Pages

Friday, October 23, 2009

ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை


இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் ராணுவ அதிகாரி ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தாக்குதலில் அந்த ராணுவ அதிகாரியின் கார் ஓட்டுநரும் கொல்லப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் அதில் படுகாயம் அடைந்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அத்தாக்குதல் நடந்துள்ளது. ராணுவ அதிகாரி பிரிகேடியர் மோனுதின் பயணம் செய்த ராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கிக் காரர்கள் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக போலிசார் கூறினார். அத் தாக்குதலில் அந்த ராணுவ வாகனம் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப் பட்டதாகவும் டயர்கள் பழுதடைந்ததாகவும் கண்ணாடிக் கதவுகள் உடைந்து சிதறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.
ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ராணுவத் தளங்கள் மற்றும் அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தென் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த சண்டையில் இதுவரை 170 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்டைக்குப் பயந்து ஏராளமானோர் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமாபாத்தில் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குலில் 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கல்வி நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பொருளியல் 8.9% வளர்ச்சி


பெய்ஜிங்

சீனாவின் பொருளியல் இந்த மூன்றாவது காலாண்டில் 8.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி அபார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
2009-ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் இலக்கு 8 விழுக்காடு. திட்டமிட்டபடி இந்த இலக்கை எட்டி விடுவோம் என்று தேசிய புள்ளிவிவர இலாகா அதிகாரிகள் கூறினர்.
பொருளியல் ஊக்குவிப்பு திட்டங்களுக்காக சீன அரசாங்கம் அதிகம் செலவு செய்தது. அதன் பலனை இப்போது அது அடைந்திருப்பதாக சீன அரசாங்கம் கூறியது.
உலகளாவிய பொருளியல் நெருக்கடியிலிருந்து விடுபட்டு சீனா இவ்வளவு விரைவாக வளர்ச்சியை எட்டியிருப்பது பல நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய நிலையில் பொருளியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு சீனாவின் பொருளியல் ஈரிலக்க வளர்ச்சி கண்டு வந்தது.
உலகிலேயே பொருளியல் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் வரிசையில் சீனா முதலிடத்தில் உள்ளது.

அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க பெற்றோர் விருப்பம்


அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் தொடர்ந்து போதிப்பதற்கான விருப்பத் தேர்வு அனைத்துத் தேசியப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கல்வி பற்றிய பெற்றோர் நடவடிக்கைக் குழு விரும்புகிறது.

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் உள்ள ஏழு பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு, ஆங்கிலத்தில் அறிவியல் கணிதப் பாடங்களைப் போதிக்கும் கொள்கையை கைவிடுவதிலிருந்து தங்களது பிள்ளைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று 97 விழுக்காடு பெற்றோர்கள் விரும்புவதைக் காட்டுவதாக அந்தக் குழுவின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹீம் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்ப்பிப்பதற்காக அறிக்கை ஒன்று கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம் சரவணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலிஸ்காரரை பல்லால் கடித்த எம்.பி


கோலாலம்பூர் மலேசியாவில் ஒரு போலிஸ்காரரைப் பல்லால் கடித்து அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எதிர்க்கட்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று 6 மாதச் சிறைத்தண்டனையும் 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

கெஅடிலான் கட்சியைச் சேர்நத சுவா 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது. தண்டனைக்கு எதிராக சுவா மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து தண்டனை நிறைவேற்றப்படுவதை மாஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி நிறுத்தி வைத்ததாக நீதிமன்றத் தகவல்கள் கூறின. மேல்முறையீட்டில் அத்தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் சுவா, எம்பி பதவியை இழக்க நேரும். முன்னதாக நீதிபதி தமது தீர்ப்பில் சுவாவின் சாட்சியம் வெறும் மறுப்புரையாகத்தான் இருந்தது என்று குறிப்பிட்டார். “எதிர்த்தரப்பு தாக்கல் செய்த வீடியோ ஒளிப்பதிவில்கூட, சுவா கைது செய்யப்படுவதற்கு மறுப்புக்காட்டுவதைத்தான் பார்க்க முடிந்தது,” என்று நீதிபதி முகம்மது பைசி ஷி அபு கூறினார்.

செட்டிநாடு நியூ ரெஸ்டாரண்ட் உணவக உரிமையாளருக்கு 2 மாதச் சிறை


போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்திடம் சமர்ப்பித்து சிங்கப்பூர் நிரந்தரவாச உரிமை பெற்ற இந்திய உணவக இயக்குநர் ஒருவருக்கு நேற்று கீழ் நீதிமன்றம் 2 மாத சிறைத் தண்டனை விதித்தது.
லிட்டில் இந்தியாவில் சந்தர் ரோட்டில் உள்ள செட்டிநாடு நியூ ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தை நடத்தி வரும் இரண்டு பேரில் ஒருவரான தங்கராசு சபாபதி (39) 2004ம் ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாச உரிமையைப் பெற போலி பட்டப் படிப்பு சான்றிதழ் களைச் சமர்ப்பித்தார் என்று கீழ் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தமிழ் நாட்டின் மன்னார்குடியைச் சேர்ந்த சபாபதி, 2001ம் ஆண்டு வேலை அனுமதி அட்டையில் இங்கு வந்தவர்.
அவருக்கு வேலை அனுமதி அட்டை கிடைக்க அப்போது அவருக்கு உதவிய ‘ரவி’ என்ற இந்திய முகவர், உயர்நிலை 4ம் நிலை கல்விச் சான்றிதழ்களை மட்டுமே வைத்திருந்த சபாபதியின் விண்ணப்பப் படிவத்துடன் பாரதிதாசன் பல்கலைக் கழக அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் களையும் இணைத்து சமர்ப்பித்தார்.
அந்த முகவர், சபாபதிக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுக்க 2 லட்சம் ரூபாய் வாங்கியதாவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்கை தொடக்கத்தில் சபாபதிக்குத் தெரியாது என்று சபாபதியை பிரதிநிதித்த வழக்கறிஞர் ராஜன் சுப்பிரமணியம் தண்டனைக் குறைப்பு மனுவில் தெரிவித்திருந்தார்.
2001ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி, சிங்கப்பூர்ப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு 6 மற்றும் 4 வயது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி விட்ட சபாபதி, 2004ம் ஆண்டில் சிங்கப்பூர் நிரந்தர வாசியாக ஆக விண்ணப்பம் செய்தபோது அதே போலி பல்கலைக்கழக சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி மாவட்ட நீதிபதி லியூ தியாம் லெங்கிடம் வாதிட்டார்.
சபாபதி தமது தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருக்கிறார்.
அவர் இப்போது $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காமெடி


காமெடி எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்தியில் காமெடி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

ரசிகர்கள் பார்க்க தயாராய் இருக்கிறார்களா?

- நக்கல் நாகராசன்

தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்து விடுவார்கள்: ரஜினி


"ஒரு தலைவன் பறந்தால், தொண்டர்கள் ஓடி வருவார்கள். நடந்து சென்றால் அவர்கள் படுத்து விடுவார்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

தொழிலாளிகளும், முதலாளிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்ற அரங்கம் இது. சினிமா தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வீடு கட்ட இடத்தை ஜெயலலிதா கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த இடம் தூரமாக இருப்பதாகக் கூறி ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது கொஞ்சம் தூரம் தள்ளி கொடுத்தாலும் அதை வாங்கி கொள்ளுங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனச் சொல்லிய தலைவனின் தோட்டத்தை வனமாக்கி அந்த வனத்தில் தேசிய கட்சிகளையெல்லாம் கலைஞர் இளைப்பாற செய்துள்ளார்.

அண்ணாவின் கழகத்தை வளர்த்தவர் கலைஞர். பராசக்தி படம் இல்லை பாடம். மனோகராவில் வந்த இரும்பு சங்கிலிகள் உடையும் காட்சியின் போது படக்குழு, இறைவனின் சக்தியில் சங்கிலிகளை உடையுமாறு அமைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். ஆனால் கலைஞர் தன் வசனங்களால் அந்த சங்கிலிகள் உடையுமாறு ஆக்கினார். கலைஞரின் எழுத்துகளின் வேகத்தில் அந்த சங்கிலி உடைந்தது. எழுதுகோலை செங்கோல் ஆக்கியது நீங்கள் மட்டும் தான். அதனால்தான் எழுதுகோலை நீங்கள் இன்னும் அருகிலே வைத்திருக்கிறீர்கள்.

கலைஞர் ஏன் எப்படி உழைக்கிறார் என யோசித்துப் பார்க்கிறேன். ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டர்கள் ஓடி வருவார்கள். தலைவன் ஓடினால் தொண்டர்கள் நடக்கத் தொடங்கி விடுவார்கள். தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்து விடுவார்கள். கலைஞருக்கு உலக கலை படைப்பாளி விருது மகிழ்ச்சிக்குரியது.

இருபத்தியிரண்டு ஆயிரம் கோடி ஊழல்



"2-ஜி ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

புதிதாக தொலைத் தொடர்பு சேவை தொடங்கிய நிறுவனங்கள் சிலவற்றுக்கு அலைக்கற்றை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

2008-ம் ஆண்டு 8 புதிய நிறுவனங்களுக்கு செல்போன் சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக 4.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. லைசென்ஸ் பெற்ற "யுனிடெக்' மற்றும் "ஸ்வான் டெலிகாம்' நிறுவனங்கள் சேவையைத் தொடங்கும் முன்பாகவே அதிக விலைக்கு வேறு நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்தன. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்கு செலுத்திய கட்டணத்தை விட பல மடங்கு அதிக விலைக்கு பங்குகளை விற்பனை செய்தன.

சந்தை மதிப்பைவிட மிகக் குறைந்த விலையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) அதிகாரிகள் தில்லியில் உள்ள சஞ்சார் பவன் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

வயர்லெஸ் திட்ட பிரிவுதான் (டபிள்யூபிசி) உரிமங்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே முதலில் இப்பிரிவில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சேவைப்பிரிவின் துணை இயக்குநர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, 1994-ம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படிதான் உரிமங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.

உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனவரி 2008-ம் ஆண்டிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.

இருபதியிரண்டயிரம் கோடிக்கு எத்தனை சைபர் நைனா ?

- நக்கல் நாகராசன்

Thursday, October 22, 2009

நடிகையின் காஸ்ட்யூம்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுபவர்கள்


"இளைய தலைமுறை கவிஞர்களுக்கு ஒரு படத்தில் அனைத்துப் பாடலையும் எழுதக்கூடிய வாய்ப்புகள் அரிதாகத்தான் கிடைக்கின்றன. ஒரு இயக்குநரின் படம், ஒரு கேமராமேனின் படம், ஒரு இசையமைப்பாளரின் படம் என்றுதான் படங்களைச் சுட்டி காட்டுகிறார்கள். ஒரு கவிஞரின் படம் இது என யாரும் சுட்டி காட்டுவதில்லை. கவிஞர்களும் இது என்னுடைய படம் என வெளியில் சொல்லிக் மார் தட்டிக் கொள்ள முடிவதில்லை. இதனால் இளைய தலைமுறை கவிஞர்களுக்கு வருத்தம் இருக்கிறது. படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒரு கவிஞன் எழுதும் போது கதை வலுப்படுகிறது. ஒரு சில இயக்குநர்கள்தான் கவிஞர்களுக்கு அனைத்து பாடல்களையும் தருகிறார்கள். அப்படி கொடுக்கப்பட்ட படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது. ஒரு நடிகையின் காஸ்ட்யூம்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுபவர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம்கூடச் சரியாக தருவதில்லை'.சினிமா விழா ஒன்றில் இப்படி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் கவிஞர் சினேகன.

என்ன பண்ண கவிஞரே உங்க சக பாடலாசிரியர்கள் குத்து பாட்டுக்கு அப்படி என்ன செலவு ஆகிட போகுது . விடுங்க இப்பதான் நூற்று கணக்குல பாடல் எழுத கிளம்பி வந்துடங்கலே . தயாரிப்பாளர் என்ன செய்வர் பாவம். அவருக்கு என்ன உங்க மேல கோபமா .இப்படி பேசினா புள்ளி வட்சுருவாங்க

- நக்கல் நாகராசன்

ஜோவின் ட்யூஷன்

முதல் முறையாக "ரத்த சரித்ரா' படம் மூலம் இந்திக்கு செல்கிறார் சூர்யா. இந்தி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்குகிறார். இந்தி கற்பதில் சூர்யாவுக்கு மிகவும் உதவியாக இருப்பது அவரது மனைவி ஜோதிகா. இந்தி நன்கு தெரிந்த ஜோதிகா அந்த மொழியை ஏற்ற இறக்கங்களுடன் எப்படி பேசுவது என்பதை ட்யூஷனாகவே எடுக்கிறாராம்.

முல்லைப் பெரியாறு: தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்


முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு கேரளம் நடத்தும் ஆய்வுப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.
முல்லைபெரியாறில் தற்போதுள்ள அணையில் 136 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது. தமிழகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிவைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அணை பலம் இழந்துவிட்டதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போதுள்ள அணைக்கு அருகிலேயே புதிய அணையை கட்ட கேரளம் முடிவு செய்தது.
இதையொட்டி வனப் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் 6-ம் தேதி, தேசிய உயிரினங்கள் வாரியத்தின் நிலைக் குழு கூட்டத்தில் கேரளத்துக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரளம் மேற்கொள்ளத் தொடங்கியது.
இந்நிலையில் இதை எதிர்த்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரண் ஆஜரானார்.
நீதிபதிகள் டி.கே.ஜெயின், எம்.கே.சர்மா மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு மேற்கொண்டுள்ள சர்வே பணிக்கு தடை விதிக்கக் கோரும் தமிழகத்தின் மனுவை நிராகரித்து அவர்கள் கூறியதாவது:
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி முடிவுறும் முன்பே அதை நிறுத்துவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதற்கான காலம் வந்துவிடவில்லை.
தற்போது கேரளம் மேற்கொண்டுள்ள ஆய்வுப் பணி உடனடியாக முடியக்கூடிய பணி அல்ல. இது பல மாதங்களுக்கு நீடிக்கும். அதேபோல் தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணையும் "ரெடிமேடாக' உடனடியாக வந்துவிடப் போவதில்லை. இதுதொடர்பாக கேரள அமைச்சர் வெளியிட்ட அறிக்கையால் தமிழகம் கவலை அடைந்துள்ளது. அறிக்கை விடுவது தேவையற்றது மற்றும் பொறுப்பற்றதுமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இரு தரப்பு வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மனு மீதான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெறுகிறது.

திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்துக்கான பாலமாகவும், கருவியாகவும் இருக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கேட்டுக்கொண்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 55வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2007-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:
குழந்தைத் திருமணம், வரதட்சிணை மற்றும் போதைக்கு அடிமை ஆகிய சமூக அவலங்களை திரைப்படங்களில் காட்டுவதன் மூலம் ஒரு உயிர் அழிக்கப்படுகிறது. அதேசமயம் இந்த அவலங்கள் காட்டுவதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுகிறது என்றார்.

மணிரத்னத்தின் "ராவணா'

.மணிரத்னத்தின் "ராவணா' படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரியாமணி. "ராவணா' தவிர பிரியாமணிக்கு தமிழில் படம் இல்லை. இதனால் தெலுங்கு, மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமுத்திரகனியின் இயக்கத்தில் "நாடோடிகள்' படம் "சம்போ சிவ சம்போ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் அனன்யா வேடத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி.

vijyakanth latest

சென்னை, அக். 21: ""தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் மொழியின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துரைக்கவும், ஆராயவும் உலகெங்கும் உள்ள தமிழர்களால் நடத்தப்படுவதே உலகத் தமிழ் மாநாடு. 9-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு நடத்த அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய கால அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தை தந்து 2011-ல் நடத்தியிருக்கலாம். ஆனால் ஏட்டிக்குப் போட்டியாக, அனுமதி தரவில்லை என்றால் வேறு பெயரில் நடத்துவேன் என்று அறிவிப்பது சரியல்ல.
உலகத் தமிழ்நாடு நடத்தும் சூழ்நிலை இப்போது இல்லை. சுமார் 3 லட்சம் தமிழர்கள் வெட்டவெளிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்திலும், பிழைக்க வழியின்றி தமிழர்கள் செத்து மடிகின்றனர். தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழர்களின் துயர்துடைக்க தங்களை அர்ப்பணித்துக் கொள்வது கடமையாகும். இதனை விட்டுவிட்டு இந்த நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
1972-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு காவிரியை பறிகொடுத்தது. 1974-ல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. 1998-ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தடைபட்டது. இப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுகிறது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட கேரளம் ஆய்வு நடத்தி வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் நெடிய அரசியல் வரலாற்றில் எப்போது கேட்டாலும் யார் மீதாவது பழி போடுகிறாரே தவிர தமிழகத்துக்காக மத்திய அரசை எதிர்த்து போரிடும் துணிவும், தெளிவும் அவருக்கு இருந்ததில்லை.
இந்த துரோக வரலாற்றை திசைதிருப்பவும், தன் மீதான களங்கத்தை துடைக்கவும் கருணாநிதி கையாளும் தந்திரமே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
தமிழர்களுக்காக தமிழர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு தலைவர் நடத்துவதுதான் உண்மையான உலகத் தமிழ் மாநாடு. எப்படியாவது இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் சிக்கவைத்து கருணாநிதியை துதிபாட வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய துரோக முயற்சிக்கு இடம் தரவேண்டாம் என்று தமிழறிஞர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ்


டில்லியில் நடந்த விழாவில், நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார். தேசிய அளவில் திரைப்பட துறையில் சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கான விருதுகளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அதன்படி, 55வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7ம்தேதி அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக பிரகாஷ் ராஜ் நடித்த காஞ்சிவரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

பக்ரைன் நாட்டில் வசிக்கும் கன்னல்


தமிழரசன் முதன் மு‌தலாக இயக்கி தயாரிக்கும் படம் மாந்தன். தாய் காப்பியம் எனும் பட நிறுவனம் சார்பில் தமிழரசனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் சத்யா, கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பக்ரைன் நாட்டில் வசிக்கும் கன்னல் எனும் தமிழ்ப்பெண் நடிக்கிறார். இப்படத்திற்கு புதியவர் கனி இசையமைக்க பாடல்களை பா.த.மணிமேகலை எழுதியுள்ளார்.

Wednesday, October 21, 2009

சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது

மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா :சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து, மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். நடிகைகளின் ஆபாசம், தனியார் "டிவி' சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது?.

இனி வரும் சினிமாக்களில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றால் அந்த படங்ளை சென்சார் குழு அனுமதிக்கக்கூடாது. முன்னணி இளம் நடிகைகளில் சிலரும் மிகவும் ஆபாசமாக நடிக்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், இருந்தால் இனி ஆபாசமாக நடிக்கக்கூடாது. ஆபாசமாகவே உடை அணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Photo courtesy : Dinamalar daily

singapore writers meet


புதிய ஊடக எழுத்துகளுடன் எழுத்தாளர் விழா
Thu, 22/10/2009
திரைப்படம், நாடகம், இணையம் போன்ற பல்வேறு ஊடக எழுத்தாளர் களுடன் இந்த ஆண்டின் எழுத்தாளர் விழா கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறுaம் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கிட்டத்தட்ட 111 எழுத்தாளர்களும் எழுத்துத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடத்துநர்களும் பங்கேற்கின்றனர்.
எழுச்சி பெற்று வரும் ஆசிய எழுத்துக்கு இந்த ஆண்டு விழா முக்கியத்துவம் கொடுக்கிறது.
நான்கு மொழிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான த.பழமலய், எழுத்தாளர் அப்பள நரசய்யா, இலங்கையில் பிறந்து லண்டனில் வாழும் மாதுமை சிவசுப்ரமணியம் போன்ற வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுடன் சிங்கப்பூரிய் பிரபல எழுத்தாளர்கள் இராம கண்ணபிரான், ஜெயந்தி சங்கர் போன்றோரும் பங்கேற்கின்றனர்.
மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பலரும் தங்களது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிகள் எண் 1, ஓல்ட் பார்லிமெண்ட் ரோட்டில் உள்ள தி ஆர்ட்ஸ் ஹவுஸில் நடைபெறுகின்றன.
விழாவின் தமிழ் நிகழ்ச்சிகள்:
அக்டோபர் 31ம் தேதி மாலை 6.00க்கு எழுத்தாளர் மாதுமையுடன் சந்திப்பு.
அக்டோபர் 31ம் தேதி இரவு 7.00க்கு ‘உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துங்கள்’ பெண் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல்.
நவம்பர் 1 தேதி மாலை 3.00க்கு கலந்துரையாடல். பரிணாம வளர்ச்சியில் புத்தகங்களின் தாக்கம் குறித்து பேசுகின்றனர் - த.பழமலய், அப்பள நரசய்யா, மீரா சாந்த், ராபர்ட் இயோ.
நவம்பர் 1 தேதி, மாலை 4.00க்கு கவிஞர் த.பழமலயுடன் சந்திப்பு.
நவம்பர் 1 தேதி, மாலை 5.00க்கு அப்பள நரசய்யாவுடன் சந்திப்பு.

மேதைகளுக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ

சாவித்திரி , கும்பகோணம் . உங்களால் ஜீரன்னிக்க முடியாத விஷயம் ?

எம் . எஸ் . சுப்புலக்ஷ்மி போன்ற மேதைகளுக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை படங்களில் ரெட்டை அர்த்த வசனம் பேசும் விவேக் வாங்கியது .

- நக்கல் நாகராசன்

ரெட்டை அர்த்தத்தில் சினிமாவில் வெளுத்து கட்டும் நடிகன் விவேக்கிற்கு எதிராக பெண்கள் போர்க்கொடி


சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தி இரட்டை அர்த்தத்தில் ஆபாச வசனம் பேசும் விவேக்கிற்கு எதிராக மனித உரிமைகள் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக திரைப்படங்களில் ஆபாச உடையணிந்து நடிகைகளுக்கு எதிராகவும் கோஷமிடப்பட்டது. மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன் என்று இரட்டை வசனம் பேசும் காமெடி நடிகர் விவேக் போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், கெடுக்காதே கெடுக்காதே தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதே போன்ற பல வசனங்கள் அடங்கிய அட்டை போர்டுகளை தாங்கியபடி பெண்கள் கோஷமிட்டனர்.

Photo : Courtesy Dinamalar Daily

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது


பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச திரைப்பட இசையமைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை பெற்றுக் கொண்ட ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் பேசும்போது, ஸ்லம்டாக் மில்லியனர் படம் தனக்கு ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் டேனி பாயலுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

தலிபான்கள் ஜம்பம் பலிக்காது:

இந்தியா


பாகிஸ்தானில் பயங்கரவாதம் கட்டுக் கடங்காமல் பரவுவதாகத் தெரிவித்துள்ள இந்தியா அந்த நாட்டின் நிலைமை கவலைக் கிடமாக ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் பாகிஸ்தானைப் பாடாய்ப் படுத்தி வரும் தலிபான்களின் ஜம்பம் இந்தியாவிடம் பலிக்காது என்றும் புதுடில்லி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் ஹக்கிமுல்லா மெசூத், இந்தியாவுக்கு எதிராகப் போராடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார்.
இதுபற்றி இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்ல தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும், எந்தக் கோணத்தில் வந்தாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது.
“தலிபான்கள் ஜம்பம் இந்தியாவிடம் பலிக்காது,” என்று சொன்னார்.
“மும்பையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து இந்தியா உரிய பாடம் படித்துள்ளது.
“மீண்டும் அத்தகைய சம்பவம் எதுவும் நிகழாது.
“கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது,” என்று அமைச்சர் அந்தோனி மேலும் சொன்னார்.
“சீனா உள்பட எந்த நாட்டுடனும் பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
“இந்தியாவின் எல்லைகள் பாதுகாக்கப்படும். அதே வேளையில் பக்கத்து நாடுகளுடன் நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசை உருவாக்கப்பட தலிபான்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்து விட்டனர். இதன் விளைவாக பாகிஸ்தானில் பல இடங்களிலும் வன்செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன.
ஏராள குண்டு வெடிப்புகள் மரணங்கள் தற்கொலைத் தாக்குதல்கள் நடக்கின்றன.
இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் திரு அந்தோனி, “பாகிஸ்தானின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது,” என்று சொன்னார்.
“பாகிஸ்தானில் தீவிரவாதம் பரவிவிட்டது.
“பாகிஸ்தான் இதை உண்மையாகவும் உணர்வுப்பூர் வமாகவும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும்.
“பாகிஸ்தானில் பரவிவரும் தீவிரவாதம் உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.
“தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.
“அமைதியை விரும்பும் நாடு களுக்கு தீவிரவாதத்தின் வளர்ச்சி கடும் சவாலாக உள்ளது,” என்று இந்திய அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே இந்திய எல்லைகளிலும் கடலோரப் பகுதிகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்தியத் தகவல்கள் நேற்றுத் தெரிவித்தன.

Tue, 20/10/2009

Monday, October 19, 2009

ஓடாத படத்தை கொடுத்த

நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நான் கடவுள் படத்தை தயாரித்த வாசன் விஷூவல் வெஞ்சர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்படத்தின் நாயகனாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். சிவா மனசுல சக்தி என்கிற ஓடாத படத்தை கொடுத்த ராஜேஷ்தான் பாஸ் படத்தையும் இயக்குகிறார்.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பெண் சிங்கம் ரம்பா

முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் உருவாகி வரும் பெண் சிங்கம் படத்தில் நடிகை ரம்பா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கலைஞர் எழுதிய சுருளிமலை எனும் நாவலை அடிப்படையாக கொண்ட அந்த படத்தை பாலி ஸ்ரீரங்கம் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் நாயகனாக உதய் கிரணும், நாயகியாக மீரா ஜாஸ்மீனும் நடிக்கிறார்கள். தேவா இசைய‌மைக்கிறார். படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ரம்பா நடிக்கவுள்ளார். பெண் சிங்கம் படத்தினை இயக்கும் பாலிஸ ஸ்ரீரங்கம் ஏற்கனவே கருணாநிதி கதை வசனத்தில் தாய் காவியம் படத்தை இயக்க இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

போக்கிரி சல்மான்கான்


சல்மான்கானை வைத்து மீண்டும் படம் ஒன்றை இயக்க, நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனிகப்பூர் . இந்த படத்தில் அனைவரும் விரும்பும் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க உள்ளார். ஏற்கனவே, தமிழில் வெளியான போக்கிரி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்த பிரபுதேவா. அந்த படத்திற்கு வான்டட் என்று பெயரிட்டு சல்மான்கானை ஹீரோவாக நடிக்க வைத்து இருந்தார். விரைவில் சல்மான்கான் பிரபுதேவா கூட்டணியுடன் மற்றொரு படத்தை எதிர்பார்க்கலாம்
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள டிபன் பைட்ஸ் என்ற பாஸ்ட் புட் உணவகத்தை, தனது காதலர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து விலைக்கு வாங்கி உள்ளார் ஷில்பா. உணவகத்தின் 22 சதவீத பங்கு‌களை ரூ. 45 கோடி கொடுத்து இருவரும் வாங்கி உள்ளனர். ஷில்பா இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட உணவகத்தை நிறுவியவரான ஜமால் ஹிராணி என்பவரை வலுக்கட்டயமாக வெளியேற்றி உள்ளனர் அவரது பிற பங்குதாரர்கள். இதனையறித்த ஜமால் ஹிராணி, தனது கூட்டாளிகள் தன்னை ஏமாற்றி வெளியேற்றி விட்டதாகவும், இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னை நீக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக, ரூ. 11 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ஹிராணி, தற்போது, ரூ. 45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு ‌தொடர்ந்துள்ளார்.

என் வழி தனி வழி என்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.


நாயகியாக மட்டும் வந்து ஆட்டம் போட்டுவிட்டு போகும் மற்ற மிஸ் இந்திய அழகிகளைப் போல் நான் இல்லை. என் வழி தனி வழி என்கிறார் பார்வதி ஓமனக்குட்டன். அதை செயல்படுத்தியும் இருக்கிறார். தனது ஸ்டார் இமேஜை பற்றி சிறிதும் கவலைப்படாமல், தனது பாலிவுட் அறிமுகப்படத்தில் ஆறு கதாநாயகிகளில் ஒருவராக களமிறங்குகிறார். கதாநாயகனே இல்லாத இந்த படத்தை விஷால் ஆர்யன் சிங் இயக்குகிறார். இது குறித்து பார்வதி கூறுகையில், மனம் சொல்வதை கேட்க கூடியவள் நான். உலக அழகி போட்டிக்கு தேர்வான சமயத்திலிருந்தே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது; ஆனால், எனக்கு கதை பிடிக்கவில்லை; தற்போது, இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது; இந்த படத்தில் வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வாழும் ஆறு பெண்கள் எப்படி ஒரே இடத்தில் சந்திக்கின்றனர் என்பது தான்

ரூ.1 கோடி ஆடையணிந்து பேஷனில் கலக்கிய ஸ்ருதிஹாசன்


நடிகர் கமல்ஹாசனின் மகள், பாலிவுட் நடிகை, இசையமைப்பாளர், பின்னணி பாடகி என பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஸ்ருதி ஹாசன் பேஷன் ஷோவில் ‌மாடல் அழகியாகவும் மேடையை வலம் வந்து கலக்கியிருக்கிறார். மும்பையில் இந்திய ஆடை தயாரிப்பு வாரம் 2009 விழாவை முன்னிட்டு நடந்த பேஷன் ஷோவில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார். ரூ.1 கோடி மதிப்பிலான ஆடையணிந்து கவர்ச்சி கன்னியாக மேடையில் பூனை நடைபோட்ட ஸ்ருதிஹாசனுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஸ்ருதியுடன் பாலிவுட் நடிகர் ஜயாத்கானும் பேஷன் நடை போட்டார். இவர்கள் தவிர ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த பேஷன்‌ ஷோவில் கலந்து கொண்டு கண்களுக்கு விருந்தளித்தனர்.

பீனிக்ஸ் பறவை போல இலங்கை

இலங்கைக்கு உதவ இலங்கைச் சிங்கப்பூரர்கள் தயார்
Mon, 19/10/2009
இலங்கையின் மேம்பாட்டுக்கு உதவ வெற்றிகரமான இலங்கைச் சிங்கப்பூரர்கள் தயாராக இருக்கிறார்கள். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ இலங்கையில் இவ்வாறு கூறினார். இலங்கையில் அமைதி நிரந்தரமாகி, சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கை வலுவடையும் பட்சத்தில் சுற்றுலா, கல்வி, வெளி நேரடி முதலீடு எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்று தாம் நம்வுவதாகவும் அவர் குறிப்பிட்டார். என்றாலும் இலங்கை எதிர்காலம் குறித்து அவர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை தெரிவித்தார். இலங்கைப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூரின் வெளியறவு அமைச்சர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் உலகப் புகழ் நெல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பிச் சென்றார். பழமையான தமிழர் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்ற யாழ்ப்பாண நூலகத்துக்குப் புத்தகங்களை கொடையாகத் தந்த அவர், “எரிக்கப்பட்டு மீண்டும் எழுந்து நிற்கும் இந்த நூலகத்தைப் போல, சாம்பலில் இருந்து உயிர்த் தெழும்பும் பீனிக்ஸ் பறவை போல இலங்கை தமிழ்ச் சமூகம் மீண்டும் உயர்ந்த நிலையை அடையும்,” என நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சரின் இலங்கை பயணம் நெடுகிலும் பல நல்ல அறிகுறிகள் புலப்பட்டன. அமைச்சர் திரு இயோ, யாழ்ப் பாண நூலகத்தில் குத்துவிளக்கு ஏற்றிய போது பக்கத்தில் இருந்த ஒரு கோவிலில் மணி அடித்தது. அமைச்சருடன் சென்றிருந்த சிங்கப்பூரின் பொதுத் தூதுவர் திரு கோபிநாத் பிள்ளை உட்பட அங்கிருந்த பலரும் இதை ஒரு நல்ல சகுனமாக மகிழ்ந்தனர். அமைச்சருடன் சென்றிருந்த டாக்டர் சி.ஆனந்தகுமார், “பல முறை இலங்கைக்கு பயணம் மேற் கொள்கிறேன். நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது பற்றி அரசாங்கம் யோசிப்பதை இந்தப் பயணத்தில் உணர முடிந்தது,” என்றார்.

Sunday, October 18, 2009

டால்டா பேபி

சமீபத்தில் ரூபாய் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தங்கங்களை தனியார் லைப்ரரி ஒன்றில் ஆட்டை போட்டடதாக சொல்லப்படும் செல்வராகவன் இயக்கத்தில் பருத்திவீரன் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தின் ரீலிஸ் தள்ளிப்போயிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவனைத் தொடர்ந்து தமன்னா ‌ஜோடியாக நடிக்கும் பையா பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கார்த்தி, தனது அடுத்த பட வேலைகளையும் கவனிக்கத் தொ‌டங்கி விட்டார். அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் கார்த்தி‌ ஜோடியாக நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

குடிமகன்களின் கொண்டாட்ட தீபாவளி

தீபாவளியை குடிமகன்கள் தமிழகம் முழுவதும் குதூகலமாகவே கொண்டாடியுள்ளனர். டாஸ்மாக் சரக்குகள் மூன்று நாட்களில் முற்றிலும் விற்றுத் தீர்ந்துள்ளன. இலக்கையும் தாண்டி, சரக்கு விற்பனை 200 கோடி ரூபாயையும் தாண்டி சக்கை போடுபோட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனையை இரட்டிப்பாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மது வகைகள் இல்லை எந்த குடிமகனும் அதிருப்தியாக திரும்பாத வகையில், ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ஐந்து லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைத்துக் கொள்ள கடை சூப்பர்வைசர்கள் மற்றும் ஏரிய சூப்பர்வைசர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களிடமிருந்து தேவையான சரக்குகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது. குடிமகன்கள் விரும்பும் சரக்குகள் எவை என ஏரியா வாரியாகவும், கடை வாரியாகவும் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அதற்கு ஏற்பவும், சரக்குகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு வழக்கமான சரக்கு சப்ளையுடன் மும்மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள், பீர் வகைகள் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளும், பீர் வகைகளில் 80 ஆயிரம் பெட்டிகளும் விற்கப்பட்டன. சாதாரண நாட்களில் 50 கோடி முதல் 70 கோடி சரக்குகள் கொண்ட பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.டாஸ்மாக் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனையும் தமிழகம் முழுவதும் கனஜோராகவே நடந்துள்ளது. தீபாவளியன்று மட்டுமல்ல, நேற்றும் டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. குடிமகன்களின் கூட்டத்தால் பார்களும் களை கட்டின. கடந்த ஆண்டை விட சரக்கு விற்பனை இரண்டு நாட்களில் 100 சதவீதத்தையும் தாண்டிவிட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 100 கோடி ரூபாய் வரை மதுவகைகள் விற்பனையாயின. இந்த ஆண்டு, தீபாவளியை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டை விட விற்பனை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன. என்றாலும் அதுபற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அனைத்து மட்டத்திலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

என்னே முன்னேற்றம் ? தமிழகம் எதில் முந்துகிறதோ இல்லையோ குடிமகங்க நிறைய உருவாகிட்டாங்க .சில கடைகளில் வயது வித்யாசம் இல்லாமல் பதிமுன்று பதினைந்து வயது பையன்கள் குடித்தது மனதை நெருடியது.பெர்மிட் இருந்தால் தான் சரக்கு தர வேண்டும் என்கிற சட்டம் இன்னமும் இருக்கிறதுதானே ?

-நக்கல் நாகராசன்

அல்வா கொடுத்துள்ள சினிமா டைரக்டர்

100 ரூபாய் பணம் கட்டி சென்னை கே.கே. நகரில் வாடகை நூல் ஒன்றில் சேர்ந்து ரூபாய் ஐந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை எடுத்த சென்ற கோடீஸ்வர டைரக்டர் வருடங்கள் ஆகியும் புத்தகத்தையும் தரவில்லையாம் .வாடகை பணத்தையும் தரவில்லையாம்.என்ன கொடுமைடா சாமி ?இப்படியும் செய்வார்களா ?

Saturday, October 17, 2009

இந்தியர் மூன்று பேருக்கு சிறை

லண்டன் : பிரிட்டனில் சிறுமியை பல ஆண்டுகளாக கற்பழித்து கர்ப்பமாக்கிய மூன்று இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரிட்டனில் கார்டிப் பகுதியில் இந்திய வம்சாவழியினர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த 27 வயதான பெண் கோர்ட்டில் சமீபத்தில் மனு செய்தார்.

இந்த பெண்ணின் தாயின் இரண்டாவது கணவர், இரண்டாவது கணவரின் தம்பி, தாய் மாமன் ஆகியோர், தன்னை ஐந்து வயதில் இருந்தே கற்பழித்து வந்தனர் என, புகாரில் தெரிவித்திருந்தார். 14 வயதில் இந்த பெண் கர்ப்பமடைந்தாள். இவளது தாய்க்கு இந்த விஷயம் தெரிந்த போது சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருந்ததால் கருவை கலைக்க முடியவில்லை. இந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததாக கூறி அக்கம் பக்கத்தினரை சமாளித்துள்ளார் சிறுமியின் தாய். தற்போது இந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது. தன்னை கற்பழித்தவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் என கூறியும், தனது தாய் அதை நம்பாமல் தன்னை கடுமையாக அடித்தாள் எனவும், இந்த பெண் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த கார்டிப் கோர்ட், "காசு கொடுக்காமல் சிறுமியை விபச்சாரியாக பயன்படுத்தி வந்துள்ளீர்கள்' என, மூன்று பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது.


அதுமட்டுமல்லாது, இந்த பெண் வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். இதற்காக தாயின் இரண்டாவது கணவருக்கு(51) 20 ஆண்டு சிறையும், இவரது தம்பிக்கு 15 ஆண்டு சிறையும், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு, "நான் தான் தந்தை' என ஒப்புக்கொண்ட தாய் மாமனுக்கு 12 ஆண்டு சிறையும் வழங்கப்பட்டுள்ளது. தாயின் இரண்டாவது கணவர், அவரது தம்பி ஆகியோர் உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் பிரிட்டனில் தங்கியிருப்பதால் தண்டனை காலம் முடிந்ததும் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

சபரிமலை மேல்சாந்தி


சபரிமலை மேல்சாந்தியாக ஆலப்புழாவை சேர்ந்த ஜி.விஷ்ணு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறம் கோயிலுக்கு மாதவன் நம்பூதிரி தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறந்துள்ளது. நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது.


சபரிமலை மேல்சாந்திக்காக தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேர் பெயர் துண்டு சீட்டில் எழுதபட்டு வெள்ளி பாத்திரத்தில் அடைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் குலுக்கல் நடைபெற்றது. இதில் ஆலப்புழா மாவட்டம் செறுகோல் பகுதியை சேர்ந்த ஜி. விஷ்ணு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோயிலுக்கு நடைபெற்ற குலுக்கல் தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த கே.சி. மாதவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இதில் சபரிமலை முதன்மை ஆணையர் ஜெயக்குமார், கேரள ஐகோர்ட் நியமித்துள்ள சிறப்பு பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன், சிறப்பு கமிஷனர் நீதிபதி ராஜேந்திரன்நாயர் , நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், பி.ஆர்.ஓ. முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகள் நவ.,16ல் பொறுப்பேற்பார்கள்.

ஆயிரம் மீட்டர் ஓடிய நடிகை

ஷம்மு. ராஜஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த தமிழ்ப் பெண். தசாவதாரம் படத்தில் சிறுவேடத்தில் நடித்த இவர், பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் மயிலு படத்தில் ஹீரோயினாக வளர்ந்தார். மலையன், காஞ்சிவரம் படங்களைத் தொடர்ந்து தற்போது, மாத்தியோசி'யில் பிசியாக இருக்கிறார்.

"சினிமா ஆசை எனக்கு எப்போது வந்தது என்றே தெரியாது. மூன்று வயதாக இருக்கும்போதே, "டிவி'யில் மாதுரி தீட்ஷித்தைப் பார்த்தால் பரவசமாகி விடுவேன். மாதுரி மாதிரி நானும் "டிவி'யில் வரவேண்டும் என அம்மாவிடம் அடம் பிடித்து இருக்கிறேன். நடிகை ஆசை எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் "தசாவதாரம்' படக்குழுவினர் அமெரிக்காவுக்கு வந்திருந்தனர். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு அதில் ஒரு வேடத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து மயிலு ஒப்பந்தமானேன். காஞ்சிவரம் படத்தில் தனது மகள் கேரக்டருக்கு என்னை பிரகாஷ்ராஜ் சிபாரிசு செய்தார்.

"தமிழ் சினிமாவின் சாதனையாளர்களாக உள்ள நபர்களிடம் பணிபுரிந்ததால், நிறைய கற்றுக் கொண்டேன். டைரக்டர் நந்தா பெரியசாமி இயக்கும் "மாத்தியோசி' படத்தில் நடித்து வருகிறேன். அமெரிக்காவில் வளர்ந்திருந்தாலும் நான் நடித்த படங்களில் எல்லாம் எனக்கு கிராமத்துப் பெண் வேடம்தான் கிடைத்தது. இதுகூட எனக்கு ஒருவித சவாலாகவே இருந்தது. அதன்பின் வந்த வாய்ப்புகள் எல்லாம் என்னை கிராமத்துப் பெண்ணாகவே பார்த்தன. கிராமத்து பாத்திரத்தை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கைக்கான அழைப்பாகவே அதை நினைத்துக்கொள்கிறேன். ஒரே விதமான பாத்திரத்தில் நடிப்பதில் விருப்பமில்லை. இனி கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கக்
கூடாது என முடிவுசெய்தேன். அந்த நேரத்தில்தான், டைரக்டர் நந்தா பெரியசாமி என்னைச் சந்தித்தார்.

அவர் சொன்ன "மாத்தியோசி' கதையைக் கேட்டதும், முடிவை மாத்தியோசி என எனக்குள் அலாரம் அடித்தது. காரணம், இதிலும் கிட்டத்தட்ட எனக்கு கிராமத்துப் பெண் வேடம்தான். இந்தப் படத்தில், ஹீரோவுக்கு சமமான பாத்திரம் எனக்கு இருந்தது. பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், நாடோடிகள்' போன்ற படங்கள் வரிசையில் இந்தப் படம் இடம்பெறும். மதுரையின் சுற்று வட்டார கிராம மக்களின் ஆதார வாழ்க்கையையும், வெளியுலகுக்குத் தெரியாத பல முகங்களையும் இந்தப் படம் சொல்லும்.
படத்தின் முதல்பகுதி பகலிலும், இரண்டாம் பகுதி இரவிலும் நடப்பது போல திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். குருகல்யாண் இசையில், பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை, டைரக்டர் மிஷ்கின் பாடியுள்ளார்.

"மதுரையின் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வட்டார மொழியைப் படிக்கவும், அப்பகுதி மக்களின் நடை, உடை, பாவனைகளை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளார் டைரக்டர் நந்தா பெரியசாமி. இதற்கான பயிற்சிக்காக ஹீரோக்கள் நால்வரும், அரைக்கால் டவுசரோடு அங்கு முகாமிட்டனர். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவங்களும் நடந்தன. படத்தில் இவர்கள், ஆறு காட்சிகளில் மட்டும்தான் பேண்ட் சர்ட் போட்டு வருவர். எனக்கோ, மொத்தம் மூன்றே மூன்று காஸ்ட்யூம்கள்தான். ரிஸ்கான காட்சிகளில் நடிக்கும் "டூப்' நடிகர், நடிகைகளுக்காக வாங்கப்பட்ட ஆடைகள் கூட, புத்தம் புதிதாக அப்படி இருக்கின்றன. அதற்குக் காரணம், டைரக்டர் எங்கள் மீது வைத்த அதீத நம்பிக்கைதான். படத்தின் சேசிங் காட்சிகளில், வெறுங்காலில் நாங்கள் 5 ஆயிரம் மீட்டராவது ஓடியிருப்போம்''

ஹாங்காங்கில் ஒரு பிளாட்டின் விலை ரூ.268 கோடி

ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட் ரூ.268 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பிளாட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள தீவுப் பகுதியில் இந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹெண்டர்சன் லேண்ட் டெவலப்மென்ட் இந்த குடியிருப்பை கட்டியது.அதில் உள்ள 5 படுக்கை அறைகளைக் கொண்ட டூப்ளக்ஸ் பிளாட் விற்பனை கடந்த வாரம் நடந்தது. 6,158 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டை ரூ.267 கோடியே 90 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்த ஒருவர், ஒப்பந்தமும் செய்து விட்டார். இந்த வீட்டின் ஒரு சதுர அடியின் விலை ரூ.4.35 லட்சம். இந்த குடியிருப்பில் அதிநவீனமான சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இந்த வீட்டை வாங்குவதற்கும் போட்டி அதிகரித்து வருகிறது

Friday, October 16, 2009

கோலிவுட்டில் இதென்ன கலாச்சாரமோ...?



மலையாள சினிமாவில் கல்யாணம் ஆனாலும் திறமைக்கு மதிப்பு கொடுத்து நடிக்க கூப்பிடுகிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் கல்யாணம் ஆகி விட்டால் கதாநாயகி வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என்று நடிகை கனிகா கூறினார். அமெரிக்கானில் சொந்த நிறுவனம், இந்தியாவில் சினிமா சூட்டிங் என்று அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் மாதம் இருமுறை பறந்து கொண்டிருக்கிறார் கனிகா.

கல்யாணத்துக்கு முன்பே கமிட் ஆன பழசிராஜா சூட்டிங்கை முடித்து விட்டு, அடுத்த பிரேக்கிற்காக காத்திருக்கும் கனிகாவிடம், அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்டால், செம கடுப்பாகிறார். மலையாளத்தில் எல்லாம் கல்யாணம் ஆனாலும் திறமைக்கு மதிப்பளித்து ஹீரோயினாக நடிக்க வருமாறு கூப்பிடுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கல்யாணம் ஆகி விட்டால்... அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கத்தான் கூப்பிடுகிறார்கள். இதென்ன கலாச்சாரமோ... என்று கோலிவுட்டை தாக்குகிறார் கனிகா. பைவ் ஸ்டார்ஸ் படத்தில் அறிமுகமான கனிகா இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் 15 படங்கள் முடித்துள்ளார் .

பெண்களை அழைத்து வந்த 11 பேருக்கு சிறை தண்டனை


மஸ்கட் :

ஓமன் நாட்டில், ஆள் கடத்தலில் தொடர்புடைய 11 பேருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து, வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி: பகரைனில் இருந்து ஓமன் வந்த பெண்களை தவறாக பயன்படுத்த முயன்றதாக, ஓமன் மற்றும் சிரியாவை சேர்ந்த 13 பேர் மீது சந்தேகிக்கப்பட்டது. அவர்கள், போலியான திருமண சான்றிதழை பயன்படுத்தி, அந்த பெண்களை தங்கள் மனைவி என கூறி அழைத்து வந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; 11 பேருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக, போலீஸ் மற்றும் சுங்கத் துறை ஐ.ஜி., மாலிக் அல்-மாமரி தெரிவித்தார்.


ஓமன் மக்கள் தொகையில், கால் பங்கு வெளிநாட்டினர் . ஆள் கடத்தலை எதிர்த்து சமாளிக்க உதவும் வகையில், அங்கு இணைதளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓமனில், கடந்த 2003ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஆள் கடத்தல் தடுப்பு சட்டத்தை கொண்டு வரப்பட்டது. இதன் படி, இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, 15 ஆண்டுகள் சிறை வரை தண்டனை மற்றும் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் ஆகியவை விதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |

Thursday, October 15, 2009

எம்.பி.,க்கள் குழு குறித்து விஜயகாந்த் குற்றச்சாட்டு


"இலங்கைக்கு எம்.பி.,க்கள் குழுவை அனுப்பி வைத்ததில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கைப்பாவையாக தமிழக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறை கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்கு எம்.பி.,க்கள் குழுவை அனுப்பி வைத்ததில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கைப்பாவையாக கருணாநிதி செயல்பட்டுள்ளார்.


இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்திய ராஜபக்ஷேவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள அத்தனை மனிதாபிமான அமைப்புகளும் கூறியுள்ளன. ஐ.நா., மனித உரிமை கமிஷன் முன் இன்னும் இப்பிரச்னை உள்ளது.ராஜபக்ஷே நரித்தனத்தோடு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி, தமிழகத்திலிருந்து ஒரு தூதுக்குழுவை அனுப்பச் சொல்லியுள்ளார்.


குழுவினர் வந்து பார்த்து திருப்தியடைந்து விட்டால் அதை வைத்து தான் மனித குலப் படுகொலையாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிவிடலாம் என்று ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளார். இதற்கு கருணாநிதி உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளார். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.



கேப்டன் இலங்கைக்கு ரூபாய் நாலாயிரத்து தொள்ளாயிரம் தான் . நீங்கள் உங்கள் கட்சி ஆட்கள்ளுடன் அதிபர் ராஜபக்சேயுடன் சந்திக்க அனுமதி பெற்று போக வேண்டியதுதானே ? படத்தில் தீயவர்களை துவம்சம் செய்யும் நீங்கள் இதை செய்வதை விட்டு விட்டு தலைவர் முதலமைச்சரை குறை சொன்னால் எப்படி ? நேரே பொய் வந்தால் நீங்கள் உங்கள் பார்வையை உண்மையை மக்கள் முன் எடுத்து வைக்கலாமே .

-நக்கல் நாகராசன்

மலேசியாவிற்கு பெண்ணை கடத்தி விற்பனை




மதுரை:

மலேசியாவிற்கு கடத்தப்பட்ட, திருமணமான பெண்ணை ஆஜர்படுத்தும்படி, திருப்புவனம் போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த, அப்துல் கபூர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:என் மகள் பிரோடஸ் பானுவுக்கும்(33), சாகுல் அமீது என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சாகுல் அமீது மலேசியாவில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.


கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மகள் என் வீட்டிற்கு வந்து விட்டார். பிப்., 23ல் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அலி ஜமால், என் மகளை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார். தப்ப முயன்ற மகளை தாக்கினார். திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போலீஸ் விசாரணையில், என் மகள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. மகளை மீட்டு ஆஜர்படுத்த வேண்டும், என குறிப்பிட்டிருந்தது.


மனு, நீதிபதிகள் பி.முருகேசன், சி.எஸ்.கர்ணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். அரசுத் தரப்பில், வக்கீல் சாமுவேல்ராஜ் ஆஜரானார். மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட பெண், போனில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு ஆஜர்படுத்தும்படி, போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை




இலங்கைத் தமிழர்களை விரைவில் குடியமர்த்துவோம்

இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களை அவர்களின் சொந்தப்பகுதிகளில் மீண்டும் குடியமர்த்துவதே தமது முன்னுரிமை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருக்கிறார். ஆனால் அங்கு விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருக்கும் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே இது சாத்தியம் என்று தம்மைச் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் அவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான எவ்விதத் தீர்வும் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று 10 நாடாளு மன்ற உறுப்பினர்களிடமும் அவர் தெரிவித்ததாக ‘எக்ஸ் பிரஸ் பஸ்’ செய்தி குறிப்பிட்டது. அதேவேளையில் இந்தத் தீர்வானது தமது அண்டை நாடான இந்தியாவுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். இப்பிரச்சினையில் இலங்கைத் தமிழர்களில் 65 விழுக்காட்டினர் கொழும்பில் தங்கியிருப்பதை இலங்கை அதிபர் சுட்டிக் காட்டினார். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபரின் சகோதரர், ஆலோசகர் மற்றும் அகதிகளைக் குடியமர்த்தும் நடவடிக்கைக் குழுவின் தலைவருமான பாசில் ராஜபக்சே, இரண்டு நாட்களில் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்ககைள் எடுக்கப்படும் என்று சொன்னார். அந்த முகாம்களிலிருந்து கூடுதலான அகதிகள் வெளியேற்றப்படுவர் என்றார் திரு பாசில். முன்னதாக தமிழ் அகதி களைக் மறு குடியமர்த்தும் பணி மெதுவாக நடைபெறுவது தங்களுக்கு கவலை அளிப்பதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். இதற்கிடையே, இலங்கைக்குச் சென்றுள்ள தமிழக நாடாளு மன்றக் குழு உறுப்பினர்கள் இந்த வருகைக்குப் பின் தங்கள் மனோபாவத்தில் ஒரு ஆக்க பூர்வமான மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறியதாக மற்றொரு செய்தித் தகவல் தெரிவித்தது. இந்தச் சந்திப்பு நட்பார்ந்த முறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் திருமா வளவனைக் காட்டி, கனி மொழியிடம் பேசிய ராஜபக்சே, இவர் (திருமாவளவன்) பிரபா கரனின் நெருங்கிய நண்பர். நல்ல நேரம் பிரபாகரனின் கடைசிக்காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார். இல்லையென்றால் இவரும் தொலைந்து போயிருப்பார் என்று கூற திருமாவளவன் அமைதியாக சிரித்தபடி இருந்தாராம் என்று தட்ஸ் தமிழ் குறிப் பிட்டது.

சென்னை :

"காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்' என, முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:


இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக செல்வா உயர்த்திய கொடி தாழ்ந்தது ஏன்? அது மீண்டும் பறக்குமா?
"ஈழம்' என்ற எக்காள முழக் கம், சதியினால் தூண்டி விடப் பட்ட சகோதர யுத்தங்களாக மாறி, இறுதியில் ஈன கானமாக ஒலித்து, இன்று நமது கவலைக் குக் காரணமாயிற்று. அக்கொடி கட்டாயம் மீண்டும் பறக்கும். காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லாரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்.


இலங்கை சென்றுள்ள எம்.பி.,க்கள் குழு, உங்களைத் துதி பாடும் குழு என்றும், தமிழர்களை ஏமாற்றுவதற்கான திட்டம் என்றும், இந்த ஏமாற்று வேலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எந்த முயற்சி எடுத்தாலும், அது அவருக்குப் பிடிக்காது. அங்கே பிரச்னை தொடர வேண்டும்; தமிழர்கள் அவதிப்பட வேண்டும்; அதை வைத்து இவர், மத்திய மாநில அரசுகளைக் குறை கூற வேண் டும் என்பதுதான் அவரது ஆசை.நம்மைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர் வாழ்வில் எப்படியாவது நிலையான ஒளி வீச வேண்டும்; அகதி முகாம்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும்; நிம்மதியுடன் வாழ வேண்டும்.நமது எம்.பி.,க்கள் குழு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்து, தமிழர்கள் அவர்களுடைய வசிப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


இதற்கு முன்னுரிமை அளிக் கப்படும்; இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இந்தியாவும் அந்த அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜபக்ஷே கூறியுள்ளார். நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து கொண்டு தான் வருகிறோம்.இலங்கைத் தமிழர்களிடம் நான் எந்த அளவிற்கு அக்கறை உள்ளவன் என்பதை தந்தை செல்வா, சந்திரஹாசன், அமிர்தலிங்கம், மங்கையர்கரசி, சேனாதி ராஜா, ஸ்ரீசபாரத்தினம், முகுந்தன், பத்மநாபா, பேபி என்ற சுப்பிரமணியம், ஆண் டன் பாலசிங்கம், தொண்டைமான் போன்றவர்கள் நன்கறிவர்.என் பொதுவாழ்வில், இலங்கைத் தமிழர்களுக்காக என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை, இலங்கைத் தமிழர்கள் நன்கு அறிவர்; ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஏமாற்றும் செயல் என்பதையும் அறிவர்.


மத்திய அமைச்சர் அழகிரி உஸ்பெகிஸ்தான் தூதருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்காக அவர் பதவி விலக வேண்டுமென சுப்பிரமணியசாமி சொல்லியிருக்கிறாரே?
அது ஒன்றும் சிபாரிசுக் கடிதம் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாடு செல்லும் போது, தேவையான உதவிகளைச் செய்து தர, அந்த நாட்டில் உள்ள நமது தூதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு அறிமுகக் கடிதம்.அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள், அந்த பயணமே மேற்கொள்ளவில்லை. அமைச்சர் அழகிரியின் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற செயல்பாடு அதிகமாக இருப்பதால், இது போன்ற கடிதங்கள் கொடுப்பது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கலாம். இது ஒரு சாதாரண நடைமுறை என, வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.


விவசாயிகளுக்கு 3,000 ஏக்கர் நிலம் கூட வழங்கப்படவில்லை என்று வரதராஜன் பேசியிருக்கிறாரே?
இதுவரை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்த அரசைப் பார்த்து கேள்வி கேட்கும் வரதராஜன், சிறுதாவூரில் ஆக்கிரமிக்கப் பட்ட ஏழை விவசாயிகளின் நிலத்தை மீட்டுக் கொடுப்பேன் என முழக்கமிட்டதை மறந்து விட்டாரா? வேறு கட்சிகள் ஈடுபடட்டும் என விட்டு விட்டாரா?இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜோடி போட




கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் பரபரப்பாக பேசப்படும் கேரக்டர்களில் ஒன்று ரிப்போர்ட்டர் கேரக்டர். படத்தில் ரிப்போர்ட்டராக நடித்த அனுஜா ஐயர், சிவி
என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முதல் முதல் முதல் வரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுஜா அந்த படங்களில் எல்லாம் ‌பேசப்படவில்லை. ஆனால் உன்னைப்போல் ஒருவனின் ரிப்போர்ட்டராக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

தற்போது அவருக்கு சிம்புவின் வாலிபன் படத்தில் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

100 லட்சம் சம்பளமாம்.







மலையாள படவுலகில் அறிமுகமானபோது 60 ஆயிரம் கூ‌ட சம்பளம் வாங்காத நயன்தாரா, தமிழிலும், தெலுங்கிலும் கொடிகட்டி பறந்து ஒரு கோடிக்கு ‌மேல் சம்பளம் வாங்கினார். இப்போது மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து கன்னடத்திற்கு போயிருக்கும் அம்மணிக்கு அங்கு 100 லட்சம் சம்பளமாம். ரொம்பவும் சிறிய பட உலகமான கன்னட பட உலகில் இத்தனை சம்பளம் நயனுக்கு தரக் காரணம் கன்னடரான பிரபுதேவாவின் காதலி நயன் எனும் கிரேஸ்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா ?

'யூரோ' முந்துகிறது : மாறிவரும் உலகிற்கு இது ஓர் அடையாளம்







பொருளாதார மந்த நிலை பாதிப்பு, பிரிட்டனை அதிகம் பாதித்திருக்கிறது. அமெரிக் காவை விட, ஜெர்மனியை விடவும் அதிகம் பாதித்திருக் கிறது. அதன் அடையாளமாக, இதுவரை மிகவும் கவுரமாக கருதப்பட்ட பிரிட்டன் கரன்சியான பவுண்ட் ஸ்டெர்லிங், சற்று மதிப்பு குறைந்து விட் டது.ஆனால், ஐரோப்பிய நாடுகளில் புழங்கும் "யூரோ ' கரன்சி முந்துகிறது.


கடந்த ஏப்ரல்மாதத்தில் இருந்தே "யூரோ' கரன்சி தலைதூக்க ஆரம்பித்தது. அதாவது ஒரு யூரோ கரன்சி கொடுத்தால், அதற்கு ஈடாக 90.89 பென்ஸ் சமம் என்ற நிலை ஏற்பட்டது. நூறு பென்ஸ் சேர்ந்தது ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்.அது மட்டும் அல்ல, அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், ஐரோப்பிய "யூரோ' ஜப்பான் "யென்' ஆகிய சில நாடுகளின் ஒட்டு மொத்த நாணய மதிப்பீட்டில் "யூரோ' கவுரவம் அதிகரித்தது. பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு சரிந்தது. கடந்த சில நாட்களாகப் பார்த்தால், நம் ரூபாய் மதிப் பில் ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு 74.50 ரூபாய் ஆகும். அதே போல ஒரு யூரோ மதிப்பு 66.75 ரூபாய் ஆகும்.இந்த இரு நாணயங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது இதனால் புரியும்.


பிரிட்டனின் பொருளாதார நிலையை சில நிபுணர்கள், "இந்த சூழ்நிலையில் பிரிட்டன் அரசு புன்முறுவல் பூத்தது என்றால், அது நிதிக் கொள்கையை கோட்டை விட முன்வந்திருக்கிறது' என்று அர்த்தம் என்கின்றனர்.கடந்த 1999 ஜனவரி முதல் தேதியில், பெரிய எதிர்பார்ப்புடன் யூரோ கரன்சி அறிமுகமானது. ஐரோப்பிய நாடுகளில் 16 நாடுகளின் மதிப்பு மிக்க கரன்சியாக இப்போது இருக்கிறது. பிரான்சு,ஜெர்மனி ஆகிய வலுவான நாடுகள் மட்டுமின்றி சுலோவேகியா போன்ற ஏழை நாடுகளும் இந்த அணியில் அடங்கும். பிரிட்டன் தன் பழைய கவுரவம் கருதி பவுண்ட் ஸ்டெர்லிங்கை கைவிட்டு, யூரோவுக்கு மாறவில்லை.ஆனால், இன்று பவுண்ட் ஸ்டெர் லிங்கிற்கு மவுசு குறைகிறது. மாறாக யூரோ புதிய கரன்சியாக எழுகிறது. அமெரிக்க டாலர் சற்று சரிவைச் சந்திக்கும் காலம்.இனி அமெரிக்க டாலர் முந்தைய தலைமையிடத்தை ஏற்க முடியாது.


ஆசியாவைப் பொறுத்தளவில் சீனாவின் யுவான் மற்றும் ஜப்பான் யென் முக்கியத்துவம் பெறுகிற காலம்.அதே போல ஐரோப்பிய நாடுகள் என்றால், பிரிட்டிஷ் பவுண்டா, அல்லது யூரோவா என்றால் யூரோவை நேசிக்கும் காலம் வந்து விட்டது.அதன் அறிகுறியாக, எண் ணெய் வள நாடுகளே டாலரை மட்டும் முன்னிறுத்தி, தங்கள் வர்த்தகத்தை இனி மையப்படுத்த விரும்பாமல், பல்வேறு பெரிய நாடுகளின் கரன்சியை ஒருங்கிணைத்து செயல்பட விரும்புகின்றனர். காலம் எப்படி மாறி விட்டது பாருங்கள் ! சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று மார் தட்டும் பிரிட்டன் இன்று சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.அதில் முக்கியமானது அவர்களின் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங் முகமதிப்பு தேய்வதாகும்.

யூரோ முதலில் அமெரிக்க டாலருக்கு வைக்க பார்த்து ஆப்பு ? அமெரிக்க சமாளிக்க பார்த்தாலும் இப்போது பௌண்டுக்கு வைத்து ஆப்பு !

-நக்கல் நாகராசன்

நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர்




வாஷிங்டன்:

அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி அதிபர் ஒபாமா இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கொடியவன் நரகாசுரன் கொல்லப்பட்ட மகிழ்வை இந்து, சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபத்திருநாளாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகர வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் , கூட்டமாக பர்சேஸ் செய்து வருகின்றனர். குழந்தைகள் பட்டாசு கடைகளை மொய்க்க துவங்கி விட்டனர்.


வேத மந்திரங்கள் முழங்கிட தீபம் ஏற்றினார் . இந்நிலையில் இது வரை இல்லாத விஷயமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது.

வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்தார். இவ்விழாவில் ஒபாமா நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற இந்திய அதிகாரிகள், இந்திய சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினர் . விழாவில் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.




இத்திருநாள் குறித்து ஒபாமா கூறுகையில் ; இந்து , சீக்கியர், ஜெயின். மற்றும் புத்த இனத்தவர்கள் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். கொடியவரை வீழ்த்திய மகிழ்வில் கொண்டாடடும் நாள் .

வெற்றியின் அடையாளமாகவும், அறிவின்மை என்ற இருளை அகற்றி ஒளியேற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல.

நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களை நினைத்து இத்திருநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இது வரை அமெரிக்க அதிபர்களாக இருந்த யாரும் தீபாவளி திருநாளை கொண்டாடியதில்லை. ஒபாமா தீபாவளி கொண்டாடிய விஷயம் இந்தியர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.


யாருங்க அந்த நம்மில் பலர் ? அமெரிக்கரா ? இல்லை அமெரிக்க வாழ் தமிழரா ? இல்லை பிற நாட்டிலிருந்து வந்து குடியேறி உள்ளவர்களாக ?

-நக்கல் நாகராசன்

Wednesday, October 14, 2009

obama really deserves Noble prize




ஆப்கானில் படைக் குறைப்பு இல்லை: ஒபாமா

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது ஒபாமா இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2001 செப் 11ந் தேதி ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் தொடங்கிய போர் எட்டாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இதுவரை சுமார் 800 அமெரிக்கப் படையினர் மாண்டுள்ளனர்.
ஆதலால் மிகவும் கவலையடைந்துள்ள ஒபாமா, மேற்கொண்டு இந்தப் போரை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. படை குறைத்தால் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள், தலிபான்கள் ராஜ்ய மாய்ப் போய்விடும் எனக் கூறப்படுகிறது.

ஒ இதனால்தான் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதோ ?

-நக்கல் நாகராசன்

speech of 2009


mms://www.millionitechnology.net/webtv/vivek speech on dinamalr protest.wmv

Please go to the link to hear the Padmashri awarded comedians serious video speech .

video courtesy : Mr.Nakkeran Gopal , Editor , Publisher Nakkeran group of puplications

புறக்கணிப்பு அறிக்கை அளவில்மட்டும் இருக்க கூடாது .

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய சத்யராஜ், சூர்யா, சேரன், விவேக் உள்ளிட்டவர்களின் செய்திகளை புறக்கணிக்க சினிமா பிரஸ் கிளப் முடிவு செய்துள்ளது. சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சங்கத்தின் மூத்த உறுப்பினர் மாவணன், தலைவர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர், குறிப்பாக சம்பந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இது தொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி ‌பேசியது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

* எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் சம்பந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானிக்கிறது.

* பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா சத்யராஜ் ஆகியோர் தொடர்பான செய்திகளை புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து ‌வேண்டுகோள் வைப்பது.

* இந்த பிரச்னை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக் குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

* நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக், அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும், அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது.

கூட்ட முடிவில் அமைப்பின் பொருளாளர் ராமானுஜம் நன்றி கூறினார்.

ஜாக்சன் ஆல்பத்தில் திருட்டு பாடல் * அமெரிக்க பாடலாசிரியர் புகார்



லாஸ் ஏஞ்சல்ஸ் :

சமீபத்தில் காலமான பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின், "திஸ் இஸ் இட்' என்ற ஆல்பம், தான் எழுதிய பாடலில் இருந்து தயாரிக்கப்பட்டது என, பிரபல ஆங்கில பாடலாசிரியர் பால் ஆங்கா தெரிவித்துள்ளார்.


கடந்த 50 மற்றும் 60ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பிரபல பாடலாசிரியராக இருந்தவர் பால் ஆங்கா. பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இவருடைய பாடலில் பல ஆல்பங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் ஜாக்சன் இறந்த பிறகு அவர் தயாரித்த, "திஸ் இஸ் இட்' என்ற ஆல்பம் வெளியிடப்பட்டது."இந்த ஆல்பத்தில் வரும் பாடல்கள், தன்னுடைய பாடலை திருடி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆல்பத்தின் விற்பனையில் 50 சதவீத பங்கை, மைக்கேல் ஜாக்சனின் சொத்துக்களை நிர்வகிப்பவர்கள், தனக்குத் தர வேண்டும்' என, பால் ஆங்கா கோரியுள்ளார்.


கடந்த 1983ம் ஆண்டு பால் ஆங்கா எழுதிய பாடலை மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய ஆல்பத்தில் பயன்படுத்தியுள்ளதை, ஜாக்சன் உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


இதனை நாள் எங்கே போயிருந்தே நைனா ?

-நக்கல் நாகராசன்