Pages

Friday, January 22, 2010

கேரளாவுக்கு உலகின் முதல் இடம் - தற்கொலையில் ?


"உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களில், கேரளாவில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்" என, மாநில சிறைத்துறை டி.ஜி.பி., டாக்டர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம், பி.எஸ்.என்.எல்., நடத்திய கருத்தரங்கில், சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி., டாக்டர் அலெக்சாண்டர் ஜேக்கப் " தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை, உலகில் சராசரியாக, ஒரு லட்சம் பேரில் எட்டாகவும், இந்தியாவில் ஒன்பதாகவும், கேரளாவில் இது, 36 ஆகவும் உள்ளது.
கேரள மாநிலத்தில், ஆண்டுக்கு பத்தாயிரம் பேர், தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் 15 பேரில் ஒருவர் இறக்கிறார். அதாவது, ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம் பேர், தற்கொலைக்கு முயலும்போது, பத்தாயிரம் பேர் இறக்க நேரிடுகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூறுநாடு கிராமத்தில், அதிகளவு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு ஆண்டில் சராசரியாக 65 பேர், இங்கு தற்கொலை செய்துள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment