
கோவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும், "தினமலர்' நாளிதழ் "ஸ்மார்ட் ஷாப்பர்' கண்காட்சி இன்று துவங்கி, நான்கு நாட்கள் நடக்கின்றன. தினமலர் நாளிதழ் - சாம்சங் இணைந்து நடத்தும், ஸ்மார்ட் ஷாப்பர் கண்காட்சியை, கொங்கு மண்டல மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது உண்டு.
ஷாப்பர்ஸ் கண்காட்சியில், ஏதாவது வித்தியசமான புதுமையான அம்சங்கள் இடம் பெறுவதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். நிறைய பொழுது போக்கிற்கும், குழந்தைகளை குதூகலப்படுத்தவும், சுவையான உணவுக்கும் மட்டுமின்றி, மனதிற்கு நிறைவான ஷாப்பிங்கும் உண்டு.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள கொடீசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நடக்கும் பிரம்மாண்ட கண்காட்சியை, இன்று காலை 10.30 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி துவக்கி வைக்கிறார். இன்று முதல் நான்கு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி, ஜன.,26ல் நிறைவு பெறுகிறது.
ஒவ்வொரு நாளும், காலை முதல் மாலை வரை நிதானமாகவும் பொறுமையாகவும் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்த்து வாங்க பொருட்கள் ஏரளமாக உள்ளன. குடும்பத்தோடு ஷாப்பிங் வந்து மகிழலாம். அதோடு, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தனி அரங்கமே உண்டு.
பெண்களுக்கு, மைதிலி அழகு பயிற்சி, மருத்துவ ஆலோசனை, மெஹந்தி எல்லமே இலவசமாக அளிக்கின்றனர்.
குடும்பத்தோடு இணைந்து விளையாட, "மாஸ்' விளையாட்டு, இடம் பெறுகிறது.
கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகள் இடம் பெறுகின்றன. அரோவனா, பேரட் பிஷ், ஆஸ்கர், டிஸ்கஸ், பிளவர் ஹார்ன் என பல்வேறு வகையான பொருட்கள் இடம் பெறுகின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் பவுலிங் மெஷின், மணிக்கு 120 கி.மீ.,வேகத்தில் பந்து வீச உள்ளது. எதிர்கொண்டு இதை "சிக்சர்' ஆக மாற்றும் திறன், உங்கள் கையில் உள்ளது. டாட்டூஸ், ஜக்லர்ஸ், கேலிச்சித்திரம், பாட் கேம் இன்னும் பல சாகச சர்க்கஸ் நிகழ்ச்சிகள், இடம் பெறுகின்றன.
குல்மஹார், அடினியம், போன்ற 50 வகையான போன்சாய் மரங்கள் ஒரு அடி உயரமே உள்ள காய்த்து குலுங்கும் மரங்கள் என, அதிசய மரங்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு இலவச பலூன் உண்டு.
இவையெல்லாம் தவிர, நாவுக்கு சுவையான மனதிற்கு இனிமையான உணவு வகைகளும் இடம் பெறுகின்றன.
திண்டுக்கல் தலப்பா கட்டு நாயுடு பிரியாணி, நாட்டுக்கோழி வறுவல், கரண்டி ஆம்லெட் எல்லாம் "தூக்கலாக' இருக்கும். ராஜஸ்தான் ஸ்பெஷல், மைசூர் ஸ்பெஷல், கேரள மீன் வகை போன்ற உணவு வகைகள் நான்கு நாட்களும் அசத்தலான உணவும் உண்டு.
இந்த ஸ்மார்ட் ஷாப்பர் கண்காட்சியை, சென்னை ஆர்.எம்.கேவி., ஆச்சி மசாலா, ஆதவன், ஜே.எம்.டி., போன்ற நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
மாலையில் வசந்த்தின் "மேஜிக் ஷோ' நடக்கிறது. ஷாப்பிங் செய்வதில் ஒரு புதுமையான அனுபவம், உங்களுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment