருகிறது. இதற்கு "சுபாரி' என்று பெயர். இந்த சுபாரி முறையில் ஆண்டுதோறும் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் குடிமக்கள் 100 பேர் காணாமல் போய்விடுகின்றனர். பெரும்பான்மை யும் இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தான் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கான திட்டம் இங்கிலாந்தில் தயாராகிப் பஞ்சாபில் செயல்படுத்தப்படுகிறது.


குடும்பப் பிரச்னை, தொழில் ரீதியான போட்டிகள் இந்தக் கொலைகளுக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.இங்கிலாந்திலிருந்து பஞ்சாபுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் வரும் போது, அவர்களைக் கொலை செய்வதற்காக பஞ்சாபிலுள்ள கூலிக் கொலைகாரர்களுக்கு ஒரு கொலைக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.


பஞ்சாப் மாநில போலீசின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் இந்தக் கொலைகள் பற்றிய ஆதாரங்கள் சரிவர கிடைக்கவில்லை. கொலையாளிகள் பஞ்சாப் போலீசுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிவிடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது . ஆனால், பஞ்சாப் போலீஸ் இதை மறுத்துள்ளது.


இது குறித்து ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஆறு பேர் இந்தியாவில் காணாமல் போயிருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 10, 2009

லட்டுகே லட்டு



சென்னை:

திருப்பதி லட்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு புவிசார் குறியீடு மற்றும் டிரேட் மார்க் வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: மதுரை நகரை எரித்த பின், கொடுங் கல்லூர் செல்லும் வழியில் கேரளாவில் உள்ள ஆற்றுக்காலுக்கு கண்ணகி வந்ததாக கூறப்படுகிறது. பத்தினித் தெய்வமாக கண்ணகியை இலங்கையில் உள்ளவர்கள் வழிபடுகின்றனர். கேரளாவில் கொடுங்கல்லூர் பகவதி, ஆற்றுக்கால் பகவதி என்றும் வழிபடுகின்றனர்.


கண்ணகியை கவுரப்படுத்துவதற்காக ஆற்றுக்காலில் கோவில் கட்டப்பட்டது. சிலப்பதிகாரம் மூன்றாவது பிரிவில், வஞ்சிக் காண்டத்தில் கேரளாவில் கண்ணகியின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட் டுள்ளது. ஆற்றுக்கால் கோவில், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆற்றுக்கால் கோவில் அறங்காவலர்கள் கடந்த மார்ச் மாதம் டிரேட் மார்க் பதிவு மையத்தை அணுகி, கண்ணகி அம்மனின் உருவத்தை பயன்படுத்த, "டிரேட் மார்க்' பெற்றுள்ளனர்.


இதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்கவரை, வர்த்தக ரீதியில் ஏகபோகமாக ஆக்கியுள்ளனர். பெண்களின் சபரிமலை என்ற பெயருக்கும் "டிரேட் மார்க்' அனுமதி கிடைக்க உள்ளது. திருப்பதி லட்டுக்கு, புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்த மனுவை, அம்மையம் ஏற்றுக் கொண்டுள்ளது. திருப்பதி லட்டை, வேளாண் பொருளாகவோ, கைவினைப் பொருளாகவோ பாகுபடுத்த முடியாது. கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை, வணிக ரீதியிலான பொருளாக கருத முடியாது.


ருசியாக இருப்பதால் மட்டுமே அந்த லட்டுக்கு புகழ் கிடைக்கவில்லை. கடவுளுக்கு பிரசாதமாக படைக்கப்படுவதால் அந்த லட்டுக்கு புனிதத்துவம், தெய்வீகம் கிடைக்கிறது. திருப்பதி வெங்கடேஸ்வர கடவுளை தரிசிப்பவர்களுக்கு மட்டுமே அந்த லட்டு வழங்கப்படுகிறது. இதை வெளியில் எங்கும் வாங்க முடியாது. "பொருள்' என்ற அந்தஸ்தை இது பெறாது. புவிசார் குறியீடு இதற்கு தேவையில்லை. எனவே, திருப்பதி தேவஸ்தானத் துக்கும், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் புவிசார் குறியீடு மற்றும் "டிரேட் மார்க்' வழங்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை




இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து இதனை கைப்பற பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து உஷார் அடைந்த ராணுவம் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடத்தியது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. தலைமை அலுவலகம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன.பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா., உதவி மையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று பெஷாவரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் இன்று ( 10 ம் தேதி சனிக்கிழமை ) காலை துப்பாக்கி சகிதமாக பயங்கரவாதிககள் கும்பலாக ராவல்பிண்டி வந்தனர். வெள்ளை நிற வேனில் வந்தவர்கள் அங்கு உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து பாதுகாப்பில் இருந்தவர்களுக்கும் , பயங்கரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.


4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை :

பல முனைகளில் வந்த பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். வானில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.


ராணுவ தலைமையகத்திற்குள் இருக்கும் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. 2 பேர் பிடிக்கப்பட்டு விட்டதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனையடுத்து பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

‘அசாதாரணமான’




‘அசாதாரண’ ஒபாமாவுக்கு அமைதி நோபல் பரிசு


‘அசாதாரணமான’அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரான ஒன்பது மாதங்களுக்கு உள்ளாகவே அவருக்கு மற்றொரு மகுடம்.
‘சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிகையை’ உலகுக்கு அளித்ததற்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் விருதுக் குழு கூறியது.
அனைத்துலக உறவுகளை வலுப் படுத்துவதிலும் மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அவர் மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளை நார்வேயின் நோபல் பரிசு விருது தேர்வுக் குழு பாராட்டியது.
ஒபாமாவைப் போல் உலக கவனத்தை ஈர்த்து சிறந்த எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளிக்கக்கூடியவர்கள் மிக அரிது என குழுவின் அறிக்கை குறிப்பிட்டது.
அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
அணுவாயுதமற்ற உலகை உருவாக்கும் அவரது முயற்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்த தேர்வுக் குழு, “அனைத்துலக அரசியலில் ஒரு புதிய சூழலை” ஒபாமா உருவாக்கியுள்ளார் எனக் கூறியது.
உலகத் தலைவர்கள் பலரும் ஒபாமாவைப் பாராட்டி அவருக்கு நோபல் பரிசு கிடைப்பதை வரவேற்றுள்ளனர்.

Friday, October 9, 2009

ஷூவை கழட்டி அவர் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் விசினார்

அமெரிக்க பத்திரிகையாளர் மீது மாணவர் ஷூ வீச்சு


அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் கிளிப்போர்டு மே என்பவர் நேற்று கராச்சிக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவர் கராச்சியில் பாகிஸ்தான் சர்வதேச உறவுகள் துறையின் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை தடுப்பதில் பாகிஸ்தானின் பங்கு என்ற தலைப்பில் பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது ஷூவை கழட்டி அவர் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் விசினார். அதிர்ஷ்டவசமாக ஷூ மே மீது படவில்லை. உடனடியாக மேவை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.ஷூவை வீசிய மாணவன், அங்கிருந்த கூட்டத்தில் கலந்து தப்பி விட்டார்.

சிங்கபூரில் தமிழர்களுக்கான பள்ளி

விடுதி வசதியுடன் நான்காவது அனைத்துலக இந்தியப் பள்ளி
Sat, 26/09/2009
- ஷா அபிடா பேகம் -

சிங்கப்பூரில் நான்காவது அனைத்துலக இந்தியப் பள்ளி ஜூரோங் வட்டாரத்தில் அக்டோபர் மாதம் செயல்படத் தொடங்குகிறது.
விடுதி வசதியுடன் கூடிய முதல் அனைத்துலக இந்தியப் பள்ளியான ‘யுவபாரதி’ சிங்கப்பூர் மாணவர் களுடன் மலேசிய, இந்திய மாணவர்களையும் இலக்காகக் கொண்டு செயல்படவுள்ளது.
மலேசிய மாணவர்களுக்கு வசதியாக பள்ளியை ஜோகூர் கடற்பாலம் அருகில் அமைத்துள்ளார் பள்ளி இயக்குனரும் முதல்வருமான டாக்டர் புவனா ஆனந்த்(36).
கோயம்புத்தூரில் செயல்படும் யுவபாரதிப் பொதுப் பள்ளி மாணவர்களுடன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் சுற்றுலா வந்தார் டாக்டர் புவனா.
சிங்கப்பூரின் கல்வி முறையும் சட்ட திட்டங்களும் அவரையும் அவரது மாணவர்களையும் மிகவும் கவர்ந்தன.
இந்தியா திரும்பிய பின்னரும் பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது போன்ற பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடித்தனர். மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ந்தது.
“மேலும் பல இந்திய மாணவர் களுக்கும் சிங்கப்பூர் கல்வி அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு பள்ளியைத் தொடங்க எண்ணி னோம்,” என்றார் டாக்டர் புவனா.
தொடக்தத்தில் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும். பின் கட்டம் கட்டமாக வகுப்புகள் அதிகரிக்கப்படும்.
அக்டோபர் 7ம் தேதி பள்ளி தொடங்கும்போது 200 மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிப் பாடங்களுடன் யோகா, கைவினை போன்ற புறப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவர்.
இப்பள்ளியின் உயர் நிலைத் திட்டத்திற்கு ஐபி பட்டயப் படிப்பு IB Diploma) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு www.yuvabharathi.sg என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம்.


Thanks to Singapore Tamilmurasu.com.sg

Thursday, October 8, 2009

indian noble prize winner




ஸ்டாக்ஹோம் : நூறு கோடி இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த, சிதம்பரத்தில் பிறந்து தற்போது, அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு, இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு தரப்படுகிறது.


தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோர், இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம், சிதம்பரத்தில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், கடந்த 1971ம் ஆண்டு, பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கடந்த 1976ம் ஆண்டு, ஓகியோ பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறையில், பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர், இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையை துவக்கினார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறைக்கு மாறினார் ராமகிருஷ்ணன். அங்கு அவர், வகுப்புகள் நடத்தியதோடு, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மவுரிசியோ மாண்டல் என்பவருடன் இணைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.


ராமகிருஷ்ணன், கடந்த 1995ம் ஆண்டு, உட்டா பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர், ஆர்.என்.ஏ.,( ரிபோ நியூக்ளிக் அமிலம் )வில் உள்ள புரோட்டீன்கள் குறித்து ஆய்வு செய்தார். "இ-கோலி' யில் மிகச்சிறிய மூலக்கூறான "ரிபோசோமால்' சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வு தான் இப்பரிசு பெறக் காரணமாக அமைந்தது. கடந்தாண்டு அவர், பிரிட்டன், கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள எம்.ஆர்.சி., மாலிக்குலார் பயாலஜி ஆய்வகத்தில், சேர்ந்தார். அங்கு அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருக்கு, இந்தாண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவருடன், இதே ஆய்வு மேற்கொண்ட தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும், இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.


இதுகுறித்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களை கண்டறிய, இம்மூன்று விஞ்ஞானிகளும், எக்ஸ்-ரே, கிரிஸ்டலோகிராபி முறையை பயன்படுத்தி உள்ளனர். வாழ்க்கைக்கு மிக முக்கியமான ரிபோசோம் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், புதிய வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், டைனமைட் தொழிலதிபராக இருந்த, ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலின் படி, அறிவியல் மற்றும் அமைதிக்காக, கடந்த 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின், கடந்த 1969ம் ஆண்டு முதல், சுவீடன் மத்திய வங்கி, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கத் துவங்கியது.


பள்ளியில் இருந்து விஞ்ஞான ஆர்வம்: விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, "விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்' என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி. ராமனுக்கு அடுத்தபடியாக விஞ்ஞான ஆய்வில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சிதம்பரத்தைச் சேர்ந்த இவர், குஜராத்தில் உள்ள பரோடா பல்கலையில் இயற்பியல் படித்ததற்கு பின் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக சென்று தற்போது, புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.

இம்முறை ஆங்கிலேயருக்கு




இந்தியருக்கு கிடைத்த ‘புக்கர்’ இம்முறை ஆங்கிலேயருக்கு

இலக்கிய உலகில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் புக்கர் பரிசு கடந்த முறை இந்திய எழுத்தாளர் அரவிந்த் அதிகாவுக்கு கிடைத்தது. இந்தாண்டு போட்டியில் இந்திய எழுத்தாளர்கள் இடம் பெறாத நிலையில், இங்கிலாந்து நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் (57), புக்கர் பரிசை வென்றுள்ளார். லண்டனில் செவ்வாயன்று நடந்த நிகழ்ச்சியில் 50,000 பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றார். இப்பரிசை இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அதிகா, அருந்ததி ராய் போன்றோர் பெற்றுள்ளனர்.

Wednesday, October 7, 2009

மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படி


மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படி
இரு மகள்களை மானபங்கம் செய்த தந்தைக்கு நேற்று கீழ் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20 பிரம்படித் தண்டனையும் விதித்தது.
கடல்துறை தொடர்பான வேலை மேற்பார்வையாளராக வேலை செய்த அந்த 49 வயது தந்தைக்கு இந்த கடும் தண்டனை கொடுத்த மாவட்ட நீதிபதி திரு சார்ஜிட் சிங், இதுபோன்ற நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள முடியாது என்பது தெளிவாக உணர்த்தப்படவேண்டும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை, தமது மகள்களுக்குச் செய்த செயல் மோசமானது, வெறுப்படையச்செய்வது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய தந்தை, தமது பாலியல் ஆசையில் திருப்தி அடைய எல்லையை மீறிவிட்டார் என நீதிபதி கூறினார்.
ஆடவர் தம் மீது சுமத்தப்பட ஏழு மோசமான மானபங்க குற்றச் சாட்டுகளையும் ஒரு சாதாரண மானபங்க குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
அவர் மேல் சுமத்தப்பட்ட மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின் போது கருத்தில் கொள்ளப்பட்டன.
குற்றவாளியின் மகள்களுக்கு தற்போது 22 மற்றும் 17 வயதாகிறது.

சட்டவிரோத கும்பல்களின் கூடாரமாகும் மலிவு கட்டண ஹோட்டல்கள்


சட்டவிரோத கும்பல்களின் கூடாரமாகும் மலிவு கட்டண ஹோட்டல்கள்


வரிசெலுத்தாத சிகரெட்டுகளைத் திருட்டுத் தனமாக வியாபாரம் செய்யும் சட்டவிரோத கும்பல்கள் மலிவுக் கட்டண ஹோட்டல் அறைகளை சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
வரி செலுத்தாத சிகரெட்டுகளை அத்தகைய ஹோட்டல் அறைகளில் அவர்கள் மறைத்து வைக்கின்றனர்.
அவற்றைப் பாதுகாக்கவும் விநியோகம் செய்யவும் பணமில்லாத வெளிநாட்டினரைப் பயன்படுத்துகின்றனர்.
இதுவரை வீவக வீடுகளிலும் கழிவுப் பொருள்கள் சேமிக்கும் கிடங்கிலும்தான் சட்டவிரோத கும்பல்கள் தங்களது வரி செலுத்தாத பொருள்களைச் சேமித்து வந்தன.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 27 மலிவுக் கட்டண ஹோட்டல் அறைகள் இத்தகைய செயலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இலாகா தெரிவித்துள்ளது.
‘விருந்தினர்’ என்ற போர்வையில் அறையை வாடகைக்கு எடுக்கும் கடத்தல்காரர்கள், விநியோகஸ்தர்கள், சைக்கிளில் விற்பனை செய்பவர்கள் குறித்து கவனமாக இருக்கு மாறு சுங்கத் துறை இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.
இக்குற்றச்சாட்டின் பேரில் எந்த ஹோட்டல் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனினும் ஜனவரி மாதம் முதல் கடத்தல்காரர்களால் நியமிக்கப்பட்ட 10 பேர் பிடிபட்டுள்ளனர்.
லிட்டில் இந்தியா, கேலாங் பகுதிகளில் உள்ள மலிவு கட்டண ஹோட்டல்களில் இவர்கள் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடமிருந்து 4,300 வரிசெலுத்தாத சிகரெட் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை இலாகாவின் அறிக்கை தெரிவித்தது.

06/10/2009 Nantri Singapore tamilmurasu

அ.தி .மு .க. செயலாளர் ஜெயலலிதாவின் இலங்கை அகதிகள் பற்றி நிஜ கொள்கை என்ன ?




சென்னை : "சுய நிர்ணயத்திற்கான இலங் கைத் தமிழர்களின் போராட் டத்தை சிதைப்பதற்கு உடந்தையாக இருந்த கருணாநிதி, தற்போது இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டிள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்துக்கு, 1984ம் ஆண்டிலிருந்து வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என, ஸ்டாலின் தீர்மானம் படித்து, தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி வழங்கப்படும் என்று, மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி "செம்மொழி' பிரகடனத்தைப் போல், கூடுதலாக எந்தப் பயனும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை.


"நிரந்தரக் குடியுரிமை' என்ற காரணமாக, அவர்களுடைய தற்போதைய நிலையில் என்னென்ன முன்னேற்றம் ஏற்படும்? முகாம்களிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா? கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட், இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கிற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து இவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்? இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியான்மர் மற்றும் திபெத்திலிருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமை தகுதி குறித்து, இந்திய அரசு என்ன முடிவு எடுக்கும்? இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இப்பிரச்னையை எழுப்பி, இது "மிக முக்கியத்துவம் வாய்ந்தது' என்று அவர் கூறியிருக்கிறார்.


இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு உதவியாகவும், உடந்தையாகவும் இந்திய அரசு இருந்துவரும் காலகட்டத்தில் இருந்தே மத்திய அரசில் ஒட்டிக்கொண்டிருப்பதால், தமிழின ஆதரவாளர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதியின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது. கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட 2010ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு முயற்சியும், உலகத் தமிழ் ஆதரவாளர்களால் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்து, தமிழ்ச் சமுதாயத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், துணிச்சலாக மற்றொரு பூதத் தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்.


இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று, தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950களில், "சிங்களர்கள் மட்டும்' மற்றும் "தரப்படுத்தல்' கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகால போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கிளாமர் தமிழ் சினிமா உலகம்




கௌதம நீலாம்பரி , கோவை .

தமிழ் சினிமா உலகம் தெலுங்கை விட கிளாமர் அதிகம் ஆகி விட்டதா ?

படத்தை பார்த்தல் தெரியவில்லை . இன்னும் கொஞ்ச நாளில் சென்சார் என்ற ஓன்று இருக்கிறாரா அது நேர்மையாக செயல் படுகிறதா என்கிற சந்தகம் எல்லாம் எழலாம் ?

Tuesday, October 6, 2009



கதிர் பாரதி , பெங்களூர்.

எந்த மாதிரி குழுவில் சேர்ந்தால் யோகா நிறைவாக காண சிதறல் இல்லாமல் கற்று கொள்ளலாம் ?

இந்த மாதிரி குழுவோடு அல்ல ?

Monday, October 5, 2009

பாவத்திலேயே பெரிய பாவம் எது




இளம்தமிழ் , சென்னை .

பாவத்திலேயே பெரிய பாவம் எது ?

மாமியார் வீட்டில் மருமகன் செய்யும் சம்போகம் .

Saturday, October 3, 2009

இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை?


யோகி , ஸ்ரீரங்கபட்ட்னம் ,


இல்லங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை ?


சிதம்பரம், நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். காலை 9.40 மணிக்கு வந்த சிதம்பரம், அரை மணி நேரம் வரை முதல்வருடன் பேசினார்.தற்போதைய அரசியல் நிலவரம், இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு போன்றவை குறித்து, இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை, அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துவது குறித்து, முதல்வர் சில கருத்துக்களை தெரிவித்தார். அது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கோரி, முதல்வர் அனுப்பிய கடிதம் மத்திய அரசிற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும். இலங்கைக்கு எம்.பி.,க்கள் குழு ஒன்றை அனுப்பி வைப்பது தொடர்பாகவும் முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு சிதம்பரம் கூறினார் .


ஏற்கனவே தமிழ் நாட்டில் வேலை இல்லா பற்றாகுறை ?
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கிழே உள்ள மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.அதனால் கொலை கொள்ளை கற்பழிப்பு என அதிகரித்து கொண்டே போகிறது என்று புள்ளி விவர அடிப்படைகள் சொல்கிறதாம். இதை பற்றியெல்லாம் சிந்தித்து அதற்கு ஒரு முடிவு கட்டி விட்டு மனிதாபின அடிப்படையில் மந்திரி முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்.ஒட்டு வங்கியை மட்டும் சிந்தித்தால் போதாது.

ஞானியின் குழப்பம் குறை மட்டும் சொன்னால் போது





ஸ்கந்தசாமி, சென்னை .

ஞானி குமுதம் இதழில் தனது நண்பரின் சினிமா புத்தகத்தை சேர்பிக்க பல முறை கடிதம் எழுதியும் பலன் இல்லை என்று ஒ பக்கத்தில் புலம்பியிருகிராரே ?

அவ்வளவு அக்கறை இருந்தால் சினிமா உதவி இயக்குனர்கள் சங்கத்தில் முகவரிகளை வாங்கி ஆர்வமிக்க உதவி இயக்குனர்களுக்கு இலவசமாக அளிக்கலாமே ?

நூலக துறைக்கு சமர்பிக்க படிவம் உள்ளது . கட்டணம் கட்ட வேண்டும். முறைபடி பதக்கத்தை அனுப்ப வேண்டும். இதல்லாம் தெரியமால் ஒரு சீனியர் பத்திரிகையாளர் இப்படி துறையை குறை சொல்வது தவறு .

சொகுசு பங்களாவில் உல்லாசம் நடிகை புவனேஸ்வரி





மாதவி, மலேசியா .
சின்ன திரை நடிகைகளின் வழக்கை எப்படி இருக்கும் ?
சிலது இப்படி இருக்கும்.



சென்னை, : சினிமாக்கள், டிவி தொடர்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் அடையாறு இந்திரா நகரில் வசிக்கிறார். இவரது பங்களாவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விபசார கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் சந்திரதாசன் ஆகி யோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை நடத்திய விசாரணையில், வடபழனியை சேர்ந்த பிரபல புரோக்கர் சதீஷ் (27) என்பவர்தான் பல நடிகைகள் மற்றும் துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்துவது தெரிய வந்தது. மாறுவேடத்தில் சென்ற போலீசார், புரோக்கர் சதீஷை சந்தித்து, பெண்கள் வேண்டும் என்று கூறினர்.

உடனே சதீஷ், மூன்றெழுத்து மற்றும் ஐந்தெழுத்து நடிகைகள் சிலரின் பெயர்களை கூறி, அவர்களுக்கு போன் செய்துள்ளார். அவர்கள் படப்பிடிப்புகளில் இருப்பதாக கூறிவிட்டனர். கடைசியில் நடிகை புவனேஸ்வரிக்கு போன் செய்தார். அவர் ஒப்புக் கொண்டு ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். பணம் குறைவாக கொடுத்தால், என்னிடம் உள்ள மும்பை மாடல் அழகிகளிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். போலீசார் ரூ.20 ஆயிரம் கொடுக்க சம்மதிக்கவே, அவர்களை வீட்டுக்கு வரும்படி புவனேஸ் வரி கூறினார். உடனடியாக புவனேஸ்வரி வீட்டுக்கு, மாறுவேட போலீசாரை சதீஷ் அழைத்து சென்றார்.

வீட்டுக்குள் சென்றவுடன் புவனேஸ்வரி பணத்தை கொடுக்கும்படி கேட்டார். போலீசாரும் பணத்தை கொடுத்தனர். அதை புவனேஸ்வரி வாங்கி பீரோவில் வைத்தவுடன் மறைந்திருந்த போலீசார் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்து புவனேஸ்வரியை கைது செய்தனர். வீட்டில் இருந்த 2 மும்பை மாடல் பெண்களை மீட்டனர். சதீஷையும் போலீசார் கைது செய்தனர். வடபழனியில் புவனேஸ்வரி வசித்தபோது 2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது

Friday, October 2, 2009

ஆரோக்கியமான போட்டி




தமிழன்பன் , சென்னை .

நடிகர் கமலஹாசன் ரஜினிகாந்த் எனக்கு ஆரோக்கியமான போட்டி என்று

சொல்லியிருக்கிறாரே ?


எதில் ?

Thursday, October 1, 2009

tamil Nadu Police





அருந்ததி , மலேசியா .


சினிமா நடிகைகள் என்ன கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் உடனே தமிழ் நாட்டு போலீஸ் உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறார்களே ? சமீபத்தில் ஸ்நேகா ?

அட போங்க விஷயம் புரியாத ஆளா இருக்கீங்களே ? அதுங்கோ தனி பவரு ?

puthiya puthagam

மஞ்சுளா ரவி , தென்காசி .ஆதிசங்கரரின் சவுந்தர்யா லகரி உரை எங்கே கிடைக்கும் ?

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை - 600 108. போன்: 044-25267543. ரூ. 75 .

சுய சரிதத்தை படித்தால்




சிவசங்கரன் , கோயம்புத்தூர் .

வாழ்கையில் ஜெயித்தவர்கள் சுய சரிதத்தை படித்தால் எளிதில் ஜெயித்து விடலாமா ?

முடியாது. ஒருத்தர் வழி இன்னொருவருக்கு பொருந்தாது . புத்தகம் விற்று அவர்கள் காசு இன்னும் பார்ப்பார்கள் அவ்வளவுதான்.